search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger Shelter"

    • நிழற்குடை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
    • சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள மலை கிராம பகுதி யான திங்களூர் பஞ்சாயத்து 8 கிராமங்களை உள்ளடக்கியது.

    இதில் தொட்டிகாடட்டி செல்லும் மக்களு க்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. பல வருடமாக இருக்கும் இந்த நிழற்குடை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    பெய்த கனமழையால் மேற்கூரைகள் பெய்து எப்பொழுது வேண்டு மானாலும் இடியும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த நிழற்குடையில் நிற்கும் பயணிகள் ஒருவித அச்சத்து டன் நின்று வருகின்றனர்.

    இது பற்றி திங்களூர் ஊராட்சி யில் பலமுறை கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

    மேலும் கிராம சபை கூட்டத்திலும் இந்த நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்த னர்.

    பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்து பெரிய அசம்பா விதம் ஏற்படுவதற்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கின்றன.
    • பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது சாலையின் இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தும், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றியும் அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக 43 வீடுகள் இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீடுகளை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்வதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் 43 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் முழுவதுமாக இடிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து விடிய விடிய காத்திருந்தனர். மேலும் ஏதேனும் வீடுகள் இடிக்கப்பட உள்ளதா? என பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    தற்போது முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

    மேலும் 43 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள், எங்கள் வீடுகளை இடிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது போல் எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு எங்கள் வீடுகளை இடிப்பதற்கு அனுமதிப்போம். இதற்கான நடவடிக்கை காலதாமதம் ஆனால் தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஆகையால் மாவட்ட நிர்வாகம் எங்களது அடிப்படை கோரிக்கையான மாற்று குடியிருப்பை உடனடியாக அதற்கான சான்று வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • கோவில்பட்டி பிரதான சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயணிகள் நிழற்குடையையும், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பிரதான சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது. கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயணிகள் நிழற்குடையையும், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, பிரதான சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடையில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், அய்யாதுரை பாண்டியன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி, யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி,

    வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி, நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத் துரை, முன்னாள் துணை சேர்மன் ராமர், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, ஜெயலலிதா பேரவை பழனிக்குமார், கோபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் கோவில்பட்டியில் உள்ள நீர்வரத்து ஓடையில் 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவு பெற்று ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டு மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்தோம். அதைத் தொடர்ந்து நீர்வரத்து ஓடையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு செய்து ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தற்போது நீர் வரத்து ஓடையின் மீதுள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டதுக்கு மாறாக தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் வருகின்றன. இது தொடர்பாக நான் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளேன். நீதிமன்ற உத்தரவுப்படிதான் இங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    ஆனால் அதனை மீறி தடுப்புச் சுவர் என்ற பெயரில் தற்போது ஆக்கிரப்பு பணிகள் நடந்தால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். எனவே தவறு இருந்தால் அதிகாரிகள் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

    தமிழக நிதி அமைச்சருக்கு அமெரிக்காவின் பொருளா தாரம் தெரியுமே தவிர தமிழகத்தின் பொருளாதாரம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் என்ன ஆக்கபூர்வமாக நிதிச் சுமையை கையாளுவதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ஒரு மாறுதலையும் அவர் கொண்டு வரவில்லை. அவர் பி.டி.ஆர். வாரிசு என்பதால் திராவிட பரம்பரையாக இருக்கலாம். ஆனால் அவர் வளர்ந்தது படித்தது எல்லாம் மேலைநாட்டில் தான். அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணியாற்றியவர்.

    அந்தப் பொருளாதாரத்தை மனதில் கொண்டு இங்கு செயல்படுகிறார். இங்குள்ள மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அவரது பொருளாதாரத்துவம் இல்லை. இப்படியே இவர் இருந்தால் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதில் முதல் வேலையை செய்கின்றவராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, அரசு உயர் நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவைகளும் பிக்கட்டி பகுதியில் அமைந்துள்ளது.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் நிழற்குடையின் மேற்கூரை பழுதடைந்தது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பிக்கட்டி. இதை சுற்றிலும் முள்ளிகூர், கெரப்பாடு, ஒசட்டி, பாரதியார்புதுார், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் பிக்கட்டி பகுதிக்கு சென்று அங்கிருந்து அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களில் நகர பகுதிக்கு சென்று வர வேண்டும்.

    இது தவிர கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, அரசு உயர் நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவைகளும் பிக்கட்டி பகுதியில் அமைந்துள்ளது. பிக்கட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை ஒட்டி பஸ் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார்துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அரசு பஸ்கள் வரும் வரை மேற்படி நிழற்குடையில் காத்திருப்பார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் நிழற்குடையின் மேற்கூரை பழுதடைந்தது. இதை தொடர்ந்து பழுதடைந்த மேற்கூரை இடித்து அகற்றப்பட்டது.

    இந்நிலையில் மேற்கூரை அகற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது.

    மழை நேரங்களில் பஸ்கள் வரும் வரை நனைந்தபடியே சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் நலன் கருதி உடனடியாக நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நரிக்குடி அருகே கலையரங்கம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இந்திராநகர், கணையமறித்தான் மற்றும் கட்டனூர் ஆகிய பகுதிகளில் ரூ.18 லட்சம் மதிப்பில், கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டி ற்காக திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் கமலி பாரதி, பாப்பா போஸ், தங்க தமிழ்வாணன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது.
    • அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகிறது.

    திருப்பூர் :

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டன. தொற்று பாதிப்பு முற்றிலும் குறைந்ததால் நடப்பு கல்வியாண்டில் இருந்து, வழக்கம்போல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.அதற்கேற்ப பாட வகுப்புகள், விளையாட்டு, தேர்வு உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் இடைப்பருவத்தேர்வு துவங்கியது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை நீக்க, பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி முதல் இடை பருவத்தேர்வுக்கு மாவட்ட அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 11:15 மணி முதல் 12:45 மணி, மதியம்3மணி முதல் 4:30 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது.28-ந்தேதி கணக்கு மற்றும் தமிழ் பாடத்தேர்வு எழுதினர். 29-ந்தேதி அறிவியல் மற்றும் ஆங்கிலம் தேர்வு எழுதினர்.

    1-ந்தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல 28-ந்தேதி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், கணிதம், தாவரவியல், வணிகவியல், ஆங்கிலம் தேர்வு எழுதினர்.29-ந்தேதி இயற்பியல், வர்த்தகம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, புள்ளியியல் தேர்வு எழுதினர்.

    1-ந்தேதி புவியியல், விலங்கியல், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியியல், வரலாறு மற்றும் தமிழ்த்தேர்வு 2-ந்தேதி இயற்பியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வும் நடத்தப்படுகிறது.மேலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ந்தேதி தொடங்கும் தேர்வு 5ந் தேதி முடிவடையும். இவர்களுக்கான வினாத்தாள் அந்தந்த பள்ளி அளவிலேயே தயாரிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×