என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார்.
    • விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது.

    நெல்லை:

    சாத்தான்குளம் அருகே உள்ள முதலுரை சேர்ந்தவர் கோட்டியப்பன். இவர் நெல்லையில் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    பள்ளத்தில் இறங்கியது

    தினமும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காரையாறுக்கு செல்லும் அந்த பஸ்சில் இன்று காலை வழக்கம் போல் புறப்பட்டார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணி களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டு சென்றது.

    பேட்டை ஐ.டி.ஐ அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் கோட்டியப்பன் பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மற்றொரு பகுதிக்கு சென்று அங்கிருந்த சாலையோர பள்ளத்தில் இறங்கி அங்குள்ள தனியார் நிறுவன சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.

    டிரைவர்- பயணிகள் காயம்

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து டிரைவர் கோட்டியப்பன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கோட்டியப்பன் மற்றும் பயணிகளை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகாந்த் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • நெல்லை பகுதி கழகம் சார்பில் டவுன் ஈசான விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    நெல்லை:

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது.

    நலத்திட்ட உதவிகள்

    மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட பொரு ளாளர் மாடசாமி, துணை செயலாளர்கள் பழனி குமார், செல்வகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்றைய தினம் பாளை பகுதி சார்பில் பாளையில் உள்ள பார்வை யற்றோர் இல்லத்தில் காலை உணவு, சமாதான புரத்தில் கட்சிக் கொடி ஏற்றுதல், செபஸ்தியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் நெல்லை பகுதி கழகம் சார்பில் டவுன் ஈசான விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்குதல், இளங்கோநகர் விநாயகர் கோவில் சிறப்பு பூஜை மற்றும் அப்பகுதியில் கட்சிக் கொடி ஏற்றுதல் மற்றும் ஒன்றிய பகுதிகளிலும் விஜயகாந்த் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலைவாணன், பாலகிருஷ்ணன், பகுதி பொறுப்பாளர்கள் நெல்லை மணிகண்டன், தச்சை ராஜ், பாளை அந்தோணி, ஒன்றிய செய லாளர்கள் வேல்பாண்டி, சின்னப்பாண்டி, நிர்வா கிகள் கணேசன், பாபுராஜ், தினகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மலுங்கு வேலாயுத முருகன், கோபி ராஜன், லயன் முருகன், பாஸ்கர் நவீன், ஜெய்சிங், முருகன், சபரி, முரளிதரன், சிவகுமார், தங்கப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக பாளையங்கால்வாய் இருக்கிறது.
    • பாளையங்கால்வாய் மூலம் 57 கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது சுமார் 126 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

    இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் உள்ளிட்ட 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பாசன வசதி பெற செய்கிறது. இது தவிர தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் வரை பாபநாசம் அணை தண்ணீரை நம்பி விவசாயம் நடந்து வருகிறது.

    இதில் நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக பாளையங்கால்வாய் இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில், பழவூர் தடுப்பணையில் இருந்து தொடங்கும் இந்த கால்வாய் சுமார் 43 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இக்கால்வாய் மூலம் 57 கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.

    இந்த தண்ணீர் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயில் மட்டும் 162 மடைகள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் பலவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. ஷட்டர்கள் எங்குமில்லை. இதனால், தண்ணீர் வீணாவதோடு விவசாயிகளும் தங்களது பாசனப்பரப்பை ஆண்டுதோறும் குறைத்து வருகின்றனர்.

    கால்வாயின் தொடக்கம் முதல் கடைசி வரையில் ஆகாயத்தாமரை, அமலை செடிகள், கால்வாய் முழுக்க ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை. குறிப்பாக 56-வது குளமான நொச்சிக்குளம், 57-வது குளமான சாணான்குளம் ஆகியவற்றுக்கு, தண்ணீர் சேரவில்லை.

    இதனால் கடந்த 15 ஆண்டுகளாக பாளையங் கால்வாயின் கடைமடை பகுதியில் கார் பருவ சாகுபடி நடக்கவே இல்லை என்ற விஷயம் வேதனைக்குரியது. இந்த கால்வாய் மாநகர பகுதியில் மட்டும் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த பகுதியில் மாநகராட்சி கழிவுகளும், சாக்கடையும், குடிமகன்களால் வீசப்படும் மது பாட்டில்களும் அடைத்து தண்ணீர் சீராக வழிந்தோட முடியாமல் போய்விடுகிறது.

