என் மலர்
திருநெல்வேலி
- திருமணத்திற்கு பின் ஆறுமுகமும், ஜெயந்தியும் மும்பையில் வசித்து வந்தனர்.
- ஜெயந்தியும், ஆறுமுகமும் பிரிவதற்கு பெருமாள் தான் காரணம் என வேல்கணேசன் கருதினார்.
களக்காடு:
களக்காடு வியாசராஜபுரம் சேனையர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 56). தொழிலாளி. இவரது சகோதரி நம்பியம்மாள் மகன் ஆறுமுகத்திற்கும், அதே தெருவை சேர்ந்த முருகன் மகன் வேல்கணேசனின் (39) தங்கை ஜெயந்திக்கும் திருமணம் நடந்தது.
முன்விரோதம்
திருமணத்திற்கு பின் ஆறுமுகமும், ஜெயந்தியும் மும்பையில் வசித்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடக்கிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பிரிந்தனர். ஜெயந்தி களக்காடு வந்து தனது தாயார் வீட்டின் அருகே தனியாக வசித்து வருகிறார்.
ஜெயந்தியும், ஆறுமுகமும் பிரிவதற்கு பெருமாள் தான் காரணம் என வேல்கணேசன் கருதினார். இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலை யில் நேற்று பெருமாள் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
அரிவாள் வெட்டு
அப்போது அங்கு வந்த வேல் கணேசனுக்கும், பெருமாளுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல் கணேசன், பெருமாளை அரிவாளால் வெட்டினார். இதனால் காயமடைந்த பெருமாள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனை யில் அனுமதிக்கப்ப ட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக வேல் கணேசனை கைது செய்தனர்.
- குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
- பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நாங்குநேரியான் கால்வாயில் இருந்து படலையார்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறும் மறுகால் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இதனைதொடர்ந்து மறுகால் புதர் மண்டி கிடக்கிறது. குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறுகாலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் படலையார்குளம் நிரம்பியது. குளத்தின் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உபரிநீர் வெளியேற வழியின்றி அருகில் உள்ள வட்டமொழி பத்து, மாணிக்கம்குளம் பத்து, மாவநேரி பத்து விளைநிலங்களுக்குள் குளத்து நீர் புகுந்தது.
இதனால் அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழைகள் நீரில் மூழ்கியது. 150 ஏக்கர் பரப்பளவிலான நெல், வாழைகள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே படலையார்குளத்தின் மறுகாலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரவும், தண்ணீர் வெளியேறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
- சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர்.
சத்தியமங்கலம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யங்குன்னு இடிப்பகுற்றி வனப்பகுதியில் கடந்த 13-ம் தேதி போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டை சமாளிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் 3 துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் என்கிற ரமேஷ், கேரளாவை சேர்ந்த சேர்மன் மற்றும் மனோஜ் என்கிற ஆஷிக், கர்நாடகாவை சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா ஆகியோர் என்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கேரளா போலீசார், கர்நாடகா நக்சல் தடுப்பு பிரிவு, தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். தமிழக-கர்நாடகா மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு தப்பி செல்லலாம் என்பதால் அங்குள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ் முருகன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து பர்கூர், அந்தியூர் வழியாக ஈரோடு செல்லக்கூடிய அனைத்து பஸ்கள் கார் மற்றும் சரக்கு வாகனங்களையும், தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு, அந்தியூர், பர்கூர் வழியாக மைசூரு செல்லக்கூடிய அனைத்து கார் பஸ் மற்றும் சரக்கு வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
மேலும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் போட்டோவை காண்பித்து இவர்களை பார்த்தால் போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதேபோல் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான கார பள்ளம் சோதனை சாவடி, பாரதி புரம், எல்ல கட்டை சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர். பண்ணாரி சோதனை சாவடி வழியாக ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான கர்நாடகா சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. எனவே இந்த வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.
- மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அணைகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 400 கன அடியில் இருந்து 1108 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 99.10 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வருவதால் இன்று மாலைக்குள் 100 அடியை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 113.45 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 67.50 அடியாக உள்ளது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 54 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 46 மில்லி மீட்டரும், சேர்வலாரில் 23 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அங்கு 62 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தனர்.
அதே நேரத்தில் ஓரமாக நின்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 84 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அம்பையில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் மேற்படிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 105.50 அடியாக உள்ளது. அந்த அணைப்பகுதியில் 31 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியே எட்டி ஒரு மாதத்திற்கும் மேலாக நிரம்பி வழிகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்று பாவுதல், தொழி அடித்தல், நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
- பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
- நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார்.
