என் மலர்

  நீங்கள் தேடியது "Kadampur Raju MLA"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில்பட்டியில் ஓபன் கேட் நடனப்பள்ளியின் சார்பில் 9-வது ஆண்டு நடனப் போட்டி நிகழ்ச்சி மந்திதோப்பு சாலையில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டியில் ஓபன் கேட் நடனப்பள்ளியின் சார்பில் 9-வது ஆண்டு நடனப் போட்டி நிகழ்ச்சி மந்திதோப்பு சாலையில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மருத்துவர் காந்திராஜ், தொழிலதிபர் பெரியசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடனப்பள்ளி நிறுவனர் முத்து வரவேற்று பேசினார்.

  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகளும், சான்றிதழ்களையும், வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர்கள் பத்ம பிரகாஷ், நர்மதா தேவி, பாலமுருகன், துறை பத்மநாபன், யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, நகர ஜெயலலிதா பேரவை ஆபிரகாம் அய்யாதுரை, கோபி, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  சேலம் தங்கமாளிகை உரிமையாளரும், தொழிலதிபருமான பிரகாஷ், தொழிலதிபர் பிரண்ட் பேஜ் கார்மெண்ட்ஸ் உரிமையாளர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாணவி சாதனா நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில்பட்டி பிரதான சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது.
  • கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயணிகள் நிழற்குடையையும், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி பிரதான சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது. கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயணிகள் நிழற்குடையையும், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

  தொடர்ந்து, பிரதான சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடையில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், அய்யாதுரை பாண்டியன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி, யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி,

  வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி, நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத் துரை, முன்னாள் துணை சேர்மன் ராமர், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, ஜெயலலிதா பேரவை பழனிக்குமார், கோபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் கோவில்பட்டியில் உள்ள நீர்வரத்து ஓடையில் 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவு பெற்று ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டு மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்தோம். அதைத் தொடர்ந்து நீர்வரத்து ஓடையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு செய்து ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  தற்போது நீர் வரத்து ஓடையின் மீதுள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டதுக்கு மாறாக தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் வருகின்றன. இது தொடர்பாக நான் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளேன். நீதிமன்ற உத்தரவுப்படிதான் இங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

  ஆனால் அதனை மீறி தடுப்புச் சுவர் என்ற பெயரில் தற்போது ஆக்கிரப்பு பணிகள் நடந்தால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். எனவே தவறு இருந்தால் அதிகாரிகள் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

  தமிழக நிதி அமைச்சருக்கு அமெரிக்காவின் பொருளா தாரம் தெரியுமே தவிர தமிழகத்தின் பொருளாதாரம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் என்ன ஆக்கபூர்வமாக நிதிச் சுமையை கையாளுவதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

  ஒரு மாறுதலையும் அவர் கொண்டு வரவில்லை. அவர் பி.டி.ஆர். வாரிசு என்பதால் திராவிட பரம்பரையாக இருக்கலாம். ஆனால் அவர் வளர்ந்தது படித்தது எல்லாம் மேலைநாட்டில் தான். அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணியாற்றியவர்.

  அந்தப் பொருளாதாரத்தை மனதில் கொண்டு இங்கு செயல்படுகிறார். இங்குள்ள மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அவரது பொருளாதாரத்துவம் இல்லை. இப்படியே இவர் இருந்தால் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதில் முதல் வேலையை செய்கின்றவராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருப்பார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில்பட்டி யூனியன், இனாம்மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மீனாட்சி நகரில், கோவில்பட்டி சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.13.69 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
  • இப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி யூனியன், இனாம்மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மீனாட்சி நகரில், கோவில்பட்டி சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.13.69 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

  இப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகாலை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

  நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் சத்யா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ், யூனியன் துணைத் தலைவர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கட்சி நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜா, பழனிக்குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நீண்ட காலமாக உள்ள 10 முக்கியமான பிரச்னைகள் அல்லது குறைகள் குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
  • விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா மற்றும் அருப்புக்கோட்டை தொகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 10 கிலோமீடடர் தொலைவிலேயே அமைந்துள்ளது.

  கோவில்பட்டி:

  தமிழகத்தில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நீண்ட காலமாக உள்ள 10 முக்கியமான பிரச்னைகள் அல்லது குறைகள் குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

  புதிய மாவட்டம்

  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம், கோவில்பட்டி தொகுதிக்கு தேவையான திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுவை கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ வழங்கினார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

  தென்காசியில் உள்ள திருவேங்கடம் தாலுகாவில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா மற்றும் அருப்புக்கோட்டை தொகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 10 கிலோமீடடர் தொலை விலேயே அமைந்துள்ளது.

  எனவே இவற்றையெல்லாம் இணைத்து கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.

  கோவில்பட்டி நகரின் மெயின் ரோட்டில் சுமார் 70 ஆண்டுகாலமாக இருந்து வந்த நீரோடை ஆக்கிரமிப்புகள் பொதுமக்கள் நலன் கருதி 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. தற்போது இந்த நீரோடை, நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பாதுகாப்பு கருதி ஓடையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

  மருத்துவ கல்லூரி

  கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் ரூ. 4 கோடி மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

  கோவில்பட்டியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் இடத்தில் கால்நடை மருத்துவ கல்லூரியும் அமைக்க வேண்டும்.

  கோவில்பட்டியில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்க இடம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒப்புதல் வரை பெறப்பட்டுள்ளது. எனவே இங்கு அரசு விரைவாக செவிலியர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். இனாம்மணியாச்சி, இலுப்பையூரணி, பாண்டவர்மங்கலம், நாலாட்டி ன்புத்தூர், திட்டங்குளம், மந்தித்தோப்பு ஆகிய ஊராட்சிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர். இங்கு குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்திட தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும்.

  கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  ×