search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை-தேரோட்டத்திருவிழா தொடக்கம்
    X

    வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை-தேரோட்டத்திருவிழா தொடக்கம்

    • முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை, தேரோட்டத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தேரோட்டத்தின் போது பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் சூட்டுப்பொத்தை அடிவாரத்தில் முத்து கிருஷ்ண சுவாமி கோவில் கொண்டுள்ளார். முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை மற்றும் தேரோட்டத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்த ஆண்டு விழா நேற்று காலை 6.30 மணிக்கு வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் மஹாமேரு மண்டபத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை நடைபெற்றது.

    சிறப்பு பூஜை

    இதில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா, ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் மற்றும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டா டப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி சித்திரகூடத்தில் எஸ்.எஸ்.என்.ரமேஷ், சவுமியா பிரஷாந்த் குழுவினரின் வீணாகானம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வருகிற நாட்களில் இரவு லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டியம், இசை சொற்பொழிவு, பக்தி இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தேரோட்டம் நிறைவு பெற்றதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 23-ந் தேதி காலை 10.15 மணிக்கு மஹாமேரு தியான மண்டபத்தில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது.

    கார்த்திகை தீபம்

    26-ந் தேதி சூட்டுபொத்தையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி காலை 5 மணிக்கு கிரிவல வழிபாடும் நடைபெறுகிறது. பின்னர் குருஜெயந்தி ஆராதனாவும் ,அபிஷேக திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    Next Story
    ×