நெல்லை:
பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜின் மகன் பிரசாத் கண்ணன் (42). இவரும் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நாகராஜனுக்கும், அவரது அண்ணன் பால்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு முதுகு மற்றும் தலையில் பலத்த வெட்டு விழுந்தது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத் கண்ணனை கைது செய்தனர்.
- சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பானை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 20).
- நேற்று மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பானை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 20). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். சமீப காலமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் குணமாகவில்லை.
இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார். இசக்கிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மன வேதனையில் இருந்த இசக்கிமுத்து வீட்டின் கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிதம்பராபுரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
- இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும்.
வள்ளியூர்:
வள்ளியூர் கோட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வழிகாட்டுதலின் படியும் களக்காடு நகர்புற பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சிதம்பரா புரம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மின் மாற்றியின் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைப்பதோடு விவசாயம் சிறு குறு தொழில் வளர்ச்சியடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர் ஏர்வாடி உபகோட்டம் செல்வகார்த்திக், உதவி மின் பொறியாளர் களக்காடு நகர்புற பிரிவு நலீம் மீரான் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- நெல்லையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் காய்ச்சல் பரவுதலை தடுக்க தச்சநல்லூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் துணை மேயர் கே.ஆர்.ராஜு தலைமையில் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் காய்ச்சல் பரவுதலை தடுக்க மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர் அண்ணா சிலை முன்பு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு தலைமையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் சங்கர், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், ஜானகிராமன், வட்ட அவைத் தலைவர் முருகப்பெருமாள், வட்ட செயலாளர் பிரேம் கணேசன், தச்சை பகுதி துணை செயலாளர் சீனி, வட்டப்பிரதிநிதி நெல்லையப்பன், மாயாகிருஷ்ணன், மாரிசாமி, குத்தாலிங்கம் நிர்வாகிகள் மார்க்கெட் நயினார், காந்திமதி நாதன், சடகோபால் பகுதி சபா தலைவர் முத்து ரங்கராஜ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 110-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்ட திருவிழா தொடக்க நிகழ்ச்சி 18-ந்தேதி (சனிக்கிழமை)காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
- சூட்டுபொத்தை அடிவா ரத்தில் உள்ள வனவிநாய கருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டுபொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது.
கிரிவல தேரோட்ட திருவிழா
ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி யின் 110-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்ட திருவிழா தொடக்க நிகழ்ச்சி 18-ந்தேதி (சனிக்கிழமை)காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
சூட்டுபொத்தை அடிவா ரத்தில் உள்ள வனவிநாய கருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து மேருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறுகிறது.
ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 5 மணிக்கு சூட்டுப்பொத்தை கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.
தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞ ர்களின் பரதநாட்டியம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.
சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்க உள்ளனர். இத்தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்கின்ற னர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
23-ந்தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீ மஹா மேரு தியான மண்டபத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது. 26-ந் தேதி மாலை 5 மணிக்கு சூட்டுப்பொத்தை மலைமீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் நடைபெறுகிறது.
27-ந் தேதி காலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவல மும், அதைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு குருஜெயந்தி ஆராதனா மற்றும் அபிஷேகம் திரு விளக்கு பூஜையுடன் நடை பெறுகிறது. திருவிழா நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
கலைநிகழ்ச்சிகள்
10 நாட்கள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்து கிருஷ்ணா சித்திரக்கூ டத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை:
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி வள்ளியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் ஸ்டீபன் ஜோஸ் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை டவுன் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்து வரும் சுப்புலட்சுமி நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நெல்லை மாநகரத்திற்கும், நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
- இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரி உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் சரிந்து விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துவிட்டனர்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார்.
- இவரது மனைவி கவுரி. களக்காடு நகராட்சி கவுன்சிலராக உள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் செந்தில்வேல்.
கவுன்சிலர்
இவர் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கவுரி. களக்காடு நகராட்சி கவுன்சிலராக உள்ளார்.
இவர்களுக்கு சொந்த மான தோட்டம் சிதம்பரபுரம் ஊருக்கு அருகே உள்ள சத்திரங்காட்டில் உள்ளது, அதில் அவர்கள் வாழைகள் பயிர் செய்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்தில் வேலிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு, தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு பயிர் செய்யப் பட்டிருந்த 13 வாழைகளை வெட்டி அழித்துள்ளனர்.
மறுநாள் காலையில் தோட்டத்திற்கு சென்ற கவுரி வாழைகள் அழிக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வாழைகளை வெட்டி அழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






