கயத்தாறில் வீரசக்கதேவி ஆலயத்திற்கு தொடர் ஜோதி ஓட்டம்

கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.ஏற்பாடுகளை வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தொடர் ஜோதி ஓட்டத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
தொடர் ஜோதி ஓட்டத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
Published on

கயத்தாறு:

பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்க தேவி ஆலய 67-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி சார்பாக கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட மணி மண்டபத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு 39-ம் ஆண்டு ஜீவஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது.

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெய லலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளிபாண்டியன் மற்றும் ம.தி.மு.க. சார்பில் மாநில திருமண குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் முத்துப் பாண்டியன், நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சக்கையா, புதுப்பட்டி கிளை செயலாளர் ஹரிராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர் முத்தமிழ் செல்வம், இளைஞர் அணி பொருளாளர் செல்வ கட்டபொம்மு, துணைத்தலைவர் சந்தன மேகலிங்க ராஜ் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com