search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும்  மாடுகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்- மாடுகள் பிடிக்கும் பணியை துரிதப்படுத்தும் ஊழியர்கள்
    X

    நெல்லை மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்- மாடுகள் பிடிக்கும் பணியை துரிதப்படுத்தும் ஊழியர்கள்

    • சாலைகளில் மாடுகள் படுத்துக்கொள்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது.
    • சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் என்பது வாடிக்கையாகி விட்டது.

    அந்த காலகட்ட ங்களில் விவசாய பணிகள் மும்முர மாக நடைபெறும் என்பதால், மாடுகள் சாலைகளில் ஆங்காங்கே படுத்து க்கொள்கின்றன. அவ்வாறு அவை படுத்துக்கொள்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற உயிரிழப்பை தடுக்க மாநகராட்சி சார்பில் அபராதம் விதித்தல், மாடுகளை பிடிக்கும் பணி நடை பெற்றாலும், முழுமையான தீர்வு கண்டு பிடிக்க முடியாத காரணத்தினால் அவை மீண்டும் சாலைகளில் சுற்றித் திரிவதும், இதனால் உயிரி ழப்பு கள் நிகழ் வதும் தொடர்ந்து வருகிறது.

    தற்போது மாநகராட்சிக்குட்பட்ட பாளை, மேலப்பாளையம் மற்றும் டவுன் மண்டல பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் நடுரோட்டில் நின்று கொண்டு போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது எனவும், அதனை பிடிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

    இதையடுத்து மாநகர பகுதி முழுவதும் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டவுன் மண்ட த்தில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வாசு தேவன் ஆகி யோரின் வழிகாட்டுத லின்படி சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் ஊழியர்கள் மாடுகள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டவுன் ரதவீதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 8 மாடுகள் பிடிக்கப்பட்டு டவுன் போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள வார்டு அலுவலகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.இதே போல் மேலப்பாளையம் மண்டல பகுதிக்குட்பட்ட பெருமாள்புரத்தில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் மாடுகள் பிடிக்கப்பட்டன. அதனை உரிய அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தவறும் பட்சத்தில் அவற்றை அருகன்குளம் கோசாலையில் ஒப்படைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். உரிமையாளர்கள் அந்த மாடு களை பெற்றுக் கொள்ள விருப்பப்பட்டால் மாநகராட்சிக்கு உரிய அபராத தொகை செலுத்திவிட்டு, மாடுகளை கோ சாலையில் பராமரித்ததற்கான தொகையையும் செலுத்திவிட்டு தான் இனி பெறமுடியும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×