search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் சாலையோர பள்ளத்தில் இறங்கிய தனியார் பஸ் சுவற்றில் மோதி நின்றது- டிரைவர் உள்பட 5 பயணிகள் காயம்
    X

    கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி அங்குள்ள தனியார் நிறுவன சுற்றுச்சுவர் மீது மோதி நிற்பதையும், பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருப்பதையும் படத்தில் காணலாம்.

    பேட்டையில் சாலையோர பள்ளத்தில் இறங்கிய தனியார் பஸ் சுவற்றில் மோதி நின்றது- டிரைவர் உள்பட 5 பயணிகள் காயம்

    • மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார்.
    • விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது.

    நெல்லை:

    சாத்தான்குளம் அருகே உள்ள முதலுரை சேர்ந்தவர் கோட்டியப்பன். இவர் நெல்லையில் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    பள்ளத்தில் இறங்கியது

    தினமும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காரையாறுக்கு செல்லும் அந்த பஸ்சில் இன்று காலை வழக்கம் போல் புறப்பட்டார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணி களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டு சென்றது.

    பேட்டை ஐ.டி.ஐ அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் கோட்டியப்பன் பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மற்றொரு பகுதிக்கு சென்று அங்கிருந்த சாலையோர பள்ளத்தில் இறங்கி அங்குள்ள தனியார் நிறுவன சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.

    டிரைவர்- பயணிகள் காயம்

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து டிரைவர் கோட்டியப்பன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கோட்டியப்பன் மற்றும் பயணிகளை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×