என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ந்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தினை அமைச்சர் பெரியகருப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சிவ கங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் கையெழுத் திட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர், சிவகங்கை நகராட்சி தலைவர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து அரசுத் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலர் தலைமையில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், சைல்டு லைன் மேற்பார்வையாளர்கள், மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும் சிவகங்கை, காரைக் குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவ னங்களின் உரிமையா ளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து தொண்டி ரோடு, அரண் மனை, நேரு பஜார், தெற்கு ராஜவீதி ஆகிய பகுதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பிளக்ஸ் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ் வரி தெரிவித்துள்ளார்.

    • 45 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
    • சுயதொழில் தொடங்குவதற்கும் தேவையான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கம் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு ரூ38.24 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக ஸ்கூட்டர்களை 45 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி வரை படிப்பதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கும் தேவை யான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப் பட்டு வருகிறது.

    கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவச் சிகிச்சை திட்டம், பராமரிப்பு நிதியுதவி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மாற்றுத்திற னாளிகளை பயன்பெற செய்யும் வகையில் தமிழ கத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மாற்றுத் திறனா ளிகளுக்கெனவே செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    2022-23-ம் நிதி யாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 5,553 மாற்றுத்்திறானளிகளுக்கு ரூ13.58கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பு வனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதா அண்ணாத் துரை (மானாமதுரை), சிவ கங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அஞ்சல் ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
    • பல போராட்டங்களை நடத்தி ஊழியர்களின் கோரிக்கைகளை சங்கம் நிறைவேற்றி தந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை கோட்ட மாநாடு நடைபெற்றது. கோட்ட தலைவர் அம்பிகா பதி தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலாளர் மகாதேவய்யா மாநாட்டில் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    மத்திய அரசால் அங்கீக ரிக்கப்பட்ட ஒரே சங்கமாக அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதும் 2.5 லட்சம் ஊழியர்கள் உறுப்பி னர்களாக உள்ளனர். பல போராட்டங்களை நடத்தி ஊழியர்களின் கோரிக்கை களை சங்கம் நிறைவேற்றி தந்துள்ளது.

    4 மணி நேரம் வேலை என கூறிறி கிராமிய அஞ்சல் ஊழியர்களை பணிக்கு நியமித்த அஞ்சல் நிர்வாகம் தற்போது அவர்களுக்கு 10 மணியிலிருந்து 12 மணி நேரம் வரை பணி நேரத்தை அதிகரித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்களி்ன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.

    7-வது ஊதியக் குழுவில் கமலேஷ் சந்திரா கமிட்டி மத்திய அரசுக்கு செய்த பரிந்துரை அறிக்கையில் கிராமிய அஞ்சல் ஊழியர்க ளுக்கு நியாயமாக வழங்கப் பட வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த கமிட்டி பரிந்துரையை கிடப்பில் போட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநாட்டில் மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் இஸ்மாயில், முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ, மதுரை மண்டலச் செய லாளர் ராமசாமி, சிவகங்கை கோட்டச் செயலாளர் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை கோட்ட புதிய நிர்வாகிகளாக செயலர் செல்வன், தலைவர் அம்பிகாபதி, பொருளாளர் ரத்தினபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

    • கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேக்காட்டுக்கருப்பர், பொன்னடைக்கன் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மேக்காட்டு கருப்பர், பொன்னடைக்கன் சாமி, பெரிய கருப்பர், சின்ன கருப்பர், வீரன்னசாமி, ஆண்டிசாமி, அம்மன் சாமி, முத்துக்கருப்பர் சாமி என அனைத்து தெய்வங்களுக்கும் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டது.

    பின்பு ராஜேந்திர வேளாளர் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வேடுவர் கண்ணப்ப குல அம்பலகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

    • தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் அளவு குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி அதிகாலை முதல் பெரியகாரை கிராமத்தை சுற்றியுள்ள பணங்காட்டான்வயல், கள்ளிக்குடி, கோட்டவயல், நயினார்வயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கச்சா, வாளி, கூடையுடன் வந்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கிராமத்து முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று வெள்ளைக்கொடி காட்டிய தும் மீன்பிடிக்க தயாராக இருந்தவர்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கி னர்.