    குறிப்பாக, மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் மாநகராட்சி ஊழியர்களே, கால்வாயில் கழிவுகளை கொட்டி விடுகின்றனர் எனவும், பெரும்பாலானோர் கட்டிடக்கழிவுகளை கொட்டி பாளையங்கால்வாயில் அகலத்தை சுருக்கி விட்டார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

    தொடர் புகார்களால் பொதுப்பணி துறை, வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தாமிரபரணி ஆற்றிலும், பாளையங்கால்வாயிலும் சாக்கடை கலப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன் பேரில் மாநகராட்சி சில நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நடவடிக்கைகளை விரைவு படுத்தி கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • நேற்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இதில் இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் புது அம்மன் கோவில் உள்ளது. சமீபத்தில் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதையொட்டி மண்டல பூஜையும் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா நாங்குநேரி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்த பெருமாள் (வயது 63) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பல நாட்கள் காலை நேரங்களில் கூத்தன்குழி கிராமத்திற்கு செல்லாமல் கூடங்குளத்திலேயே திரும்பி வந்து விடுகிறது.
    • குறிப்பாக மாலை 6.40-க்கு ராதாபுரத்தில் இருந்து வள்ளியூருக்கு செல்ல வேண்டிய பஸ் 6.15 மணிக்கும், இரவில் ராதாபுரத்தில் இருந்து 8.20 மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ் 7.45-க்கும் இயக்கப்பட்டு வருகிறது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் பணிமனையில் இருந்து கூத்தன்குழி கிராமத்திற்கு கும்பிளம்பாடு, ராதாபுரம், கூடங்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம் வழியாக 17சி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. காலையில் கூத்தன்குழி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    ஆனால் பல நாட்கள் காலை நேரங்களில் கூத்தன்குழி கிராமத்திற்கு செல்லாமல் கூடங்குளத்திலேயே திரும்பி வந்து விடுகிறது. சில நாட்கள் ராதாபுரத்திலேயே திரும்பி விடுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மட்டும் இயக்கப்படுகிறது.

    குறிப்பாக மாலை 6.40-க்கு ராதாபுரத்தில் இருந்து வள்ளியூருக்கு செல்ல வேண்டிய பஸ் 6.15 மணிக்கும், இரவில் ராதாபுரத்தில் இருந்து 8.20 மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ் 7.45-க்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வள்ளியூர் செல்ல 1 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே 17சி பஸ்சை முறையாக இயக்க வள்ளியூர் பணிமனை கிளை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ராதாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராதை காமராஜ் தெரிவித்து உள்ளார்.

    • மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் மதுரை ரைபில் கிளப் அரங்கத்தில் நடைபெற்றது.
    • போட்டியில் மாணவர் ஆகாஷ் கிருஷ்ணா வெள்ளி பதக்கம் பெற்றார்.

    நெல்லை:

    48-வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் மதுரை ரைபில் கிளப் அரங்கத்தில் கடந்த 11-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 19 வயதிற்குட்பட்ட இளையோர்கள் 10 மீட்டர் ரைபிள் போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆகாஷ் கிருஷ்ணா வெள்ளி பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    அவரை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர் திரு மாறன், பள்ளியின் முதல்வர் முருகவேள், பள்ளி ஒருங்கி ணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரி யர்கள் மோகன்குமார், பூச்சிய ம்மாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • 5-ந் தேதி அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனி நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7.30 மணிக்கு திரியாத்திரை திருப்பலியும், மாலை ஆராதனை, மறையுரை நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி 7-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு மாதா காட்சி கொடுத்த மலைகெபியில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்குகிறார். மாலை 6.30 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனி நடைபெறுகிறது.

