search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "postal worker"

    • அஞ்சல் ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
    • பல போராட்டங்களை நடத்தி ஊழியர்களின் கோரிக்கைகளை சங்கம் நிறைவேற்றி தந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை கோட்ட மாநாடு நடைபெற்றது. கோட்ட தலைவர் அம்பிகா பதி தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச் செயலாளர் மகாதேவய்யா மாநாட்டில் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    மத்திய அரசால் அங்கீக ரிக்கப்பட்ட ஒரே சங்கமாக அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதும் 2.5 லட்சம் ஊழியர்கள் உறுப்பி னர்களாக உள்ளனர். பல போராட்டங்களை நடத்தி ஊழியர்களின் கோரிக்கை களை சங்கம் நிறைவேற்றி தந்துள்ளது.

    4 மணி நேரம் வேலை என கூறிறி கிராமிய அஞ்சல் ஊழியர்களை பணிக்கு நியமித்த அஞ்சல் நிர்வாகம் தற்போது அவர்களுக்கு 10 மணியிலிருந்து 12 மணி நேரம் வரை பணி நேரத்தை அதிகரித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்களி்ன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.

    7-வது ஊதியக் குழுவில் கமலேஷ் சந்திரா கமிட்டி மத்திய அரசுக்கு செய்த பரிந்துரை அறிக்கையில் கிராமிய அஞ்சல் ஊழியர்க ளுக்கு நியாயமாக வழங்கப் பட வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த கமிட்டி பரிந்துரையை கிடப்பில் போட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநாட்டில் மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் இஸ்மாயில், முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ, மதுரை மண்டலச் செய லாளர் ராமசாமி, சிவகங்கை கோட்டச் செயலாளர் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை கோட்ட புதிய நிர்வாகிகளாக செயலர் செல்வன், தலைவர் அம்பிகாபதி, பொருளாளர் ரத்தினபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

    நாகர்கோவில் அருகே தபால் ஊழியர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த கீழ பெருவிளையை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 57). நாகராஜன், வெட்டூர்ணி மடத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக உள்ளார். சம்பவதன்று இவர் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின்பு அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    நாகராஜன், அன்று வேலை முடிந்து உறவினர் வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்து கொண்டு மாலையில் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருள்கள் தரையில் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.90 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

    இதுபற்றி நாகராஜன், ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜா மற்றும் போலீசார் நாகராஜன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

    வீட்டில் நாகராஜன் மற்றும் அவரது மனைவி இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து பணத்தை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்று நின்று விட்டது. எனவே நாகராஜன் வீட்டில் கொள்ளை அடித்தவர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×