என் மலர்
சிவகங்கை
- செம்பனூர் ஊராட்சியில் புதிய கலையரங்கத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சிக்குட்பட்ட செம்பனூர் ஊராட்சியில் உள்ள நாச்சியப்பன் செட்டியார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கினார். இதையடுத்த அந்த இடத்தில் 2020-21-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதி திட்டத்தின்படி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ 7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.
இதனை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா, கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செம்பனூர் அரசு பள்ளியில்12, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.
- காரைக்குடி தபால் நிலையத்தில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை தொடங்கியது.
- பணத்திற்கு முழு உத்தர வாதம் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அஞ்சல்துறை சார்பில் அனைத்து அஞ்சலக அலுவலகங்க ளிலும் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதேபோல் காரைக்குடி அஞ்சலகம் அலுவலகத்தில் நேற்று முதல் தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை 5 நாட்கள் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு இந்த தங்க பத்திரத்தின் விலை ஜூன் மாதத்தில் ரூ.5091-ம், ஆகஸ்டு மாதத்தில் ரூ.5197-ம், டிசம்பர் மாதத்தில் ரூ.5409-ம், இந்தாண்டு மார்ச் மாதம் ரூ.5611-ம் விற்பனை செய்யப்பட்டுள் ளது.
இந்த தங்க பத்திரத்தின் சிறப்பு அம்சங்களாக ஒரு கிராம், ரூ.5926-ம், இதற்கு வட்டி விகிதம் 2.5 சதவீதமும், குறைந்தது 1 கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் முதிர்வு காலமாக 8 ஆண்டுகளாகவும், முன் முதிர்வு காலமாக 5 வருடங்களுக்கு பின்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் திட்டமாக உள்ளதால் பணத்திற்கு முழு உத்தர வாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தங்க சேமிப்பு பத்திரத்தை பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் எண் ஆகியவை அடையாள சான்றாக ஏற்கப்படும். மேலும் வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. கோடு நேரில் கொண்டு வரவேண்டும். இதுதவிர வாரிசு நியம னத்திற்கு வாரிசுதாரர்களின் வயது, வங்கி கணக்கு எண், அடையாள சான்று ஆகியவை வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு தொடக்கப்பள்ளியில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர் சேர்க்கை நடப்பதாக சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கையில் பார்வைத் திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 5 முதல் 15 வயது வரை உள்ள பார்வையற்ற, குறைபார்வையுடைய மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கலாம். விடுதி சார்ந்த இப்பள்ளியில் உணவு, உடை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்த பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளால் பிரெய்லி முறையில் கல்வியுடன் உடற்கல்வி மற்றம் கணினி பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. விடுதியில் பார்வையற்ற மாணவர்களை கனிவுடன் கவனிக்க விடுதி பணியா ளர்கள் உள்ளனர். இப்பள்ளியில் சேர தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு இளையான்குடி சாலை அம்பேத்கர் சிலை அருகில் உள்ள பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
- அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- மாணவ-மாணவிகளுக்கு கேடயம் பரிசு வழங்கப்பட்டது.
மானாமதுரை
மானாமதுரையில் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுவின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைவர் லட்சுமணன் வரவேற்றார். திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுத்தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். செர்டு சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் பாண்டி மாணவ-மாணவிகளுக்கு கேடயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.
இதில் சுய உதவிக்குழு செயலர் நாகலிங்கம், ஓய்வுபெற்ற முது நிலை கணக்கு அலுவலர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் நதியா செல்வம், சிவகங்கை தொல் நடைக்குழு ஆசிரியர் பயிற்றுநர் காளிராஜா, ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். முன்னதாக உதவி செயலர் அடைக்கலம் வரவேற்றார்.
- தேவகோட்டை வாரச்சந்தை கடைகளில் எடை மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
- வியாபாரிகள் சந்தைக்கு வருகின்றனர்.
தேவகோட்டை
தேவகோட்டை நகரில் கண்டதேவி சாலையில் வாரச்சந்தை ஞாயிற்றுக் கிழமை செயல்பட்டு வரு கிறது. சிவகங்கை, ராமநாத புரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வியாபாரிகள் பல வகை காய்கறிகளை விற்பனை செய்ய சந்தைக்கு வருகின்றனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகளை கொண்ட இந்த வார சந்தை யில் தேவகோட்டை சுற்றி யுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்கறி பழம் மீன் மற்றும் அத்தியாவசிய பொருட் களை வாங்கி செல்கின்றனர்.
