என் மலர்
திருநெல்வேலி
- ராஜகோபால் அதிகாலை 5 மணிக்கு மாணவியை பானாங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி உள்ளார்.
- அதன்பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ராஜகோபால் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளம், நடுத் தெருவை சேர்ந்தவர் ராஜ கோபால். இவரது மகள் வள்ளியூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 18-ந்தேதி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்ப தாக கூறியுள்ளார். இதை யடுத்து ராஜகோபால் அதி காலை 5 மணிக்கு மாணவியை பானாங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி உள்ளார்.
அதன்பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய ராஜகோபால் பல்வேறு இடங்களில் தேடி யும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து அவர் இது குறித்து மூன்ற டைப்பு போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- திசையன்விளை அருகே உள்ள செட்டியார்பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது.
- விழா நாட்களில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, கும்பாபி ஷேகம், அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள செட்டியார்பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் கணபதி ேஹாமம், யாகசாலை பூஜை, கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, கும்மியடி, வில்லிசை, மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடுதல், சுவாமி வீதி உலா, முளைப்பாரி ஊர்வலம், வானவேடிக்கை, கோலப்போட்டி, சேவாபாரதி சார்பில் சுமங்கலி பூஜை, அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
சிறப்பு நிகழ்ச்சியாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா தலைமையில் அனைவருக்கும் பகவத் கீதை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் சரவணகுமார், கந்தப்பழம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- வள்ளியூர் மின் கோட்டத்திற்குட்பட்ட களக்காடு, பணகுடி மற்றும் சங்கனான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
- களக்காடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடைபடும் .
வள்ளியூர்:
தமிழ்நாடு மின் வினியோக வள்ளியூர் பிரிவு செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வள்ளியூர் மின் கோட்டத்திற்குட்பட்ட களக்காடு, பணகுடி மற்றும் சங்கனான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடைபடும் . மேலும் மின்விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்ற வற்றை அகற்றி மின்பாதை யினை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
களக்காடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு,காடுவெட்டி, வடமலை சமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.
பணகுடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.சங்கனான்குளம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்குஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திசையன்விளை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரையிலும் கனமழை பெய்தது. நேற்று இரவிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் மலையையொட்டி அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த தொடங்கியது. மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 101 அடியை எட்டியது.
இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், இன்று அதன் நீர்மட்டம் மேலும் 2 அடி வரை உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 102.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 115.91 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,510 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்துக்காக 304.75 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் 18 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 68 அடியை கடந்த நிலையில், இன்று மேலும் 2 அடி அதிகரித்து 70.85 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 33.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 34.75 அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைக்கு வினாடிக்கு 167 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக திருக்குறுங்குடியில் பெய்த கனமழையால் அங்குள்ள பெரியகுளம் நிரம்பியது. ஒரு சில இடங்களில் வயல்களில் மழை நீர் தேங்கியது. களக்காட்டில் 3 வீடுகள் சேதம் அடைந்தன.
ராதாபுரத்தில் 67 மில்லிமீட்டரும், களக்காட்டில் 62,4 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 55 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 40 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 56 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாநகரில் பாளை, சமாதானபுரம், புதிய பஸ் நிலையம், முருகன்குறிச்சி, மார்க்கெட், வண்ணார்பேட்டை, சந்திப்பு, தச்சநல்லூர், டவுன், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்றும் கனமழை கொட்டியது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரை களையும் தொட்டப்படி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதையடுத்து திருக்குறுங்குடி மலையில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நம்பியாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருப்பதால் நம்பி கோவிலுக்கு செல்ல இன்றும் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதுபோல ஆற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் தணிந்ததும் மீண்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடி மூடப்பட்டு, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணை பகுதியில் தலா 12 மில்லிமீட்டரும், கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ஏற்கனவே குண்டாறு, கருப்பாநதி அணைகள் நிரம்பி விட்ட நிலையில் ராமநதி மற்றும் கடனா அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
நேற்று பெய்த மழையில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 77 அடியானது. 84 அடி கொண்ட ராமநதி 78 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு தலா 5 அடி தண்ணீர் வந்தாலே அவை நிரம்பிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடவிநயினார் அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
- சாலைகளில் மாடுகள் படுத்துக்கொள்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது.
- சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் என்பது வாடிக்கையாகி விட்டது.
அந்த காலகட்ட ங்களில் விவசாய பணிகள் மும்முர மாக நடைபெறும் என்பதால், மாடுகள் சாலைகளில் ஆங்காங்கே படுத்து க்கொள்கின்றன. அவ்வாறு அவை படுத்துக்கொள்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற உயிரிழப்பை தடுக்க மாநகராட்சி சார்பில் அபராதம் விதித்தல், மாடுகளை பிடிக்கும் பணி நடை பெற்றாலும், முழுமையான தீர்வு கண்டு பிடிக்க முடியாத காரணத்தினால் அவை மீண்டும் சாலைகளில் சுற்றித் திரிவதும், இதனால் உயிரி ழப்பு கள் நிகழ் வதும் தொடர்ந்து வருகிறது.
