என் மலர்
திருநெல்வேலி
- அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி.
- மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
நெல்லை:
அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி. இவர் நெஞ்சு வலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் வைத்து மதுவில் விஷத்தை கலந்து குடித்து மாரியப்பன் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமங்கள் தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் பலன்கள் கிடைத்துள்ளன.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு, பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, கொடிமுடியாறு ஆகிய 6 அணைகள் மூலம் விவசாய பணிகள் நடை பெற்று வந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயனிடம், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடை யப்பன் நிர்வாகிகளுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமங்கள் தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் பலன்கள் கிடைத்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு, பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, கொடிமுடியாறு ஆகிய 6 அணைகள் மூலம் விவசாய பணிகள் நடை பெற்று வந்தது.
ஆனால் கடந்த முறை வடகிழக்கு பருவமழை சாியாக பெய்யாததால் அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பவில்லை. இதனால் சில இடங்களில் இருக்கின்ற தண்ணீரை வைத்து விவசாயிகள் நெற்பயிா்கள் நடவு செய்துள்ளனா். கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையும் சாியாக பெய்யாத காரணத்தால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. இதனால் நெற்பயிா்களுக்கு தண்ணீா் இல்லாத நிலை உருவாகி நெற்பயிா்கள் அழிந்துள்ளது. மேலும் பல இடங்களில் நடப்பட்டிருந்த வாழைகளும் கருகி உள்ளது.
நெல்லை மாவட்ட மக்கள் கையில் இருந்த பணத்தை விவசாயத்தில் இழந்து வறுமையின் கோரப்பிடியில் உள்ளாா்கள். மாவட்டத்தில் வேறு தொழிற்சாலைகள் இல்லாததால் பெரும்பான்மையான விவசாயிகள் வேறு தொழில் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனா். இதனால் கிராமங்களில் வாழும் விவசாயிகள், விவசாயத்தை நம்பியுள்ள கூலி விவசாயிகள், விவசாயத்தை சாா்ந்து தொழில் செய்வோா் அனைவரும் இந்த வறட்சியினால் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீா் மிகவும் கீழே சென்று விட்டதாலும், ஆறுகளில் போதிய அளவு தண்ணீா் வராததாலும் குடிநீா்
சாிவர பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ள த்தோடு கருணை கூா்ந்து நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் அவா்களுக்கு உாிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதமாக எழுதி ஆவுடையப்பன் வழங்கினார். அப்போது தொண்டரணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாநில விவசாய தொழிலாளர்கள் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வ சூடாமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- விநாயகர் சிலை தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக்கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக பாளையங்கோட்டை அடுத்த கிருபா நகர் பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக நெல்லை மாவட்ட நிர்வாகம், மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்தில் ஆய்விற்காக பல்வேறு மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விநாயகர் சிலை கூடத்திற்கு வருவாய் துறை, காவல் துறையினர் சீல் வைக்க போவதாக தகவல் பரவியது. இதையடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் குவியத் தொடங்கினர்.
அதே வேளையில் போலீசாரும் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஏற்கனவே விநாயகர் சிலைகளை பெறுவதற்கு இந்து அமைப்பு நிர்வாகிகள், அதனை தயாரிக்கும் தொழிலாளர்களிடம் பல்லாயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ள நிலையில், தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கான பணிகளை தொடங்கினர்.
10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் முன்தொகை கொடுத்தவர்கள் ஆட்டோ மற்றும் டெம்போ வேன்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணிகளை தொடங்கினர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை வருவாய் தாசில்தார் தலைமையில் வருகை தந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஏற்கனவே விநாயகர் சிலை தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகள் வெளியே வரும் வரை சிலைகளை எங்கும் எடுத்துச் செல்லக் கூடாது என கூறி தயாரிப்பு கூடத்தை சுற்றி பேரிகாடுகள் அமைத்து சீல் வைத்தனர்.
