என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tisasyanvilai"

    • திசையன்விளை அருகே உள்ள செட்டியார்பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது.
    • விழா நாட்களில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, கும்பாபி ஷேகம், அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள செட்டியார்பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் கணபதி ேஹாமம், யாகசாலை பூஜை, கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, கும்மியடி, வில்லிசை, மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடுதல், சுவாமி வீதி உலா, முளைப்பாரி ஊர்வலம், வானவேடிக்கை, கோலப்போட்டி, சேவாபாரதி சார்பில் சுமங்கலி பூஜை, அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    சிறப்பு நிகழ்ச்சியாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா தலைமையில் அனைவருக்கும் பகவத் கீதை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் சரவணகுமார், கந்தப்பழம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×