கோவில்பட்டியில் ரூ.7.50 லட்சத்தில் சாலைப்பணிகள் - கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

வீரவாஞ்சிநகர் 3-வது வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
திட்டக்குளம் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜு 
எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த காட்சி.
திட்டக்குளம் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி பகுதியில் வீரவாஞ்சிநகர் 3-வது வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, கோவில்பட்டி அருகே வடக்கு திட்டக்குளம் ஊராட்சியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3.50 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிசாமி, கவுன்சிலர் கவியரசன், ஆவின் தலைவர் தாமோதரன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் செல்வக் குமார், இனாம் மணியாச்சி ஊராட்சி வார்டு உறுப்பி னர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com