தற்போது மாநகராட்சிக்குட்பட்ட பாளை, மேலப்பாளையம் மற்றும் டவுன் மண்டல பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் நடுரோட்டில் நின்று கொண்டு போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது எனவும், அதனை பிடிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து மாநகர பகுதி முழுவதும் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டவுன் மண்ட த்தில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வாசு தேவன் ஆகி யோரின் வழிகாட்டுத லின்படி சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் ஊழியர்கள் மாடுகள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டவுன் ரதவீதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 8 மாடுகள் பிடிக்கப்பட்டு டவுன் போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள வார்டு அலுவலகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.இதே போல் மேலப்பாளையம் மண்டல பகுதிக்குட்பட்ட பெருமாள்புரத்தில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் மாடுகள் பிடிக்கப்பட்டன. அதனை உரிய அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் அவற்றை அருகன்குளம் கோசாலையில் ஒப்படைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். உரிமையாளர்கள் அந்த மாடு களை பெற்றுக் கொள்ள விருப்பப்பட்டால் மாநகராட்சிக்கு உரிய அபராத தொகை செலுத்திவிட்டு, மாடுகளை கோ சாலையில் பராமரித்ததற்கான தொகையையும் செலுத்திவிட்டு தான் இனி பெறமுடியும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- இந்திரா காந்தி உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- மழை பெய்த போதிலும், குடை பிடித்தபடி காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கொண்டா டப்பட்டது. இதனையொட்டி நெல்லை வண்ணார் பேட்டையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவல கம் முன்பு உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணி விக்கப்பட்டது. மழை பெய்த போதிலும், குடை பிடித்தபடி காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பிறந்தநாள் விழா கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிகளில் வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் வக்கீல் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முரளிராஜா, மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட பஞ்சா யத்து ராஜ் தலைவர் தனசிங் பாண்டியன், நிர்வாகிகள் உதயகுமார், கவிபாண்டியன், மகேந்திரன் உட்பட காட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செல்வி தண்ணீர் பிடிக்க வீட்டில் இருந்த மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார்.
- மின்சாரம் பாய்ந்ததில் செல்வி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
களக்காடு கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது22). இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன் திருமணமாகி 1 1/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை செல்வி தண்ணீர் பிடிப்பதற்காக அவர்களது வீட்டில் இருந்த மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். பின்னர் அதனை நகர்த்தி வைப்பதற்காக ஆப் செய்யாமல் கையில் தூக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் செல்வி தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்விக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் சப் -கலெக்டர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
- பெரியசாமி நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார்.
- சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது, முருகன் என்பவர் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் காசாளராக டவுன் மாதா கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் என்பர் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரையிலான விற்பனையை முடித்துக்கொண்டு அந்த பணத்தை தச்சநல்லூரில் வசிக்கும் உரிமையாளரான பெரியசாமி வீட்டில் கொண்டு ஒப்படைப்பது வழக்கம்.
அதன்படி நேற்று மதியம் பூ விற்ற தொகையான ரூ.1 1/4 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவர் தச்சநல்லூருக்கு புறப்பட்டார். அந்த பணத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் தச்சநல்லூர் செல்லும் வழியில் ஒரு கோவிலின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் சென்று டீ குடித்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருணாச்சலம், தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி வெளியே வந்த தச்சநல்லூர் துர்க்கையம்மன்கோவில் தெருவில் வசிக்கும் முருகன்(வயது 45) என்பவர் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் பூக்கடையில் இருந்து அவரை நோட்டமிட்டு முருகன் பின்தொடர்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் தேடி பார்த்த நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அவர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சில மணி நேரங்களில் திருடனை மடக்கி பிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- வாக்குவாதம் முற்றியதில் 2 பேரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
- ஒரு கட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
நெல்லை:
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 87-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 7 மணியளவில் ஒரு அமைப்பின் மகளிர் அணியின் மாநில நிர்வாகிகளான மதுரையை சேர்ந்த 2 பெண்கள் தங்களது ஆதரவா ளர்களுடன் மாலை அணிவிக்க வந்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் 2 பேரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதோடு அங்கிருந்த கார்களை அடித்து நொறுக்கினர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஒரு கட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பட்டாலியன் போலீசுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 2 தரப்பினரும் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை, தேரோட்டத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
- தேரோட்டத்தின் போது பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சூட்டுப்பொத்தை அடிவாரத்தில் முத்து கிருஷ்ண சுவாமி கோவில் கொண்டுள்ளார். முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை மற்றும் தேரோட்டத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டு விழா நேற்று காலை 6.30 மணிக்கு வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் மஹாமேரு மண்டபத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை நடைபெற்றது.
