பாளையில் வியாபாரிக்கு அரிவாள்வெட்டு

பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார்.
பாளையில்  வியாபாரிக்கு அரிவாள்வெட்டு
Published on

நெல்லை:

பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜின் மகன் பிரசாத் கண்ணன் (42). இவரும் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நாகராஜனுக்கும், அவரது அண்ணன் பால்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு முதுகு மற்றும் தலையில் பலத்த வெட்டு விழுந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத் கண்ணனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com