என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- நேற்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இதில் இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் புது அம்மன் கோவில் உள்ளது. சமீபத்தில் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதையொட்டி மண்டல பூஜையும் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா நாங்குநேரி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்த பெருமாள் (வயது 63) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






