என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
    • ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைத்திட உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவு, பசுமை தீர்ப்பாய உத்தரவு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படை யில் விநாயகர் சதுர்த்திக்கு நீர்நிலைகளில் கரைக்கும் வகையில் சிலைகளை வைக்க விரும்புவோர் நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் செய்யப் பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

    பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட ரசாயன பொருட் களால் செய்யப்பட்ட மற்றும் ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைத்திட உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

    எனவே கூனியூர், காருக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்களால் செய்யப்படக்கூடிய நீர்நிலைகளை பாதிக்காத வகையிலான விநாயகர் சிலைகளை, சிலை வைப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறும், ரசாய னத்தால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு இதில் கூறியிருந்தார்.

    • தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாளையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாளையில் உள்ள கலைஞர் கூட்டமைப்பு அரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல தலை வர்கள் பிரான்சிஸ், கதீஜா இக்லாம் பாசில்லா, கவுன்சி லர்கள் பவுல்ராஜ், இந்திரா மணி, சின்னத்தாய், ஆமீனா, சுப்பு லெட்சுமி, பேச்சி யம்மாள் மற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள் டெங்கு தடுப்பு களப் பணியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் தசரா விழா நடைபெறும்.
    • கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால் நாட்டுதல் விழா நடைபெற்றது.

    நெல்லை:

    தென்மாநிலங்களில் பிரசித்தி பெற்ற திரு விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்த படியாக நெல்லை மாவட்டம் பாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் நடைபெறும்.

    கால் நாட்டுதல்

    தசரா விழாவின் போது பாளை பகுதியில் உள்ள 12 அம்மன் கோவில்களில் இருந்தும் மின்விளக்கு அலங் காரத்தில் உருவாக்கப்பட்ட சக்கரங்களில், சிம்ம வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி மகிஷாசுர சம்காரம் நடைபெறும். இந்த பிரசித்தி பெற்ற விழாவின் தொடக்க நிகழ்வான கால் நாட்டு வைபவம் இன்று பாளை பகுதியில் உள்ள 12 அம்மன் கோவில்களிலும் விமர் சையாக நடைபெற்றது.

    இந்த 12 அம்மன் கோவில்களிலும் மூல தெய்வமாக கருதப்படும் பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் பொறித்த கொடி மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால் நாட்டுதல் விழா நடைபெற்றது.

    தொடர்ந்து மகா தீபா ராதனை நடை பெற்றது. இதனை தொடர்ந்து பாளை வடக்கு முத்தாரம்மன், தேவி ஸ்ரீ முத்துமாரியம்மன், தூத்துவாரி அம்மன் உள்ளிட்ட 12 கோவில் களிலும் கால் நாடுதல் வைபவமும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    மகிஷாசூரசம்ஹாரம்

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 12 அம்பாள் திருவீதி உலா வருகிற அக்டோபர் 24-ந் தேதியும், மறுநாள் (25-ந் தேதி) மகிஷாசூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

    • கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள தபால் அலுவலகத்தின் முன்புறம் மோதியது.
    • பஸ்சில் இருந்த பயணிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி நேற்று இரவு 9 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை பாளை மணப்படைவீடு பகுதியை சேர்ந்த ஜேசுதாசன் (வயது 47) என்பவர் ஓட்டிச் சென்றார். நாஞ்சான்குளத்தை சேர்ந்த லாசர் (52) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    விபத்து-காயம்

    பேட்டை- சேரன்மாதேவி ரோட்டில் பேட்டை போலீஸ் நிலையத்தை கடந்து வளைவு பகுதியில் சென்ற போது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையின் ஓரத்தில் இருந்த தபால் அலுவலகத்தின் முன்புறம் மோதியது. இதில் பஸ்சில் முன்பக்கம் அமர்ந்து பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

    மேலும் இந்த விபத்தின் போது அதன் அருகில் இருந்த ஒர்க்ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்களும், தபால் பெட்டியும் சேதம் அடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 2-வது நாளாக இன்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேகத்தடை கோரிக்கை

    நெல்லை பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் 2 பக்க வளைவிலும், தபால் நிலையம் அருகே 2 வளைவிலும் வேகத்தடைகள் அமைக்கக்கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    மேலும் கடந்த ஆண்டு இதுதொடர்பாக அதன் தலைவர் அய்யூப், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தார். அந்த குழுவின் உத்தரவின்பேரில் ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் 2 வளைவிலும் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் தபால் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க போக்குவரத்து கமிட்டியிடம் அனுமதி பெற்றதும் அமைப்பதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

    நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

    இதுதொடர்பாக எழுத்து பூர்வமாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சட்டப்பணிகள் ஆணை குழுவிடம் வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஓராண்டாகியும் இதுவரை தபால் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட வில்லை. விரைவாக அமைத்திருந்தால் இதுபோன்ற விபத்துக்களை தடுத்தி ருக்கலாம் என்றும், இந்த விபத்துக்கு நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியமே காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்ற னர்.

