search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் பைக்- ஆட்டோவுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
    X

    பைக்கில் புகுந்த பாம்பையும், பொதுமக்கள் பைக்கின் உள்ளே வெந்நீர் ஊற்றி அதனை வெளியேற்றுவதையும் படத்தில் காணலாம்.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் 'பைக்'- ஆட்டோவுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

    • கழிவு நீர் ஓடையில் இருந்து வெளியே வந்த பாம்பு பைக்கிற்குள் புகுந்துள்ளது.
    • வாகனத்தில் இருந்து வெளியேறிய பாம்பு அருகில் இருந்த ஆட்டோவின் உள்ளே புகுந்தது.

    பைக்கில் புகுந்த பாம்பையும், பொதுமக்கள் பைக்கின் உள்ளே வெந்நீர் ஊற்றி அதனை வெளியேற்றுவதையும் படத்தில் காணலாம்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. மாநகர பகுதிகளுக்குள் செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இப்பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    பஸ் நிலைய

    கட்டுமான பணி

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்ட பின்னர் புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி நடந்துவரும் சூழலில் பஸ் நிலையத்தை சுற்றி பஸ் நிறுத்தங்கள் அமைக்கப் பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த பஸ் நிலையம் வழியாக நெல்லையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு தங்களது பணிகளை மேற்கொள்வார்கள்.

    'பைக்'கிள் வாகனத்தில்

    புகுந்த பாம்பு

    இந்நிலையில் இன்று காலை வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு நபர் பழைய பஸ் நிலையம் அருகே இருக்கக் கூடிய தனியார் வங்கி முன்பு பைக்கை நிறுத்தி விட்டு சென்றபோது அப்பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று பைக்கிற்குள் புகுந்துள்ளது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வாகனத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்க அவர் வாகனத்தில் இருந்து பாம்பை அப்புறப்படுத்துவதற்கான பல்வேறு கட்ட முயற்சி களை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

    வெந்நீர் ஊற்றினர்

    பின்னர் அருகில் இருந்த டீக்கடையில் இருந்து வெந்நீர் வாங்கி வந்து 'பைக்'கிள் ஊற்றிய நிலையில் பாம்பு வாகனத்தில் இருந்து வேகமாக வெளியேறி அருகில் இருந்த மற்றொரு ஆட்டோவின் உள்ளே புகுந்தது.

    தொடர்ந்து அங்கிருந்தும் பாம்பை அப்புறப்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு பாம்பை பிடிக்க முயன்றபோது அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் பாம்பு சென்று மறைந்து கொண்டது.

    Next Story
    ×