இந்த நிலையில் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகளையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் தயாரிப்பு கூடத்தில் கொண்டு சேர்த்தனர். இதனால் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இன்று வரும் மாதிரி முடிவுகளை பொறுத்து சிலைகள் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியும் நிலை உருவாகியுள்ளது. போலீசார் பேரிகாடுகள் வைத்து தயாரிப்பு கூடத்தை சீல் வைத்த நிலையில் அங்கு 2-வது நாளாக இன்றும் கூடுதல் கண்காணிப்பு பணிக்காக போலீசரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
- ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
- ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் குளம், கால்வாய், கிணறு உள்ளிட்ட அனைத்து விதமான நீர்நிலைகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படு கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.
இந்நிலையில் மழை இன்றி, பல ஆண்டுகளாக விவசாயிகளால் கஷ்டப் பட்டு வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் நீரின்றி கருகி வருகிறது. இதனால் ராதாபுரம் பகுதி விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.
கடுமையான பாதிப்புக் குள்ளான விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கழிவு நீர் ஓடையில் இருந்து வெளியே வந்த பாம்பு பைக்கிற்குள் புகுந்துள்ளது.
- வாகனத்தில் இருந்து வெளியேறிய பாம்பு அருகில் இருந்த ஆட்டோவின் உள்ளே புகுந்தது.
பைக்கில் புகுந்த பாம்பையும், பொதுமக்கள் பைக்கின் உள்ளே வெந்நீர் ஊற்றி அதனை வெளியேற்றுவதையும் படத்தில் காணலாம்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. மாநகர பகுதிகளுக்குள் செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இப்பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
பஸ் நிலைய
கட்டுமான பணி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்ட பின்னர் புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி நடந்துவரும் சூழலில் பஸ் நிலையத்தை சுற்றி பஸ் நிறுத்தங்கள் அமைக்கப் பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த பஸ் நிலையம் வழியாக நெல்லையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு தங்களது பணிகளை மேற்கொள்வார்கள்.
'பைக்'கிள் வாகனத்தில்
புகுந்த பாம்பு
இந்நிலையில் இன்று காலை வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு நபர் பழைய பஸ் நிலையம் அருகே இருக்கக் கூடிய தனியார் வங்கி முன்பு பைக்கை நிறுத்தி விட்டு சென்றபோது அப்பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று பைக்கிற்குள் புகுந்துள்ளது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வாகனத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்க அவர் வாகனத்தில் இருந்து பாம்பை அப்புறப்படுத்துவதற்கான பல்வேறு கட்ட முயற்சி களை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.
வெந்நீர் ஊற்றினர்
பின்னர் அருகில் இருந்த டீக்கடையில் இருந்து வெந்நீர் வாங்கி வந்து 'பைக்'கிள் ஊற்றிய நிலையில் பாம்பு வாகனத்தில் இருந்து வேகமாக வெளியேறி அருகில் இருந்த மற்றொரு ஆட்டோவின் உள்ளே புகுந்தது.
தொடர்ந்து அங்கிருந்தும் பாம்பை அப்புறப்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு பாம்பை பிடிக்க முயன்றபோது அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் பாம்பு சென்று மறைந்து கொண்டது.
- சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
- குடிநீர் குழாய் உடைப்பால் பாரதியார் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொ ண்டார்.
கூட்டத்துக்கு துணை மேயர் ராஜூ, துணை கமிஷனர் தாணு மூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் மனு
நெல்லை டவுன் மண்டலத்துக்குட்பட்ட 28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் அளித்த மனுவில்,
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியான டவுன் பாரதியார் தெருவில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த பகுதியில் பள்ளி மற்றும் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சொக்கப்பனை முக்கு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாரதியார் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருக்கிறது. எனவே அதனையும் சரி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
டிரைவர்கள் மனு
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர் அகஸ்டின் என்பவர் தலைமையில் டிரைவர்கள் அளித்த மனுவில், அரசு பல்நோக்கு மருத்துவமனையின் முகப்பு பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தி பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது சங்கத்தில் சுமார் 35 தொழிலாளர்கள் ஆட்டோக்கள் வைத்து ஓட்டி வருகிறோம்.எங்களுக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
- தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
- ஆதர்ஷ் பச்சேரா சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் மாநகரமானது நெல்லை மேற்கு, நெல்லை கிழக்கு என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.