    • நாகர்கோவிலில் இருந்து நெல்லை, கோவில்பட்டி, கல்யாண், தானே வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • இன்று முதல் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.

    களக்காடு:

    நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, குண்டக்கல், கடப்பா, வாடி, புனே, கல்யாண், தானே வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று நாங்குநேரி தாலுகா பகுதி பொதுமக்கள் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இந்த ரெயில் இன்று முதல் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகர்கோவில்-மும்பை ரெயில் நாங்குநேரியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றது. இந்த ரெயிலுக்கு நாங்குநேரி பகுதி பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    • சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சுருளையை சேர்ந்தவர் வேலாயுதம் மகள் சுதா (வயது 21). பிளஸ்-2 படித்துள்ள சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த சுதா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை வேலாயுதம் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுதாவை தேடி வருகின்றனர்.

    • வேளாண் விளை பொருட்களை மதிப்பூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் 10 மடங்கு லாபம் பெறலாம்.
    • கூட்டத்தில் உழவன் செயலி குறித்து எடுத்து கூறப்பட்டது.

    அம்பை:

    நெல்லை மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் சார்பில் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் மற்றும் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவனம் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி முக்கிய பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்னும் தலைப்பில் அம்பையில் நடத்தப்பட்டது.

    6 நாட்கள் பயிற்சியில் கிராமப்புற இளைஞர்களை வேளாண் தொழில் நுட்பத்தில் வல்லுநராக்கி, தொழில் முனைவோராக மாற்றுவதே முக்கிய நோக்கமாகும்.

    2-ம் நாளாக நடத்தப்பட்ட பயிற்சியில் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவன இயக்குநர் சங்கர லிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

    உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி வர வேற்று பேசினார். இயக்குநர் அவர்தம் உரையில் இப்பயிற்சியில் பயிற்சி பெற்றவர்கள் தாம் பெற்ற பயிற்சியின் நன்மையினை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டு மெனவும், வேளாண் விளை பொருட்களை மதிப்பூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் 10 மடங்கு லாபம் பெறலாம்.

    ரசாயன மருந்துகள் மற்றும் உரங்கள் பரிந்துரைக் கப்பட்ட அளவிற்கு அதிகம் இடுவதால் ஏற்படும் தீமைகளையும், சுற்று சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு களை குறித்தும் எடுத்துரைத்தார்.

    மேலும் வேளாண் துறையில் விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கப் பட்டுள்ள உழவன் செயலி குறித்து எடுத்து கூறினார்.

    பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை இணைப் பேராசிரியர் ஆல்வின், பூச்சி மேலாண்மையில் ஒட்டுண்ணிகள், சாறுண்ணி களின் பங்கு மற்றும் கவர்ச்சி பொறிகள் பயன் படுத்தும் முறை குறித்து விளக்கி கூறினார். பயிற்சிக் கான ஏற்பாடுகளை அட்மா பணியாளர்கள் ஈழவேணி, சதீஷ் , தங்கராஜ் மற்றும் பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.

    • நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிலையை உடைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பேச்சி, பிரம்மசக்தி, ஒத்தப்பனை சுடலை ஆண்டவர், முண்ட மாடசாமி,கொம்பு மாடசாமி, பரனடி மாடசாமி, எல்லைக்காவல் சுடலை ஆண்டவர், பிணம்திண்ணி கருநாக முண்டமாடசாமி இரட்டைத்தலை கொம்பு மாடசாமி, இசக்கியம்மன் சடைஅழகன் மாயாண்டி சுவாமிகள் உள்ளன.

    இந்தக் கோவிலின் நிர்வாகியாகவும், சாமியாடியாகவும் பாளையங்கோட்டை திருமாள்நகர் குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 57)என்பவர் இருந்து வருகிறார். இவர் தினமும் கோவிலுக்கு வந்து பூஜை நடத்தி செல்வது வழக்கம். நேற்று இரவில் பூஜை முடித்துவிட்டு ஊருக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து அவர் பார்த்தபோது அந்த கோவிலில் உள்ள சடையழகன் மாயாண்டி சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெபஸ்டியான், பேச்சிமுத்து, காளிராஜ் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிலையை உடைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே சிலை உடைக்கப்பட்ட தகவலறிந்து இந்து மக்கள் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர்.

    • கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.
    • இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் ரூ.49 ஆயிரத்து 621 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவு வாயில் பகுதியில் வரும்போது இழுவை கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதால் இழுவை கப்பலில் உள்ள உலகத்தரத்திலான கயிறு அறுந்து தரை தட்டி நின்று விட்டது.

