என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக கூடங்குளம் டி.டி.டி.ஏ. அந்திரேயா உயர்நிலைப் பள்ளி மற்றும் சண்முகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடப் பட்டது.
    • கல்லூரியின் தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக கூடங்குளம் டி.டி.டி.ஏ. அந்திரேயா உயர்நிலைப் பள்ளி மற்றும் சண்முகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடப் பட்டது.

    விழாவினை தலைமை தாங்கி தொடங்கி வைத்த கல்லூரியின் தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்க ராஜ் தாம்சன் அறிவிய லில் அமைதியை குறித்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி னார். போட்டிகள் அந்தந்த பள்ளி வளாகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் நடத்தப் பட்டது.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப் பட்டது. கூடங்குளம் டி.டி.டி.ஏ. அந்திரேயா உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ், சண்முக புரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் இசபெல்லா ஆகியோர் கலந்து கொண்ட னர். விழா முடிவில் மாணவி கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் பேராசிரி யர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்த னர்.

    • கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
    • மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது வழக்கம்.

    இந்த அருவிக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கடந்த 31-ந்தேதி மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது படிப்படியாக வெள்ளப்பெருக்கு குறைந்து வந்ததால், இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

    16 நாட்கள் தடைக்கு பின்னர் இன்று முதல் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம்.
    • சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகம், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • செல்வத்தின் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.60 லட்சம் வாங்கி தருவதாக அசாருதீன் கூறி வாங்கியுள்ளார்.
    • செல்வத்தின் ஆதார் கார்டு மூலமாக குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் அசாருதீன் பணம் பெற்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் முகம்மது அசாருதீன்(வயது 35). இவர் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவில் பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார் அசாருதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    முகம்மது அசாருதீனுக்கும், அவரது சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் டிரைவரான மகாராஜன் என்பவரது மனைவி பகவதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை மகாராஜன் கண்டித்ததால், பகவதி வீட்டை விட்டு வெளியேறி அசாருதீன் ஏற்பாட்டில் பேட்டை வி.வி.கே. தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மகாராஜன் எப்படியாவது முகம்மது அசாருதீனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இதையடுத்து டவுனை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் செல்வம், மற்றொரு நண்பருடன் சேர்ந்து மகாராஜன் நேற்று இரவு வி.வி.கே. தெருவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீட்டில் பகவதியிடம் முகம்மது அசாருதீன் பேசிக்கொண்டிருந்தார்.

    அவரை மகாராஜன் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    முகம்மது அசாருதீன் மீது ஏற்கனவே போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய டவுனை சேர்ந்த செல்வமும், அசாருதீனால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

    செல்வத்தின் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.60 லட்சம் வாங்கி தருவதாக அசாருதீன் கூறி வாங்கியுள்ளார். ஆனால் ரூ.14 லட்சம் மட்டுமே செல்வத்திடம் ஒப்படைத்துள்ளார்.

    மேலும் செல்வத்தின் ஆதார் கார்டு மூலமாக குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் அசாருதீன் பணம் பெற்றுள்ளார். அந்த விவகாரத்தில் செல்வம் சமீபத்தில் கைதாகி சிறைக்கு சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகாராஜனுடன் சேர்ந்து அசாருதீனை செல்வம், அவரது மற்றொரு நண்பர் கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய மானவராக கருதப்படும் மகாராஜனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை டவுன் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (39), பாளை சிவந்திபட்டி நடுத்தெருவை சேர்ந்த மூர்த்தி என்ற கார்த்திகேயன் (24), பாளை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி (25), சபரி மணி (23) ஆகிய 4 பேர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    • டாக்டர் லயனல்ராஜ் நீரழிவு நோயினால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பேசினார்.
    • மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பயிற்சி மாணவர்கள் மனித சங்கிலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

     நெல்லை:

    நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரழிவு நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி வண்ணார்பேட்டையில் உள்ள மருத்துவமனை முன்பு நடைபெற்றது. இதில் மாநகராட்சி மருத்துவ அலுவலர் சரோஜா, இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளை நிர்வாகிகள் சுப்பிரமணியன் , முகம்மது இப்ராகிம், பிரபுராஜ், அபூபக்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியின் போது நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் லயனல்ராஜ் நீரழிவு நோயினால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பேசினார். மனித சங்கிலி பேரணியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை கண் விழித்திரை பிரிவு மருத்துவர்கள் நாசிக் ஹசன், பிருந்தா, குஷி அகர்வால் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி மாணவ மாணவிகள் , பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.

