என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சிவப்பு நிற பஸ்சின் பின்பக்க டயர் சைலஜாவின் தலையில் ஏறி இறங்கியது.
    • நடுரோட்டில் சைலஜா வின் உடல் கிடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளை டி.வி.எஸ். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது65).இவரது மனைவி சைலஜா (62).

    பஸ் மோதி விபத்து

    இவர்கள் 2 பேரும் சேரன்மகாதேவி அருகே உள்ள இடையன்குளத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை மொபட்டில் நெல்லை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.

    வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற அரசு விரைவு பஸ் புதிய பஸ் நிலையத்துக்குள் திரும்பியது. இதனால் சோமசுந்தரம் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார்.

    பெண் பலி

    அப்போது பின்னால் அமர்ந்திருந்த சைலஜா தடுமாறி பின்பக்கமாக ரோட்டில் சாய்ந்தார். அப்போது அவர்களுக்கு வலது புறமாக சந்திப்பில் இருந்து புதிய பஸ் நிலை யத்துக்கு வந்த சிவப்பு நிற பஸ்சின் பின்பக்க டயர் சைலஜாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சோமசுந்தரத்திற்கு காயம் ஏற்பட்டது. மனைவி உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

    நடுரோட்டில் சைலஜா வின் உடல் கிடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சைலஜா உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை

    மேலும் சோமசுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த சைல ஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரது மகன் வினோத்குமார் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

    • அருணாச்சலம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் முத்து செல்வத்துக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேல செவல் செட்டியார் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 60). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 4-ந்தேதி அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த வேன் எதிர்பா ராத விதமாக அருணாச்சலம் மீது மோதி யதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மேலப்பாளையம் அருகே உள்ள சிவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து செல்வம் (36) என்பவரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் நடைபெ ற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட ஜே.எம். 5-வது நீதிபதி முரளிதரன் அளித்த தீர்ப்பில் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் முத்து செல்வத்துக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • ஆதிநாராயணனுக்கும், அவரது மனைவி விமலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
    • சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் அன்னசுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர்.

     களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள வேப்பன்குளம் மேலூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பி மனைவி அன்னசுந்தரம் (வயது 70). இவரது மகன் ஆதி நாராயணன். ஆதிநாராய ணனுக்கும், அவரது மனைவி விமலா விற்கும் (38) கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

    சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் (20) ஆகியோர் அன்ன சுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அன்னசுந்தரம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த விமலா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து அன்னசுந்தரத்தை கம்பால் தாக்கினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி விமலாவையும், அவரது மகன் கார்த்திக் கையும் தேடி வருகின்றனர்.

    • நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி யானது 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடர்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது.
    • மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் முனைவோரை உருவாக்குவது, கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி யானது 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடர்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது.

    மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் முனைவோரை உருவாக்குவது, அரசின் ஸ்டார்ட்அப் நிகழ்வில் பங்கேற்பது, லாபகரமான அறிவுசார் படைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.

    எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி கல்லூரி மாண வர்களுக்கு தொழில் முனை வோர் பயிற்சி மூலமாக தொழில் மானியம் பெறக் கூடிய சந்தர்ப்பங்களும், அதன் வாயிலாக புதிய தயாரிப்புகளை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் கிடைக் கிறது.

    கல்லூரியில் உள்ள 20 பயன்பாட்டு தொழிற்சாலை ஆய்வகங்கள் உள்ளடக்கிய இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் புதிய கண்டு பிடிப்புகளை தயாரித்து உருவாக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படு கின்றன. மேலும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் போட்டி, தேசிய அளவிலான போட்டி களில் பரிசுகள் வென்றுள்ள னர். ஆசிரியர்களும், மாணவர்களும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய அளவில் 3426 என்ஜினீயரிங் கல்லூரி நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற 142 கல்லூரிகள் பட்டியலில் நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி இடம் பெற்றுள்ளது.

    2018-ம் ஆண்டு முதல் எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற ஊக்கம் அளித்த பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், முதல்வர் வேல்முருகன், தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபால ராயன் மற்றும் தொழில் முனைவோர் துறை துணை தலைவர் ராஜகுமார், கன்வீனர் பேராசிரியர் பிரேம் ஆனந்த், ஒருங்கி ணைப்பாளர்கள், உதவி பேராசிரியர்கள் மாரி யம்மாள், மேரி சுமிதா, சங்கீதா, பாலாஜி, ஷிர்லி மிர்ட்டில், ராஜ பிரியா, சுப்புலட்சுமி, சூரிய பிரபா, ஆர்த்தி உள்ளிட் டோரை ஸ்காட் கல்வி குழும கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • மாதவன் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த ஆனந்த் கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.
    • இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அடுத்துள்ள சுந்தர பாண்டியபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன். இவரது வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த வேல்பாண்டி மகன் ஆனந்த் (22) கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கனகராஜத்தை தாக்கினாராம். மேலும் அவரது கணவர் மாதவனை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன், அருணாசலம் மகன் மனோகரன் ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • லதா தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
    • ஆட்டோ மோதியதில் லதா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மனைவி லதா(வயது 42). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    நேற்று மாலை லதா தனது மாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு அழைத்து சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். வீட்டுக்கு அருகே மெயின்ரோட்டில் மாட்டை பிடித்துக்கொண்டு வந்தபோது எதிரே வந்த ஆட்டோ திடீரென சத்தம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதில் மாடு மிரண்டு நடுச்சாலைக்கு சென்றது. அதனை பிடிக்க லதாவும் நடு ரோட்டுக்கு சென்ற நிலையில், எதிரே வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. அதில் அவர் சாலையோரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். அதே நேரத்தில் மாடு மீது மோதியதில் ஆட்டோவும் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரை ந்து சென்று லதா வை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோ தனை க்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டத்தில் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.
    • அதிகபட்சமாக நாங்குநேரியில் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மூலக்கரைப்பட்டியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பருவமழையால் அதனை ஒட்டி அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் விவசாய பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பாபநாசம் அணையின் நீர்மட்டத்தை பெரிதும் எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் இந்த அணையின் மூலமாகத்தான் நெல்லை மட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்தாலே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 100.10 அடியாக உள்ளது. இந்த ஆண்டில் முதன் முறையாக அணை நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ள நிலையில் 2 மாவட்டங்களிலும் நெல் நாற்று நடவு செய்யும் பணியில் விவசாயிகள் இறங்கி உள்ளனர்.