    அப்பொழுது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை கப்பலின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது. இதனை மீட்கும் பணிகள் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை மற்றும் மும்பை துறைமுக பகுதிகளில் இருந்து வல்லுனர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதிக விசை கொண்ட இழுவை கப்பல்கள் மும்பை அல்லது கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பின்னர் தான் இந்த மீட்புப் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அதிக விசை திறன் கொண்ட இழுவை கப்பல்கள் வரும்போது, அவை கடல் பகுதியில் குறைவான தண்ணீரில் தரை தட்டிவிடும் நிலை இருக்கிறது என்பதால் இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து கூடங்குளத்திற்கு வந்துள்ள அதே விசை திறன் கொண்ட இழுவை கப்பல் கொண்டு வரப்படுகிறது.

    இந்த கப்பலானது நேற்று இரவு நிலவரப்படி கூடங்குளத்தில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தது. இன்று அந்த கப்பல் கூடங்குளத்திற்கு வந்து விடும். அதேநேரத்தில் இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கலாம் அல்லது திடீரென கடல் உள்வாங்கலாம் என்றும், சில நேரங்களில் கடல் சீற்றமும் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதன் காரணமாக கொழும்புவில் இருந்து கொண்டுவரப்பட உள்ள மீட்பு கப்பல், சம்பவ இடத்திற்கு வரும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு கூடங்குளம் பகுதிக்கு அந்த கப்பல் கொண்டுவரப்பட்டு, நாளை காலையில் மிதவை கப்பலை மீட்கும் பணிகள் தொடங்கும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நெல்லை மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.
    • வாறுகால்களில் தேங்கி கிடக்கும் சாக்கடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு கழிவு நீர் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தியிடம் புகார் அளித்து வந்தனர்.

    4 மண்டலம்

    இதையடுத்து மாநகர பகுதியில் அவரது உத்தரவின் பேரில் நல அலுவலர் டாக்டர் சரோஜா மேற்பார்வையில் 4 மண்டலங்களிலும் குறுகிய தெருக்களில் சாக்கடை வாறுகால் உள்ள பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாறுகால்களில் தேங்கி கிடக்கும் சாக்கடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு கழிவு நீர் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பன்றி காய்ச்சல் உள்ளிட்டவை பரவாமல் இருப்பதற்காக சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே எந்த விதமான நோய் தொற்றும் பரவாமல் இருக்கும் வண்ணம் மாநகரில் தூய்மை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி கமிஷனர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தூய்மை பணி

    நெல்லை டவுன் மண்டலத்திலும் நான்கு ரத வீதிகளிலும் வாறுகால்களில் அடைப்பு ஏற்படாத வண்ணம் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இன்று மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுரை யின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் நெல்லை டவுன் நயினார்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொண்டனர்.

    இந்த பணியின்போது தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மக்களிடையே நோய் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பாளை யூனியன் கொங்கந்தன்பாறை சமுதாய நல கூடத்தில் கொங்கந்தான்பாறை ஊராட்சி மற்றும் புதுக்குளம் ஊராட்சிகளுக்கு இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 76 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

    நெல்லை:

    பாளை யூனியன் கொங்கந்தன்பாறை சமுதாய நல கூடத்தில் கொங்கந்தான்பாறை ஊராட்சி மற்றும் புதுக்குளம் ஊராட்சிகளுக்கு இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 76 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

    இதில் 98 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 61 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    இம்முகாமில் சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை, கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    தொடர்ந்து அவர் மக்களிடையே பேசுகையில், முதல்-அமைச்சர் ஏழை- எளிய மக்களுக்காக தொ டர்ந்து பல்வேறு திட்ட ங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு மற்றும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

    இம்முகாமில் வருவாய்துறையின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, தனிப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட 65 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பயனாளிக்கு ரூ.15,584 மதிப்பில் தேய்ப்பு பெட்டி மற்றும் விலையில்லா தையல் எந்திரமும், ரூ.14.85 லட்சம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு டிராக்டர் என மொத்தம் 77 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்க ப்பட்டுள்ளது என்றார்.

    முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவகாமசுந்தரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா, உதவி ஆணையர் (கலால்) ராமநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைச்செல்வி எபலேசன் (கொங்கந்தான்பாறை), முத்துக்குட்டி பாண்டியன் (புதுக்குளம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சாதனை படைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
    • கல்லூரியின் செயற்கை அறிவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் மதன் மித்ரன், திருப்பூரில் தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சாதனை படைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கல்லூரி யின் செயற்கை அறிவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் மதன் மித்ரன், திருப்பூரில் தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.

    அதில் சூப்பர் சீனியர் தனிநபர் ஒற்றை சுழற்சி போட்டியில் முதலிடமும், சிலம்பு சண்டை போட்டியில் முதலிடமும் பெற்று 2 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்து, கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இதற்காக ஊக்கம் அளித்த பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், உடற்கல்வி இயக்குநர்கள் சுரேஷ் குமார், சாமுவேல் அமர்நாத், எஸ்தர் ராணி ஆகியோரை ஸ்காட் கல்வி குழும நிறு வனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    ×