இந்த வார சந்தையில் வாங்கும் பொருட்கள் எடை மிகுந்த குறைந்த அளவில் உள்ளது. அதனை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்ல வேண்டிய அவல ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வாங்கும் பொருட்கள் 800 கிராம் முதல் 900 கிராம் வரை மட்டுமே உள்ளது என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
கடைக்காரர்கள் முத்திரையிடாத எடைக் கற்களை பயன்படுத்துவதால் எடை குறைப்பு அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மறைமுகமாக ஏமாற்றப்படுகின்றனர். எனவே தொழிலாளர் துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதி கடைகளில் உள்ள எடைக் கற்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
- அரசு அலுவலர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் நாலு கோட்டை ஊராட்சி யில் அமைந்துள்ள 7 சங்கிலி தொடர் கண்மாய்களை சின்ஜென்டா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயலாக்கத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் மடை சீரமைப்பு, கழுங்குகள் சீரமைப்பு, வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால் தூர் வாருதல், கண்மாய் நீர் பிடிப்பு பகுதி தூர்வாருதல் மேலும் அனைத்து கண்மாய் கரையிலும் 1000 மரக்கன்று கள் நடுதல் போன்ற பணிகளை கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையொட்டி அதன் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன் நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண் டன், சின்ஜென்டா நிறு வன இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு வர்த்தக மேலாளர் ஜெயமோகன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர்-மேலாளர் கொண்டராதாகிருஷ்ணா, துணைத்தலைவர் கண்ணன், துணைப்பொதுமேலாளர் ஏழுமலை, திட்டமேலாளர் கார்த்திக், சமூக ஒருங்கி ணைப்பாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலகர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கண்மாய் கரைகளில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
- மோட்டார் சைக்கிள்-வேன் மோதியதில் டீ கடைக்காரர் படுகாயமடைந்தார்.
- நத்தம் மதுக்கரையை சேர்ந்த டிரைவர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூரை அடுத்துள்ள கணபதிபட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகன் பாண்டியன்(வயது19). இவர் நாகமங்கலத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் கடையில் இருந்து வீட்டிற்கு சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றார். நாகமங்கலம் நாடகமேடை அருகே சென்றபோது அங்குள்ள வளைவில் வேகமாக வந்த வேனும், மோட்டார் சைக்கிலும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த பாண்டியன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புழுதிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த நத்தம் மதுக்கரையை சேர்ந்த டிரைவர் உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மார்க்கெட் ஏலம் எடுக்கும் தகராறில் மதுரை வாலிபரை கொன்ற கும்பலை தேடி வருகின்றனர்.
- தேர்தல் பிரச்சினை தொடர்பாக அறிவழகன் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
காரைக்குடி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் அறிவழகன் என்ற வினித் (வயது 29). இவர் மீது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
குற்ற வழக்குகள் தொடர்பாக அறிவழகன் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் தினமும் கையெ ழுத்திட்டு வந்தார். இதற்காக அவர் தனது ஆதரவாளர்களுடன் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று போலீஸ் நிலையத் திற்கு கையெழுத்திடச்சென்ற அறிவழகனை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்தது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் காரைக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட னர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளின் அடிப்படையில் கொலை யாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மார்க்கெட் ஏலம் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை தொடர்பாக அறிவழகன் கொலை செய்யப்பட்டு ள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், விருதுநகர் நகராட்சி மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாகவும் அறிவழகனின் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த வருடம் விருதுநகர் நகராட்சி மார்க்கெட்டை ஏலம் எடுக்க அறிவழகன் குடும்பத்தினர் தீவிர முயற்சி எடுத்தனர்.