    இதில் விரால், கெழுத்தி, கட்லா, கெண்டை போன்ற மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ அளவிலும் மேலும் அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுபோன்ற மீன் பிடி திருவிழாக்களால் விவசா யம் செழித்து கிராம மக்க ளின் ஒற்றுமை வளரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த மீன்பிடி திருவிழாவால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் வீடுகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.

    • கருப்பர் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
    • அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் சூரக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நொண்டி கருப்பர் கோவிலில் கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, பூமி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, கணபதி பூஜை மற்றும் ஹோமங்களும் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், சிங்கம்புணரி நகர அவைத்தலைவர் காந்திமதி சிவா, ஆனந்த கிருஷ்ணன், சிங்கப்பூர் வாழ் எம்.எம்.எம் கன்ஸ்சக்சன் உரிமையாளர் மலைச்சாமி தமிழ்மணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    • சிவகங்கை மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் 16 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
    • வேட்புமனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 நபர்கள், 4 நக ராட்சிகளின் வார்டு உறுப்பி னர்கள் 117 நபர்கள் மற்றும் 11 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 167 நபர்கள் ஆக மொத்தம் 300 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த வாக்காளர்களில் 9 மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்களும், 3 நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்களும் தேர்ந்தெடுக்கப் படுவர்.

    வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று (10-ந்தேதி) வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் இருந்து 9 வேட்பு மனுக்களும், பேரூ ராட்சி மற்றும் நகராட்சி உறுப்பினர்களிடமிருந்து இருந்து 6 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இந்த வேட்பு மனுக்கள் 12-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான மனுக்களை 14-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 14-ந் தேதிக்குள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வழங்கலாம்.

    வருகிற 23-ந்தேதி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதிதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னர்கள் 28-ந்தேதி முதல் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் 66 வழக்குகள் முடித்து வைத்து 6 பயனாளிகளுக்கு ரூ.1,42,78,84 வரை கிடைத்தது.
    • வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்டத்தில் 2 மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி ஆகியோர் வழக்குகளை விசாரித்தார்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2 குற்ற வியல் வழக்குகள், 65 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், அதே போல் 19 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் 16 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 20 வங்கிக்கடன் வழக்குகள் என மொத்தம் 122 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 19 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.86,28,346 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத (Prelitigation) வழக்குகளில் 305 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 47 வழக்கு தீர்வு காணப்பட்டு ரூ.56,50,500 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • சுந்தர விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் சுந்தரவிநாயகர் உள்ளது. இந்த கோவிலில் 19-ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி 108 சங்காபிஷேகம், சிறப்பு கணபதி ஹோமம், மற்றும் கும்ப கலசங்கள் உள்ள புனித நீரால் சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தது.

    இதை தொடர்ந்து பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தாயமங்கலம் ரோட்டில் உள்ள மயூரநாதர் கோவிலில் பாம்பன்சுவாமி குருபூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ெதாடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயராமன், அரசு பஸ் டிரைவர். அவர் ஓட்டி சென்ற பஸ் கீழநெட்டூர் கிராமத்தின் வழியாக சென்ற போது, அதே ஊரை சேர்ந்த காளிமுத்து, அவரது மகன் அஜித்குமார் இருவரும் அவர்களின் வீட்டின் அருகே பஸ்சை நிறுத்தி ஏறினர். இதனை ஜெயராமன் கண்டித்தார். அப்போது இருவரும் ஜெயராமனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • வீடு புகுந்து பணம் திருடப்பட்டிருந்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கேப்பார்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தமேரி. இவர் வெளிேய சென்று திரும்பி வந்த போது முன்கதவு திறந்து கிடந்தது. கதவில் இருந்த பூட்டு உடைக்ககப்பட்டி ருந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.19 ஆயிரம் காணாமல் போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் முன்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வசந்தமேரி மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீரய்யா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் நாடு வடக்கு தெரு சேகரம் வெளியாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நயினார் பட்டி கிராமத்தில் உள்ளது வீரய்யா சுவாமி பட்டவர் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டது.

    தீர்த்தம் எடுத்து வந்து கோவிலை சுற்றி வலம் வந்து தீபாராதனை, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகள் பிறகு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள வெளியாத்தூர், வாணியம்பட்டி, பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், யகருங்குளம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆயா அப்புச்சி வகையறா பங்காளிகள், நயினார் பட்டி கிராமத்தார்கள் ஆகியோர் செய்திருந்தனர். திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×