புதியம்புத்தூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பங்கேற்பு

கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். ஒன்றிய பகுதிகள் முழுவதிலும் உள்ள கிளைகளில் பூத் வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டது.
புதியம்புத்தூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பங்கேற்பு
Published on

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூரில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ஒன்றிய பகுதிகள் முழுவதிலும் உள்ள கிளைகளில் பூத் வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டது. இளைஞர் மற்றும் இளம்பெண், பாசறை, தகவல் தொழில் நுட்ப அணியினருடன் 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர், ஒன்றிய கவுன்சிலர்கள் கோபி, ஆலோசனை மரியான், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கண்ணன், போடுசாமி, வக்கீல் அணி பரமசிவம், ஜெயலலிதா, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பொன்ராஜ், தினேஷ், ஆதி லிங்கம், சின்னத்துரை, ஆறுமுகசாமி, கிருபானந்த முருகன், முத்துச்சாமி, புதியம்புத்தூர் சுப்பிரமணியன், ராமசாமி, தகவல் தொழில் நுட்ப அணி ராஜேஷ்குமார், கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com