search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Art Gallery"

    • ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குதிரைகுளம் ஊராட்சி, ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதேப்போல் சில்லாங்குளம் ஊராட்சி, பரமன் பச்சேரி கிராமத்தில் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணியையும், தெற்குகல்மேடு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணி, ஆகியவற்றுக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ, மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,

    குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் விநாயகம், முத்துமணி, எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, கல்மேடுராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சத்யராஜன், தளவைராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், கிளைச் செயலாளர் சக்கையா, சண்முகபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார்.
    • பணிகளை விரைந்து தரமாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் காந்திஜி சாலை அருகே ராணி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் கல்லணை கால்வாய் நடைப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.இதையடுத்து சிவகங்கை பூங்காவில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் பெத்தண்ணன் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார் . பணிகள் அனைத்தையும் விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • செம்பனூர் ஊராட்சியில் புதிய கலையரங்கத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சிக்குட்பட்ட செம்பனூர் ஊராட்சியில் உள்ள நாச்சியப்பன் செட்டியார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கினார். இதையடுத்த அந்த இடத்தில் 2020-21-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதி திட்டத்தின்படி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ 7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    இதனை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா, கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செம்பனூர் அரசு பள்ளியில்12, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

    • நரிக்குடி அருகே கலையரங்கம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இந்திராநகர், கணையமறித்தான் மற்றும் கட்டனூர் ஆகிய பகுதிகளில் ரூ.18 லட்சம் மதிப்பில், கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டி ற்காக திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் கமலி பாரதி, பாப்பா போஸ், தங்க தமிழ்வாணன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×