    4-ந் தேதி காலை 5.15, 7.30, 9.30, 11.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. 5-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    அன்று காலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 7.30 மணிக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் நன்றி திருப்பலியும், காலை 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை பேராலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குத்தந்தை வளன் அரசு மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • வேல்முருகன், மீனாட்சிக்கு பணம் திருப்பி கொடுக்க வேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது.
    • இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கடத்தப்பட்ட வேல்முருகனை மீட்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி பொத்தையடி சத்திரிய நாடார் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் வேல்முருகன் (வயது30) காண்டிராக்டர்.

    இவர் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் நடுத்தெருவை சேர்ந்த இளங்கோவன் மனைவி தனலெட்சுமியின் (55) உறவினரான மீனாட்சிக்கு புதுக்கோட்டையில் வீடு கட்டி கொடுத்தார்.

    இதில் வேல்முருகன், மீனாட்சிக்கு பணம் திருப்பி கொடுக்க வேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி தனலெட்சுமி, வேல்முருகனிடம் பணத்தை கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று வேல்முருகன் பொத்தையடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த தனலெட்சுமி, பொன்சேகர் மகன் சுபாகர் (31) மற்றும் 2 பேர் உள்பட 4 பேர் சேர்ந்து வேல் முருகனை இரும்பு கம்பியால் தாக்கி காரில் இழுத்து போட்டு கடத்தி சென்றனர்.

    இதனை தடுக்க வந்த வேல்முருகனின் சகோதரர் முத்துக்குட்டிக்கு (35) கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கடத்தப்பட்ட வேல்முருகனை மீட்டனர். அவரை கடத்தி சென்ற தனலெட்சுமி, சுபாகர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

    • கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    • கொலையாளிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டை அருகே உள்ள மயிலப்பபுரத்தை சேர்ந்தவா் பிச்சை ராஜ் (வயது 52). அ.தி.மு.க. பிரமுகரான இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் ஆவார்.

    தற்போது ஜே.சி.பி. வைத்து தொழில் செய்து வந்த நிலையில், அப்பகுதியில் டாஸ்மாக் பாரும் நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று இரவு அவர் பாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    பேட்டை வீரபாகுநகர் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சென்ற போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த கும்பல் திடீரென பிச்சைராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் அவரது கழுத்து, முகம் மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

    சம்பவ இடத்தை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா, உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    சமீபத்தில் அவரது பாரில் வந்து சிலர் மது அருந்திவிட்டு தகராறு செய்துள்ளனர். அவர்களை பிச்சைராஜ் சத்தம் போட்டு அங்கிருந்து விரட்டி விட்டுள்ளார்.

    இதனால் அந்த கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தொழில் போட்டியில் இந்த கொலை நடந்திருக்கலாமா? அல்லது கோவில் திருவிழா தகராறு காரணமாக அவரது உறவினர்கள் யாரேனும் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறியும் பிச்சைராஜின் உறவினர்கள் இன்று பேட்டை போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கொலையாளிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • புதிதாக கட்டிய குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் வரவில்லை.
    • மழைக்காலம் வருவதற்குள் மழை நீர் வடிகால் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.

    மேயர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். துணை மேயர் ராஜு, துணை கமிஷனர் தாணுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடிநீர்

    கருப்பன் துறை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 6 மாத காலமாக குடிதண்ணீர் சரியாக வரவில்லை. புதிதாக கட்டிய குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே சீராக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    வண்ணார்பேட்டை சாலை தெரு பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் மழை நீர் வடிகால் கட்டப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி கிடக்கிறது. எனவே மழைக்காலம் வருவதற்குள் மழை நீர் வடிகால் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    நெல்லை மாநகர பகுதியில் கருப்பந்துறை பகுதி யில் ஆற்றங்கரை யோரம் 10-க்கும் மேற்பட்ட சலவைக்கூடங்கள் உள்ளது. இங்கு துணி துவைக்கும் பலர் துணிகளை சலவை செய்ய ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் உள்ள ரசாயனங்களை பயன் படுத்துவதாகவும் இதை தடுக்க வேண்டும் என்று டவுன் பாட்டபத்து பகுதியை சேர்ந்த ராஜன் மனு அளித்தார்.வைக்கப் பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
    • ரேஷன் கடைகளில் ஒரு நபருக்கு 10 கிலோ ரேஷன் அரிசி வழங்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது.

    கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அசோக், நேர்முக உதவியாளர் வேளாண்மை கிருஷ்ணகுமார், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலங்கள்) ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

    தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்ப டையார் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.

    விவசாய தொழிலா ளர்கள் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளில் ஒரு நபருக்கு 5 கிலோ என்ற வீதத்தில் ரேஷன் அரிசி வழங்கப்படு கிறது. அதனை 10 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறினார்.

    கொப்பரை தேங்காய்

    தொடர்ந்து பேசிய மற்றொரு விவசாயி, மானூரில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

    அதற்கு விரைவில் ராமையன்பட்டியை முதன்மை கொள்முதல் நிலையமாக கொண்டு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடி க்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

    குளங்களில் மண் அள்ளு வது வியாபாரமாக மாற்றி வருகின்றனர் என்று வியாபாரிகள் புகார் தெரி வித்தனர்.

    அதற்கு பதில் அளித்த கலெக்டர் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மட்டுமே விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் வழங்க வேண்டும். அதனை மீறி ஏதேனும் தவறு நடந்தால் ஆதாரத்துடன் கண்டு பிடிக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வர்கள் ஜெயிலில் அடைக் கப்படுவார்கள் என்று கூறினார்.

    இந்த காரசார விவாதத்தின் போது எழுந்த விவசாயி ஒருவர், வேளாண்துறை அதிகாரிகள் பெரும்பாலானோர் பணி களை சரியாக செய்வது இல்லை. 4 அதிகாரிகளை 'சஸ்பெண்டு' செய்தால் தான் ஒழுங்காக வேலை செய்வார்கள் என்று ஆதங்க த்துடன் தெரிவித்தார்.

    தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் கூட்டத்தில் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் 1.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஜூலை மாதத்தில் இது வரையில் 21.60 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. வழக்கமான மழையளவை விட இது 18.18 சதவிகிதம் குறைவாகும். இதனால் ஏற்பட்டுள்ள பயிர் சாகுபடி குறைவு குறித்த விரிவான விபரம் அரசுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர் தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மற்றும் கன்னடி யன் கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்களின் கீழ் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்பு களான 18 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங் களுக்கு கார் பருவ சாகு படிக்கும் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.

    இதுவரையில் 106.64 மெட்ரிக் டன் நெல் விதை விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், 150 மெட்ரிக் டன் நெல் விதை கள் வேளாண்மை விரி வாக்க மையத்தில் இருப்பு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை 1085 ஹெக்டேர் பரப்பில் கோடை நெல் சாகுபடியும், 293 ஹெக்டர் பரப்பில் கார் நெல் சாகுபடியும் செய்யப் பட்டுள்ளது. இதைத்தவிர சோளம், கம்பு ஆகிய சிறு தானியம் 208 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.

    ஜூன் 2023-ம் மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்ட த்தில் மொத்தம் 131 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இவற்றுள் வேளா ண்மை சார்ந்த மனுக்கள் 76, வேளாண்மை சாராத மனுக்கள் 55 பெறப் பட்டு, மனுக்களுக்குரிய பதில்கள் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைக்காலங்களில் தெரு முழுவதும் சகதி காடாக காட்சியளிக்கிறது.
    • நயினார்குளம் சாலையில் ஓடையை எடுத்துவிட்டு சிறிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் இன்று டவுன் மண்டல சேர்மன் மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், ரவீந்தர் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை டவுன் சத்தியமூர்த்தி தெரு, தெப்பக்குளம் கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்காக ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கழிவுநீர் சீராக செல்வதில்லை.

    மழைக்காலங்களில் தெப்பக்குளம் கீழ தெருவில் கழிவு நீர் ஓடைகளிலிருந்து தண்ணீர் வெளியே வந்து அந்த தெரு முழுவதும் சகதி காடாக காட்சியளிக்கிறது.இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக நயினார்குளம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஓடையை எடுத்துவிட்டு சிறிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களிலும் எவ்வித தடையும் இன்றி தண்ணீர் செல்லும். எனவே அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தனர்.

    ×