சிறப்பு பூஜை
இதில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா, ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் மற்றும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டா டப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி சித்திரகூடத்தில் எஸ்.எஸ்.என்.ரமேஷ், சவுமியா பிரஷாந்த் குழுவினரின் வீணாகானம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வருகிற நாட்களில் இரவு லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டியம், இசை சொற்பொழிவு, பக்தி இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தேரோட்டம்
வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தேரோட்டம் நிறைவு பெற்றதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 23-ந் தேதி காலை 10.15 மணிக்கு மஹாமேரு தியான மண்டபத்தில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது.
கார்த்திகை தீபம்
26-ந் தேதி சூட்டுபொத்தையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி காலை 5 மணிக்கு கிரிவல வழிபாடும் நடைபெறுகிறது. பின்னர் குருஜெயந்தி ஆராதனாவும் ,அபிஷேக திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- சேர்வலாறில் 12 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
- ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டே்டுகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நாலுமுக்கு எஸ்டேட்டில் அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சியில் 8 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 6 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அவற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்ம் நேற்று 100 அடியை எட்டிய நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 101 அடியை எட்டியுள்ளது. அணையில் 56.33 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 114.57 அடியை எட்டியுள்ளது. நேற்றைய அளவை விட 11/2 அடி உயர்ந்துள்ளது. இந்த அணைகளுக்கு இன்று காலை நிலவரப்பட்டி வினாடிக்கு 1068 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 404 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறில் 12 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 354 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 35 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.49 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 24 அடியாகவும், நம்பியாறு அணை நீர் மட்டம் 12.49 அடியாகவும், 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை 32 அடியாகவும் உள்ளது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்காக 80 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டத்தில் நாங்குநேரி, கன்னடியன் கால்வாய் பகுதி, அம்பை உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு மாநகர பகுதியில் மழை பெய்தது. பழைய பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றாலம் சாலையில் இருந்து வழுக்கோடை வரையிலும் மழையினால் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கொட்டிய மழைக்கு நடுவிலும் மின் ஊழியர்கள் இன்று அதிகாலை 2 மணி வரையிலும் போராடி பழுதை சரி செய்தனர்.
இன்றும் காலை 6 மணி முதல் மாநகரில் பரவலாக மழை பெய்தது. பாளை கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம், கிருஷ்ணா நகர், தியாகராஜநகர், என்.ஜி.ஓ. காலனி, புதிய பஸ் நிலைய பகுதி, டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் நேற்று மாலை 7 மணி முதல் கனமழை கொட்டியது. குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. சாத்தான்குளத்தில் 20.30 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர் ஆகிய இடங்களில் இரவில் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், இன்றும் காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. மணியாச்சி, வேடநத்தம் ஆகிய இடங்களிலும் சாரல் மழை பெய்து வருகிறது.
உடன்குடி மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியான குலசேகரன்பட்டினம், கல்லாமொழி, மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, பெரியபுரம் மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, கொட்டங்காடு, கந்தபுரம், நேசபுரம், செட்டியாபத்து, தண்டுபத்து, சீர்காட்சி, நயினார் பத்து, செட்டிவிளை, சிதம்பரபுரம், பிச்சிவிளை, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், வாகைவிளை, வேப்பங்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் விட்டு, விட்டு மழை விடிய, விடிய பெய்தது.
இன்றும் காலை 10 மணி அளவிலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் முக்கிய சாலைகள், தெருக்களிலும் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் பழைய கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்தன. உடன்குடி மேல பஜாரில் வேப்ப மரங்கள் முறிந்து விழுந்தன.
இன்று விடுமுறை தினம் என்பதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர். இதனால பஜார் வீதிகள் |வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் இப்பகுதியில் உள்ள அனைத்து குளம், குட்டைகள் முழுமையாக நிரம்பும், இதனால் இந்த ஆண்டு மீண்டும் விவசாய பணிகள் தொடர்ந்து செய்ய முடியும் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லை. ஆனாலும் புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமான அளவில் கொட்டுகிறது. விடுமுறை தினத்தையொட்டி அங்கு குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
அணை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 2 1/2 அடி உயர்ந்து 109 அடியை கடந்துள்ளது. கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் 76.30 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாகவும் உள்ளது.
- வ.உ.சிதம்பரனார் சிலைக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஞான திரவி யம் எம்.பி., துணை மேயர் ராஜு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செய லாளர் விஜிலா சத்யா னந்த், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சு மணன், மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.வி. சுரேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீர பாண்டியன், சிறுபான்மை பிரிவு முகமது அலி, மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் நவநீதன், மகளிர் அணி அனிதா, நிர்வாகிகள் வி.கே.முருகன், பழைய பேட்டை மணிகண்டன், தொப்பி மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






