களக்காட்டில் கணவன், மனைவி பிரிந்த தகராறில் தொழிலாளிக்கு வெட்டு- உறவினர் கைது

திருமணத்திற்கு பின் ஆறுமுகமும், ஜெயந்தியும் மும்பையில் வசித்து வந்தனர். ஜெயந்தியும், ஆறுமுகமும் பிரிவதற்கு பெருமாள் தான் காரணம் என வேல்கணேசன் கருதினார்.
களக்காட்டில் கணவன், மனைவி பிரிந்த தகராறில் தொழிலாளிக்கு வெட்டு- உறவினர் கைது
Published on

களக்காடு:

களக்காடு வியாசராஜபுரம் சேனையர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 56). தொழிலாளி. இவரது சகோதரி நம்பியம்மாள் மகன் ஆறுமுகத்திற்கும், அதே தெருவை சேர்ந்த முருகன் மகன் வேல்கணேசனின் (39) தங்கை ஜெயந்திக்கும் திருமணம் நடந்தது.

முன்விரோதம்

திருமணத்திற்கு பின் ஆறுமுகமும், ஜெயந்தியும் மும்பையில் வசித்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடக்கிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பிரிந்தனர். ஜெயந்தி களக்காடு வந்து தனது தாயார் வீட்டின் அருகே தனியாக வசித்து வருகிறார்.

ஜெயந்தியும், ஆறுமுகமும் பிரிவதற்கு பெருமாள் தான் காரணம் என வேல்கணேசன் கருதினார். இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலை யில் நேற்று பெருமாள் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.

அரிவாள் வெட்டு

அப்போது அங்கு வந்த வேல் கணேசனுக்கும், பெருமாளுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல் கணேசன், பெருமாளை அரிவாளால் வெட்டினார். இதனால் காயமடைந்த பெருமாள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனை யில் அனுமதிக்கப்ப ட்டார்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக வேல் கணேசனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com