    • அபிநயா என்ற மாணவி கோவையில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
    • 200 மீட்டர் ஓட்டத்தில் 24.16 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ஏ.ராஜராஜன் நாடார் மகள் ஆர்.அபிநயா என்ற மாணவி கோவையில் நடைபெற்ற 38-வது தேசிய இளையோருக்கான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 1,000 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் 200 மீட்டர் ஓட்டத்தில் 2012-ம் ஆண்டு 24.28 வினாடிகளில் கடந்த சாதனையை தற்போது 24.16 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாணவி ஆர். அபிநயா நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைமை அலுவலகத்திற்கு சென்று நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். மாணவியை, சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், துணை செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார், நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.வைத்திலிங்கம் நாடார், எஸ்.காமராஜ் நாடார், எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார், எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர் நாடார், பி.ரகுநாதன் நாடார் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

    • குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பார்வையற்றோர் இன்னிசைக் குழு சார்பாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பாடகர்களும், இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் தின பாடல்கள், விழிப்புணர்வு மற்றும் தத்துவப் பாடல்கள் பாடி பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

    நிகழ்ச்சியில் திருக்குறள் ஓப்புவித்தல் மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை பள்ளித் தாளாளர் - முதல்வர் மணி அந்தோணி தலைமையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் பாண்டி மயங்கி கிடந்தார்.
    • 2 மாதங்களுக்கு முன்பு பாண்டியின் மனைவி கோமதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி உருண்டைகல் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 79). இவர் இன்று அதிகாலை அவரது வீட்டில் முன்புள்ள திண்ணையில் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    தற்கொலை

    அதனை அந்த வழியாக அந்த அவரது சகோதரர் பார்த்து அவரை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாண்டியின் மனைவி கோமதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் பாண்டி சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

    அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட பாண்டிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் நம்பிராஜன் நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    • குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
    • நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.

    குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையின் முக்கியவத்துவம் குறித்து சிறு நாடகம் மூலம் அறிவுறுத்தப்பட்டது. நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெருமாள்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டு களை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து பராமரிப்பும் இல்லாததால் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் குண்டும், குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்கள் சிதறி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிப்படை ந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் சிக்கி கொள்வதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகனங்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

    இந்நிலையில் தற்போது களக்காடு பகுதியில் பெய்து வரும் மழையினால் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இதன் வழியாகவே பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து காணப்படும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பெருமாள்குளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை வலியுறுத்தி பெருமாள்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காட்வின் டைட்டஸ் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளார்.

    • பாபநாசம் அணை 97.05 அடியாக உள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழை பெய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வடகிழக்கு பருவமழை வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் நேற்று பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் சற்று பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 4.20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 3.40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணை 97.05 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 360 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 116.50 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 66.15 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ள நிலையில், சில நாட்களாக மழை பெய்யாததால் நீரின் அளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் இருப்பதால் விவசாயிகள் பிசான பருவ சாகுபடியை தொடங்கி உள்ளனர். நெல் நடவு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழை பெய்யவில்லை. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் மிதமாகவே இருக்கிறது.

    கடனா அணை நீர்மட்டம் 76 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 78.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.59 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • கடற்கரையில் 5அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து சிவ பூஜை.
    • பசுமை சித்தர், வைத்தியலிங்க சுவாமி தலைமையில் நடைபெற்றது.

    உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டியும், நல்ல பருவ மழை பெய்ய வேண்டியும், கந்த சஷ்டி திருவிழா மிக சிறப்பாக நடைபெற வேண்டி தீர்த்தமலையை சேர்ந்த பசுமை சித்தர் என்று அழைக்கப்படும் வைத்தியலிங்க சுவாமி தலைமையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 5அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து சிவ பூஜை செய்யப்பட்டது.

    ×