புதிய கலையரங்கத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

செம்பனூர் ஊராட்சியில் புதிய கலையரங்கத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.
புதிய கலையரங்கத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சிக்குட்பட்ட செம்பனூர் ஊராட்சியில் உள்ள நாச்சியப்பன் செட்டியார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கினார். இதையடுத்த அந்த இடத்தில் 2020-21-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதி திட்டத்தின்படி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ 7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

இதனை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா, கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செம்பனூர் அரசு பள்ளியில்12, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com