search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டவுன் ஆர்ச் பகுதியில் சிறிய பாலம் அமைக்க வேண்டும்- கலெக்டரிடம், கவுன்சிலர்கள் மனு
    X

    டவுன் ஆர்ச் பகுதியில் சிறிய பாலம் அமைக்க வேண்டும்- கலெக்டரிடம், கவுன்சிலர்கள் மனு

    • மழைக்காலங்களில் தெரு முழுவதும் சகதி காடாக காட்சியளிக்கிறது.
    • நயினார்குளம் சாலையில் ஓடையை எடுத்துவிட்டு சிறிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் இன்று டவுன் மண்டல சேர்மன் மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், ரவீந்தர் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை டவுன் சத்தியமூர்த்தி தெரு, தெப்பக்குளம் கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்காக ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கழிவுநீர் சீராக செல்வதில்லை.

    மழைக்காலங்களில் தெப்பக்குளம் கீழ தெருவில் கழிவு நீர் ஓடைகளிலிருந்து தண்ணீர் வெளியே வந்து அந்த தெரு முழுவதும் சகதி காடாக காட்சியளிக்கிறது.இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக நயினார்குளம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஓடையை எடுத்துவிட்டு சிறிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களிலும் எவ்வித தடையும் இன்றி தண்ணீர் செல்லும். எனவே அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தனர்.

    Next Story
    ×