என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த நிர்வாகிகள்.
நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- கலெக்டரிடம் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மனு
- நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமங்கள் தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் பலன்கள் கிடைத்துள்ளன.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு, பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, கொடிமுடியாறு ஆகிய 6 அணைகள் மூலம் விவசாய பணிகள் நடை பெற்று வந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயனிடம், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடை யப்பன் நிர்வாகிகளுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமங்கள் தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் பலன்கள் கிடைத்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு, பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, கொடிமுடியாறு ஆகிய 6 அணைகள் மூலம் விவசாய பணிகள் நடை பெற்று வந்தது.
ஆனால் கடந்த முறை வடகிழக்கு பருவமழை சாியாக பெய்யாததால் அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பவில்லை. இதனால் சில இடங்களில் இருக்கின்ற தண்ணீரை வைத்து விவசாயிகள் நெற்பயிா்கள் நடவு செய்துள்ளனா். கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையும் சாியாக பெய்யாத காரணத்தால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. இதனால் நெற்பயிா்களுக்கு தண்ணீா் இல்லாத நிலை உருவாகி நெற்பயிா்கள் அழிந்துள்ளது. மேலும் பல இடங்களில் நடப்பட்டிருந்த வாழைகளும் கருகி உள்ளது.
நெல்லை மாவட்ட மக்கள் கையில் இருந்த பணத்தை விவசாயத்தில் இழந்து வறுமையின் கோரப்பிடியில் உள்ளாா்கள். மாவட்டத்தில் வேறு தொழிற்சாலைகள் இல்லாததால் பெரும்பான்மையான விவசாயிகள் வேறு தொழில் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனா். இதனால் கிராமங்களில் வாழும் விவசாயிகள், விவசாயத்தை நம்பியுள்ள கூலி விவசாயிகள், விவசாயத்தை சாா்ந்து தொழில் செய்வோா் அனைவரும் இந்த வறட்சியினால் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீா் மிகவும் கீழே சென்று விட்டதாலும், ஆறுகளில் போதிய அளவு தண்ணீா் வராததாலும் குடிநீா்
சாிவர பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ள த்தோடு கருணை கூா்ந்து நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் அவா்களுக்கு உாிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதமாக எழுதி ஆவுடையப்பன் வழங்கினார். அப்போது தொண்டரணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாநில விவசாய தொழிலாளர்கள் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வ சூடாமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.






