சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் குழந்தைகள் தினவிழா

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக கூடங்குளம் டி.டி.டி.ஏ. அந்திரேயா உயர்நிலைப் பள்ளி மற்றும் சண்முகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடப் பட்டது.கல்லூரியின் தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்ட போது எடுத்தபடம்.
குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்ட போது எடுத்தபடம்.
Published on

வள்ளியூர்:

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக கூடங்குளம் டி.டி.டி.ஏ. அந்திரேயா உயர்நிலைப் பள்ளி மற்றும் சண்முகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடப் பட்டது.

விழாவினை தலைமை தாங்கி தொடங்கி வைத்த கல்லூரியின் தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்க ராஜ் தாம்சன் அறிவிய லில் அமைதியை குறித்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி னார். போட்டிகள் அந்தந்த பள்ளி வளாகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் நடத்தப் பட்டது.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப் பட்டது. கூடங்குளம் டி.டி.டி.ஏ. அந்திரேயா உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ், சண்முக புரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் இசபெல்லா ஆகியோர் கலந்து கொண்ட னர். விழா முடிவில் மாணவி கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் பேராசிரி யர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்த னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com