search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hi-Tech Polytechnic College"

    • சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக கூடங்குளம் டி.டி.டி.ஏ. அந்திரேயா உயர்நிலைப் பள்ளி மற்றும் சண்முகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடப் பட்டது.
    • கல்லூரியின் தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக கூடங்குளம் டி.டி.டி.ஏ. அந்திரேயா உயர்நிலைப் பள்ளி மற்றும் சண்முகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடப் பட்டது.

    விழாவினை தலைமை தாங்கி தொடங்கி வைத்த கல்லூரியின் தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்க ராஜ் தாம்சன் அறிவிய லில் அமைதியை குறித்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி னார். போட்டிகள் அந்தந்த பள்ளி வளாகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் நடத்தப் பட்டது.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப் பட்டது. கூடங்குளம் டி.டி.டி.ஏ. அந்திரேயா உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ், சண்முக புரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் இசபெல்லா ஆகியோர் கலந்து கொண்ட னர். விழா முடிவில் மாணவி கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் பேராசிரி யர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்த னர்.

    • நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போட்டியும் நடைபெற்றது.
    • போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டியும், பெண்க ளுக்கான கைப்பந்து போட்டியும் நடைபெற்றது.

    போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    நெல்லை மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியின் ஒருங்கிணைப் பாளர் லில்லி வரவேற்று பேசினார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அம்பாச முத்திரம் பி.எல்.ட.பி.ஏ. மேல் நிலைப்பள்ளி மாணவி கள் முதலிடம் பெற்றனர்.

    ஆவரைகுளம் பாலை மார்த்தாண்டம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடம் பெற்றனர். 17 வய துக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சங்கர் நகர் கீதா கிருஷ்ணமூர்த்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலி டத்தையும், பாளையங் கோட்டை சின்மயா வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும் பெற்றனர்.

    19 வயதுக்குட்பட்டோ ருக்கான பிரிவில் அம்பா சமுத்திரத்தில் உள்ள பாபநாச தொழிலாளர் நல உரிமைக்கழக மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து அசத்தி னர். 2-ம் இடத்தையும் பாளையங்கோட்டை சாரா டக்கர் பெண்கள் மேல் நிலை ப்பள்ளி மாணவிகள் பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற அணி யினர் மாநில அளவி லான போட்டிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

    அவர்களுக்கான சான்றிதழ்க ளையும் வெற்றி கேடயங்களையும் கல்லூரி யின் தலைவர் லாரன்ஸ் வழங்கி, மாணவிகளின் திறனை பாராட்டி தனது வாழ்த்துக் களை தெரி வித்துக் கொண்டார்கள்.

    இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் செய்திருந்தார்.

    • சமூகரெங்கபுரத்தில் உள்ள வள்ளியூர் டி.டி.என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஹைடெக் விழா நடத்தப்படுகிறது.
    • இந்த ஆண்டுக்கான ஹைடெக் விழா போட்டிகள் அறிவியல் படைப்பு, காய்கறிகளில் இருந்து கலைப்பொருட்கள் உருவாக்குதல், ஊமை நாடகம், கோலப் போட்டி, கவிதை போட்டி மற்றும் ஆடை அலங்கார போட்டிகள் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள வள்ளியூர் டி.டி.என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஹைடெக் விழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான ஹைடெக் விழா போட்டிகள் அறிவியல் படைப்பு, காய்கறிகளில் இருந்து கலைப்பொருட்கள் உருவாக்குதல், ஊமை நாடகம், கோலப் போட்டி, கவிதை போட்டி மற்றும் ஆடை அலங்கார போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு பள்ளிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். விழாவை கல்லூரியின் தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, மாவட்ட கல்வி அலுவலர் பாலன் ஆகியோர் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆயர் இல்ல செயலர் ஜெயந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 8 -ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியனாக ஜுனியர் பிரிவில் விஜய அச்சம்பாடு செந்தில் ஆண்டவர் அருள்நெறி உயர்நிலைப் பள்ளி முதலிடத்தையும், பெரியதாழை லிட்டில் பிளவர்ஸ் உயர்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு இந்து உயர்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சீனியர் பிரிவில் நவ்வலடி டி.எம்.என்.எஸ். எஸ்.ஏ. மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், தெற்கு கள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

    கல்லூரியின் துணை முதல்வர் விமலா வரவேற்று பேசினார், கல்லூரியின் முதல்வர் டாக்டர்.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் போட்டியில் பங்குபெற மாணவர்களை ஊக்கப்படுத்திய அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் டி.டி.என் கல்வி குழுமத்தின் சார்பாக களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், ஆனைக்குளம் டி.டி.டி.ஏ நடுநிலைப் பள்ளிகளுக்கும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக கணினி மற்றும் பிரிண்டர் வழங்கப்பட்டது.

    கலந்து கொண்ட முடிவில் அனைத்து பள்ளிகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்ப ட்டது. 804 மாணவ -மாணவி யர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டினை ஆசிரிய- ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×