என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு
    X

    நாங்குநேரியில் பேரணிக்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது எடுத்த படம்

    நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

    • மோட்டார் சைக்கிள் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • சுத்தமல்லியில் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    மாநில உரிமை மீட்புக்கான 2-வது தி.மு.க இளைஞரணி மாநாடு அடுத்த மாதம் சேலத்தில் நடைபெற உள்ளது. இதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக 188 மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரியில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நாங்குநேரிக்கு வந்த இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அறிவுறுத்தலின் பேரில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ் தங்கபாண்டியன், ஆரோக்கிய எட்வின், சுடலை கண்ணு மற்றும் நிர்வாகி சிவந்திபட்டி இசக்கி பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் பேரணிக்கு மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்து ரை, வீர பாண்டி யன், இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் முன்னாள் கவுன்சிலர் நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×