இதையறிந்த எதிர்தரப்பி னர் மார்க்கெட்டை ஏலம் எடுத்தால் உங்கள் குடும்பத் தில் கொலை விழும் என நேரடியாகவும், மறைமுகமாக வும் மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அதனை பொருட்ப டுத்தாமல் அறிவழகன் தரப்பி னர் மார்க்கெட் ஏலம் எடுக்க முயற்சி மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் அறிவழகனை ஓட, ஓட விரட்டி கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக மையிட் டான் பகுதியை சேர்ந்த ஆதி நாராயணன், மேக்ஸ் என்ற கருப்பையா, தனுஷ், குமார வேல், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் தேடி வரு கின்றனர். அவர்களை பிடிக்க காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மதுரை, சிவகங்கை பகுதிகளில் கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மகளுடன் இளம்பெண் மாயமானார்.
- சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள எம்.ேவலன்குளத்தை சேர்ந்தவர் சவுந்தர்யா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது 3 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்யா சிவகங்கையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.
சம்பவத்தன்று மகளை அழைத்துக்கொண்டு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற சவுந்தர்யா அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் லதா கொடுத்த புகாரின்பேரில் தாலுகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தில் கரும்பு விற்கும் ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை போலீசார் மீட்டு அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சந்தோஷ் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். இதுகுறித்து தமராக்கி கிராம நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள வீழனேரி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பாசறை இணை செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் மாட்டு வண்டி பந்தயத்தை செந்தில் நாதன்
எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள்ஸ்டீபன், செல்வமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கால்வாயை அடைத்து புதிய சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- இது தொடர்ந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சாக்கோட்டை-பாராவயல் சாலையில் மணியாரம்பட்டி முதல் கள்ளமணக்குடி வரை 1400 மீட்டர் தூரத்திற்கு சாலை அகலப்படுத்தி பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தொடக்கத்தில் இடதுபுறம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்த நிலையில் வழியில் இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் வலதுபுறமாக சாலையை அகலப்படுத்தும் பணி நடந்துள்ளது. மேலும் இடதுபுறம் இருந்துவரும் கால்வாயை அடைத்து பணி நடந்து வருவதால் கண்மாய்க்கு நீர்வரத்து தடைபட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் எம்.சாண்ட் துகள்களை பயன்படுத்தி சாலைப்பணி நடந்து வருவதால் சில நாட்களிலேயே சாலை சேதமடைந்துவிடும் என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கால்வாயை அடைத்து பணி நடந்து வருவதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலை அகலப்படுத்தும் பணிக்கு உரிய அனுமதி பெறாமல் கண்மாயில் இருந்து மண் அள்ளப்படுவதோடு, விவசாயத்திற்கு பயன்படுத்தும் கண்மாய் நீரையும் மோட்டார்களை வைத்து அள்ளி சாலைப்பணிக்கு பயன்படுத்துகின்றனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை உடனடியாக தடுக்க வேண்டும்.
100 மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணியை முடித்துவிட்டு அடுத்த 100மீட்டர் தோண்ட வேண்டும். ஆனால் மொத்தமாக தோண்டி பணி நடப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்திக் சிக்குவதோடு வாகனங்கள் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இது தொடர்ந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிகிச்சை செலவு தொகையை பெறுவதில் சிரமம் இருப்பதாக ெதாடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டி உள்ளனர்.
- கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிவகங்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செய லாளர் முத்துப்பாண்டியன் முதல்-அமைச்சருக்கு மனு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணி புரியும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.300 அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021-ஐ செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 1.9.2021 முதல் எம்.டி. இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் 3-ம் நபர் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் சிகிச்சை செலவுத் தொகையை திரும்பப் பெறுவது சிரமமாக உள்ளது. எனவே அரசா ணைக்கு முரண்பாடாக உள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது அரசு ஆணைப்படி சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் வழங்குவதில்லை. மாறாக காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மட்டும் வழங்கி வருகிறது.
மீதி பணத்தை நோயாளி களைக் கட்டச் சொல்வது, அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் மருத்துவமனை நிர்வாகங்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சினைகள் குறித்து புகார் செய்தால் அதனை நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை. மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகங்களிடமே பேசிக் கொள்ளுங்கள் என்றும் அலட்சியமாக கூறுகின்றனர். இதனால் சிகிச்சை பெறும் ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த நிலையில் தமிழக அரசின் உன்னதமான திட்டமான புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






