வீட்டை எழுதி தர மறுத்த மூதாட்டியை தாக்கிய தாய்-மகன் மீது வழக்கு

ஆதிநாராயணனுக்கும், அவரது மனைவி விமலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் அன்னசுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர்.
வீட்டை எழுதி தர மறுத்த மூதாட்டியை தாக்கிய தாய்-மகன் மீது வழக்கு
Published on

 களக்காடு:

ஏர்வாடி அருகே உள்ள வேப்பன்குளம் மேலூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பி மனைவி அன்னசுந்தரம் (வயது 70). இவரது மகன் ஆதி நாராயணன். ஆதிநாராய ணனுக்கும், அவரது மனைவி விமலா விற்கும் (38) கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் (20) ஆகியோர் அன்ன சுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அன்னசுந்தரம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த விமலா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து அன்னசுந்தரத்தை கம்பால் தாக்கினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி விமலாவையும், அவரது மகன் கார்த்திக் கையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com