வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் - கலெக்டர் மரியாதை

வ.உ.சிதம்பரனார் சிலைக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வ.உ.சிதம்பரனார் சிலைக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம். அருகில் தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் மற்றும் பலர் உள்ளனர்.
வ.உ.சிதம்பரனார் சிலைக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம். அருகில் தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் மற்றும் பலர் உள்ளனர்.
Published on

நெல்லை:

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஞான திரவி யம் எம்.பி., துணை மேயர் ராஜு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செய லாளர் விஜிலா சத்யா னந்த், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சு மணன், மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.வி. சுரேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீர பாண்டியன், சிறுபான்மை பிரிவு முகமது அலி, மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் நவநீதன், மகளிர் அணி அனிதா, நிர்வாகிகள் வி.கே.முருகன், பழைய பேட்டை மணிகண்டன், தொப்பி மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com