இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை

நிழற்குடை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள மலை கிராம பகுதி யான திங்களூர் பஞ்சாயத்து 8 கிராமங்களை உள்ளடக்கியது.

இதில் தொட்டிகாடட்டி செல்லும் மக்களு க்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. பல வருடமாக இருக்கும் இந்த நிழற்குடை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பெய்த கனமழையால் மேற்கூரைகள் பெய்து எப்பொழுது வேண்டு மானாலும் இடியும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த நிழற்குடையில் நிற்கும் பயணிகள் ஒருவித அச்சத்து டன் நின்று வருகின்றனர்.

இது பற்றி திங்களூர் ஊராட்சி யில் பலமுறை கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

மேலும் கிராம சபை கூட்டத்திலும் இந்த நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்த னர்.

பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்து பெரிய அசம்பா விதம் ஏற்படுவதற்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com