search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டவுன் பாரதியார் தெருவில் சாலையை சீரமைக்க வேண்டும்-மேயரிடம் கவுன்சிலர் மனு
    X

    மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய காட்சி.

    டவுன் பாரதியார் தெருவில் சாலையை சீரமைக்க வேண்டும்-மேயரிடம் கவுன்சிலர் மனு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
    • குடிநீர் குழாய் உடைப்பால் பாரதியார் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொ ண்டார்.

    கூட்டத்துக்கு துணை மேயர் ராஜூ, துணை கமிஷனர் தாணு மூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர் மனு

    நெல்லை டவுன் மண்டலத்துக்குட்பட்ட 28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் அளித்த மனுவில்,

    எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியான டவுன் பாரதியார் தெருவில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த பகுதியில் பள்ளி மற்றும் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலை குண்டும்-குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சொக்கப்பனை முக்கு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாரதியார் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருக்கிறது. எனவே அதனையும் சரி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    டிரைவர்கள் மனு

    நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர் அகஸ்டின் என்பவர் தலைமையில் டிரைவர்கள் அளித்த மனுவில், அரசு பல்நோக்கு மருத்துவமனையின் முகப்பு பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தி பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது சங்கத்தில் சுமார் 35 தொழிலாளர்கள் ஆட்டோக்கள் வைத்து ஓட்டி வருகிறோம்.எங்களுக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    Next Story
    ×