search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சல் ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்
    X

    மானாமதுரையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு நடந்தது

    அஞ்சல் ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்

    • அஞ்சல் ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
    • பல போராட்டங்களை நடத்தி ஊழியர்களின் கோரிக்கைகளை சங்கம் நிறைவேற்றி தந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை கோட்ட மாநாடு நடைபெற்றது. கோட்ட தலைவர் அம்பிகா பதி தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலாளர் மகாதேவய்யா மாநாட்டில் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    மத்திய அரசால் அங்கீக ரிக்கப்பட்ட ஒரே சங்கமாக அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதும் 2.5 லட்சம் ஊழியர்கள் உறுப்பி னர்களாக உள்ளனர். பல போராட்டங்களை நடத்தி ஊழியர்களின் கோரிக்கை களை சங்கம் நிறைவேற்றி தந்துள்ளது.

    4 மணி நேரம் வேலை என கூறிறி கிராமிய அஞ்சல் ஊழியர்களை பணிக்கு நியமித்த அஞ்சல் நிர்வாகம் தற்போது அவர்களுக்கு 10 மணியிலிருந்து 12 மணி நேரம் வரை பணி நேரத்தை அதிகரித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்களி்ன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.

    7-வது ஊதியக் குழுவில் கமலேஷ் சந்திரா கமிட்டி மத்திய அரசுக்கு செய்த பரிந்துரை அறிக்கையில் கிராமிய அஞ்சல் ஊழியர்க ளுக்கு நியாயமாக வழங்கப் பட வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த கமிட்டி பரிந்துரையை கிடப்பில் போட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநாட்டில் மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் இஸ்மாயில், முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ, மதுரை மண்டலச் செய லாளர் ராமசாமி, சிவகங்கை கோட்டச் செயலாளர் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை கோட்ட புதிய நிர்வாகிகளாக செயலர் செல்வன், தலைவர் அம்பிகாபதி, பொருளாளர் ரத்தினபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

    Next Story
    ×