காலி பணியிடம்
அதன்படி நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சரவணகுமார் இருந்து வருகிறார். கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சீனிவாசன் பணி யாற்றனார். அதே போல் தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பதவியிடம் காலியாக இருந்தது. அந்த பொறுப்பை தலைமை இடத்தை துணை போலீஸ் கமிஷனர் அனிதா கவனித்து வந்தார்.
துணை கமிஷனர் நியமனம்
இதற்கிடையே காலியாக இருந்த போலீஸ் துணை கமிஷனர் பதவிக்கு உடனடியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பி னரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி தற்போது நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக ஆதர்ஷ் பச்சேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக ஏராளமான பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.
- நடுத்தர பெண்கள் கட்டாயத்தின் பெயரில் நுண் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.
நெல்லை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு சார்பில் இன்று பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் லதா தலைமை தாங்கினார்.
ஜெயந்தி, சந்திரா, சமாதானம், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் லட்சுமி சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேலையில்லா திண்டாட்டத்தின் காரண மாக வீட்டு வாடகை கூட கொடுக்க வழி இல்லாமல் ஏராளமான பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.
இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் நடுத்தர பெண்கள் கட்டாயத்தின் பெயரில் நுண் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.
இதனால் பெரும்பாலான பெண்கள் கந்து வட்டியில் சிக்கி தவித்து வருகின்றனர். அதனை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பொன், மாவட்ட துணை தலைவர் முத்துமாரி, துணை செயலாளர் அமுதா, மாவட்ட குழு உறுப்பினர் மரகதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பேட்டை ரெயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் ரெயில் முன்பதிவுக்கு வழி வகைகள் செய்யப்பட்டுள்ளது.
- ஏஜெண்டுகள் முந்தைய நாள் இரவே முன்பதிவு விண்ணப்பங்களை எழுதி வைத்து இடம் பிடித்து விடுகின்றனர்.
நெல்லை:
தென் மாவட்டங்களில் ரெயில் பயணம் செய்யும் பயணிகளை அதிக அளவில் கொண்ட மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள சந்திப்பு ரெயில் நிலையம் அதிக வருவாயை ஈட்டி கொடுக்கும் ரெயில் நிலையமாக இருந்து வருகிறது.
முன்பதிவு
தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதற்கு நெல்லை சந்திப்பு உள்பட ரெயில் நிலையங்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வசதிக்காக பாளை ரெயில் நிலையம், பேட்டை ரெயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் ரெயில் முன்பதிவுக்கு வழி வகைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேட்டை ரெயில் நிலையத்தில் அதனை சுற்றி அமைந்துள்ள கிராமங்களான சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கொண்டா நகரம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து தட்கல் முறையில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் வருகின்றனர்.
ஏஜெண்டுகள்
ஆனால் சில தனியார் நிறுவன ஏஜெண்டுகள் முந்தைய நாள் இரவே முன்பதிவுக்கு பயன்படுத்தும் விண்ணப்பங்களை எழுதி வைத்து இடம் பிடித்து விடுகின்றனர். அவர்களே குறைந்தபட்சம் 5 முதல் 10 டிக்கெட்டுகளுக்கு முன்பதிவுக்கு எழுதி வைத்து விடுவதால் முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இவ்வாறாக முன்பதிவு செய்யும் ஏஜெண்டுகள் அந்த டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்று விடுவதாக ரெயில் பயணிகள் சங்கத்தினர் புகார் கூறி வருகின்றனர்.
