search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் பகுதிகளில் தொடர் வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்
    X

    ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. 

    ராதாபுரம் பகுதிகளில் தொடர் வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்

    • ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
    • ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் குளம், கால்வாய், கிணறு உள்ளிட்ட அனைத்து விதமான நீர்நிலைகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படு கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    இந்நிலையில் மழை இன்றி, பல ஆண்டுகளாக விவசாயிகளால் கஷ்டப் பட்டு வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் நீரின்றி கருகி வருகிறது. இதனால் ராதாபுரம் பகுதி விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.

    கடுமையான பாதிப்புக் குள்ளான விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×