    அதே நேரத்தில் அரசும் பிசான பருவ சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துள்ளதால் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர 118 கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை 68 அடியாக உள்ள நிலையில், அதில் இருந்தும் பெருங்கால் பாசன கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்மூலம் சுமார் 2,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 113 அடியை எட்டியுள்ளது. அந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 852 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 335 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    மாவட்டத்தில் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மூலக்கரைப்பட்டியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் களக்காட்டில் காட்டாற்று வெள்ளம் குறையவில்லை. இதனால் தலையணையில் வெள்ளம் அதிக அளவில் செல்வதன் காரணமாக இன்று 2-வது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக ராமநதி, கடனா நதி, கருப்பாநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில் நேற்று கருப்பாநதி அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதி கால்வாய்களில் வெள்ளம் அதிகமாக செல்கின்றது.

    ராமநதி, கருப்பாநதி ஆகிய அணைகளில் இருந்து விவசாய பணிக்காக தண்ணீர் நேற்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணை நீர்மட்டம் 107.50 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. ராமநதி அணை நீர்மட்டம் 78.25 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 75.80 அடியாகவும் உள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக பாபநாசம் அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • பாபநாசம் அணையில் இருந்து இன்று முதல் 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    நீர் திறப்பு

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக பாபநாசம் அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்று பாபநாசம அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்தனர்.

    விவசாய நிலங்கள்

    இதன் மூலம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் , கன்னடியான் கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலகால்வாய், கீழக்கால்வாய், தெற்கு, வடக்கு பிரதான கால்வாய்கள் ஆகிய கால்வாய்கள் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

    பாபநாசம் அணையில் இருந்து இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது . விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீர் இருப்பைக் கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மோட்டார் சைக்கிள் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • சுத்தமல்லியில் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    மாநில உரிமை மீட்புக்கான 2-வது தி.மு.க இளைஞரணி மாநாடு அடுத்த மாதம் சேலத்தில் நடைபெற உள்ளது. இதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக 188 மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரியில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நாங்குநேரிக்கு வந்த இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அறிவுறுத்தலின் பேரில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ் தங்கபாண்டியன், ஆரோக்கிய எட்வின், சுடலை கண்ணு மற்றும் நிர்வாகி சிவந்திபட்டி இசக்கி பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் பேரணிக்கு மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்து ரை, வீர பாண்டி யன், இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் முன்னாள் கவுன்சிலர் நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலை யணைக்கு வந்து செல்கின்றனர்.
    • கடந்த சில நாட்களாக களக்காட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலை யணைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக களக்காட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவிலும் கனமழை கொட்டியது. களக்காட்டில் 62.20 மில்லிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது, தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க களக்காடு வனத்துறையினர் இன்று தடை விதித்தனர். தலையணையை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    • அடிதடி வழக்கில் ஈடுபட்ட வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • வெங்கடேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    முக்கூடல்:

    முக்கூடல் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட தென் திருப்புவனம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர் கொலை, கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் முக்கூடல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னபூரணிக்கு புகார்கள் வந்தது. அதன்படி வெங்கடேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு, இன்ஸ்பெக்டர் அன்ன பூரணி வேண்டுகோள் விடுத்தார்.

    அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பர சன் பரிந்துரையின்படி, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், வெங்கடேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து வெங்கடேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கார்த்திகை மாதத்தை முன்னிட்டு களக்காடு அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    களக்காடு:

    களக்காடு ஆற்றாங்கரை தெருவில் அய்யப்பன் கோவில் உள்ளது. சபரிமலையில் உள்ளதை போலவே இங்கும் பூஜை முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு களக்காடு அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தின் முதல் தேதியான இன்று கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    களக்காடு ஆனந்த நடராஜர் திருவாசக குழுவினர் திருவாசக முற்றோதுதல் நடத்தினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம் இடம்பெற்றது. இரவு 7 மணிக்கு அய்யப்பனுக்கு அபிஷேகமும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடத்தப்பட்டது. அதன் பின் இரவு 9 மணிக்கு அத்தழ பூஜை நடந்தது. வருகிற 1-ந்தேதி கும்பாபிஷேக விழாவும், டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை விழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை களந்தை சபரிமலை அய்யப்பன் கோவில் அறக்கட்டளையினரும், அய்யப்ப பக்தர்களும் செய்து வருகின்றனர்.

    ×