எனவே சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ளது போல முன்பதிவு செய்யும் நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களில் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக வந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வரிசையில் நிற்க வேண்டும். முன்கூட்டியே முன்பதிவு விண்ணப்பத்தை நிரப்பி வரிசையில் வைப்பதை தடுக்க வேண்டும். மேலும் பேட்டை ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்கும் போது பயணிகள் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனையை சரி செய்ய அங்கு பாதுகாப்புக்கு ரெயில்வே போலீசார் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடக்கிறது.
- போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, வேலை யின்மை அதிகரிப்பு, இந்தி திணிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மறியல் போராட்டம் நடக்கிறது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் இன்று நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் காசி விஸ்வ நாதன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் லெட்சுமணன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
50 பேர் கைது
தொடர்ந்து பா.ஜ.க அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் பாளை, தச்சை மண்டலங்கள் மற்றும் பாளை ஒன்றியக்குழு நிர்வாகிகள் ரங்கன், சடை யப்பன், முருகன், சபியா, சுரேஷ், பரமசிவன், பாலு, அப்துல் காதர், பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தொடர் மறியல் போராட்டமானது நாளை வள்ளியூரிலும், நாளை மறுநாள் அம்பை யிலும் நடக்கிறது.
பேட்டி
போராட்டத்தின்போது நிருபர்களிடம் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநில தலைவர் காசி விஸ்வநாதன் கூறியதாவது:-
யாரிடமும் கேட்காமல் இந்தியாவின் பாரம்பரிய மான பெயரை பாரத் என ஜி-20 உச்சி மாநாட்டில் மத்திய அரசு மாற்றி உள்ளது. வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்திய நாட்டை காப்பதற்கு எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
மாநாடு நடைபெறும் டெல்லி பகுதியில் வறுமை யின் கீழ் உள்ள மக்களை மூடி மறைக்கும் செயலாக தார்பாய்கள் கட்டி அவர்கள் வசிக்கும் வாழ்விடங்களை மத்திய அரசு மூடி உள்ளது.
நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை கட்டுக்கடங் காமல் இருந்து வரும் நிலை யில் இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மீனா தனது மகனுடன் தாழையூத்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- நகையை பறித்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் சிதம்பரநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா(வயது 55). இவர்களது 25 வயது மகன் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நகை பறிப்பு
நேற்று மதியம் மீனா தனது மகனுடன் தாழையூத்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மட்' அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர் சாலையின் இருபுறமும் நோட்டமிட்டுள்ளார்.
அப்போது மீனாவை தவிர வேறு மக்கள் நடமாட்டம் அந்த சாலையில் இல்லை என்பதை அறிந்த அந்த நபர் மீனாவின் அருகில் சென்றுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடியே, மீனாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகையை மர்ம நபர் பறிக்க முயன்றுள்ளார்.
சி.சி.டி.வி. ஆய்வு
ஆனாலும் மீனா செயினை கைப்பற்ற முயற்சி செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவரது கழுத்தில் கிடந்த செயினை கைப்பற்ற அந்த நபர் மீனாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.
இதுகுறித்து மீனா அளித்த புகாரின்பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை கண்டுபிடி க்க அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- பால்துரையின் கோழி ஆனந்த் என்பவரது வீட்டில் மேய்ந்தது.
- காயம் அடைந்த பொன்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள புதூர் ஆற்றாங்கரை தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்துரை. சம்பவத்தன்று இவரது கோழி பக்கத்து வீடான ஆனந்த் (40) என்பவரது வீட்டில் மேய்ந்தது. இதையடுத்து கோழி மீது ஆனந்த் கல்லை வீசினார். இதைப்பார்த்த பால்துரையின் மகள் பொன்செல்வி (28) தட்டிக் கேட்டார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்த், பொன்செல்வியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த பொன்செல்வி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தை கைது செய்தனர்.






