என் மலர்
சிவகங்கை
- தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள குறுமனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் கடந்த சில மாதங்க ளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி சாவு
சிவகங்கை அருகே உள்ள அங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மானுவேல் மகன் சுரேஷ், விவசாயி. இவர் கோத்தகிரி பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்து கொண்டி ருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குருவார பிரதோஷ வழிபாடு நடந்தது. மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில், சோமநாதர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர் பிராகாரத்தில் வலம் வந்தார்.
சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திரமவுலீசுவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜையும், குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் காசிவிஸ்வநாதர், காசிநந்திக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். மேலெநெட்டூரில் உள்ள சொர்ணவாரீசுவரர்-சாந்தநாயகி அம்மன் கோவில், இடைக்காட்டூர் ஆதிமணிகண்டேசுவரர் கோவில், வேம்பத்தூர் கைலாசநாதர்-ஆவுடையம்மன் கோவில்களிலும் குருவார பிரதோஷ வழிபாடு நடந்தது.
- சேவகபெருமாள் கோவில் பிரமோற்சவ விழா விநாயகர் ஊர்வலத்துடன் தொடங்கியது.
- விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாட்டார்கள் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவகப் பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வருடந்தோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா இந்த வருடம் ஆனி மாதத்தில் நடைபெற கிராமத்தார்க ளால் முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரமோற்சவ விழாவின் துவக்க விழாவான நேற்று இரவு விநாயகர் சந்துவீரன் கூடம் எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை சந்திவீரன் கூடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
மல்லிகை மலர்களால் அலங்கரிப்பட்ட சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளினார். பாரம்பரிய வழக்கப்படி மாடுகள் பூட்டப்பட்ட ரதத்தில் ஊர்வலம் சந்தி வீரன் கூடம் நோக்கி புறப்பட்டது. நள்ளிரவு நேரத்திலும் வழி நெடுகிலும் பக்தர்கள் மாக்கோலமிட்டு விநாயகரை வரவேற்றனர். வீடுகள் தோறும் அர்ச்சனை செய்வதற்கு நள்ளிரவில் பொதுமக்கள் விநாயகரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வருகிற 25-ந்தேதி பிரமோற்சவ விழா காப்புகட்டுதலுடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி 9-ம் திருவிழா திருத்தேரோட்ட மும், 4-ந் தேதி லட்சம் மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட பூப்பல்லுக்கும் நடைபெற உள்ளது.
மேற்கண்ட சிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாட்டார்கள் செய்திருந்தனர்.
- தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கியது. 1 லட்சம் வாக்காளர்களை கொண்ட நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்ட ரஸ்தா சாலையில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் குப்பைகளை கொட்ட அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக குப்பை களை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-குப்பைகள் கொட்டும் விவகாரம் தொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. கடந்த 6 மாதங்களாக தேவகோட்டை நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு உருவாகி உள்ளது.
நகராட்சிக்கு ஒதுக்கப் பட்ட தேவகோட்டை ரஸ்தா பகுதிகளில் குப்பைகளை ஒதுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அந்த இடத்தை தயார் செய்து தரவில்லை.
இதை கண்டித்து தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்பும் தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய மின்மாற்றியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- நிழல் குடை அைமக்கும் பணிக்கான பூமிபூஜை தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதிய மின்மாற்றியின் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டது. திருப்புவனம்புதூர் பகுதியில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால் மின்சாதனப் பொருள்கள் பழுதடைவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தப் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக் கப்பட்டு, அதன்மூலம் சீராக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் செயல்பாட்டை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், தி.மு.க. நகரச் செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பையா, வார்டு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மணலூரில் ரூ.ய10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழல் குடை அைமக்கும் பணிக்கான பூமிபூஜை தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
- உரிய அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அரண்மனை வாசலில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
சிவகங்கை:
தமிழகத்தில் அவ்வப்போது பிளக்ஸ் போர்டுகள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் அரசியல் கூட்டங்கள், இல்ல நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதியின்றியும், விதிகளை மீறியும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மீறி பிளக்ஸ் போர்டு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிவகங்கை அரண்மனை வாசலில் நேற்று மாலை மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டம் நடந்தது. இதற்காக அரண்மனை வாசலில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் முறையாக அனுமதி பெறவில்லை. இதையடுத்து அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக பால முருகன், கண்ணன், கண்ணையா, சதீஷ், பிரபு தாசிகாளை, கவுதம்துரை மற்றும் சுகனேஸ்வரி, செந்தில் ஆகிய 9 பா.ஜ.க.வினர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சிவகங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவ னத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர்.
- மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர்.
காரைக்குடி :
காரைக்குடியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 8 நாட்கள் சோதனை முடிந்து அதில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி அதன் பின்னர் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தனர். இதை சகித்து கொள்ள முடியாதவர்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க.வினர் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு காரணம் மக்களிடம் அனுதாபம் பெறலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர். ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் அந்த மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடைபிடித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதை அனைத்து மீடியாக்களும் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்படுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கவர்னரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர். அதைபோல் இன்று அதே நாடகத்தை கையில் எடுத்துள்ளனர்.
இது மக்களுக்கு நன்றாக தெரியும். அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு வரை வராத நெஞ்சுவலி அதற்கு பின்னர் எப்படி வந்தது? திடீரென ஒரு நாள் இரவு எப்படி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகம் உள்ளது. இதற்கு உயர்தர டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அமலாக்கத்துறை கைது செய்ததால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.
நேற்று நீட் தேர்வு ரிசல்ட் வந்துள்ளது. இதில் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதல் மாணவனாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் இந்திய அளவில் முதல் 10 இடத்தில் நான்கு பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான். இதன் மூலம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் நடந்தது.
- நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் சட்டபணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீபிதி சுந்தரராஜ், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி, நீதிதுறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டீ, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், சட்டம் சார் தன்னார்வலர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- சிவகங்கை அருகே மதுரை-தொண்டி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
- முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்தது.
தேவகோட்டை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை கோட்டம் தேவகோட்டை உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக சருகனி அருகே மதுரை-தொண்டி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் விழா தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் நடந்தது.
இவ்விழாவில் மகிழம், மகோகலி, தளி, புங்கை, வேம்பு, நாவல், சரக்கொன்றை மற்றும் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் உதவி பொறியாளர் செல்வகுமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் சாலை பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை-தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்காரகுளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
- தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-தாயமங்கலம் ரோட்டில் உள்ளது அலங்காரகுளம். இந்த குளத்தில் பாசன வசதி ஏதும் கிடையாது. ஆனால் ஆண்டு தோறும் ஆடிதிருவிழாவில் வீர அழகர் கோவில் தீர்த்த வாரி இங்கு நடைபெறும். விநாயகர் சதுர்த்தி நாளில் வைக்கப்படும் சுவாமி சிலைகள் இந்த குளத்தில் கரைக்கப்படும். முக்கிய கோவில்களுக்கு இங்கு இருந்து தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அலங்காரகுளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாது. இந்த குளத்தை சீரமைக்கும்படி மானா மதுரை பகுதி மக்கள் தமிழரசி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் பொதுப்பணித்துறை மூலமாக குளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். முதற்கட்டமாக குளத்தை சுற்றி 200 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட ப்பட்டது. இதன் தொடக்க விழாவில் தமிழரசி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
இதுதவிர அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சந்தனமரம், செம்மரம், மா, கொய்யா, வேப்ப மரகன்றுகளை வழங்கினார். அப்போது மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா அலங்காரம் குளம் கரையில் பேவர் பிளாக் சாலை அமைத்து குளத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றியசெயலாளர் ராஜாமணி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், ஒன்றிய துணைத்தலைவர் முத்துசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராதாசிவச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன் மற்றும் வனத்துறை அலு வலர்கள், பொதுபணிதுறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.
- இறந்த முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அன்னவாசல் கால்வாய் பாலம் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன் அசின் என்பவர் ஓட்டிச்சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார். தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் பெரும்பச்சேரி குரூப் கிராம நிர்வாக அதிகாரி செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலை யத்தில் அடையாளம் தெரி யாத 80 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.






