search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    கோவில்பட்டியில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

    கோவில்பட்டியில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • கோவில்பட்டி பிரதான சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயணிகள் நிழற்குடையையும், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பிரதான சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது. கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயணிகள் நிழற்குடையையும், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, பிரதான சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடையில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், அய்யாதுரை பாண்டியன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பக மூர்த்தி, யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி,

    வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி, நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத் துரை, முன்னாள் துணை சேர்மன் ராமர், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, ஜெயலலிதா பேரவை பழனிக்குமார், கோபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் கோவில்பட்டியில் உள்ள நீர்வரத்து ஓடையில் 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவு பெற்று ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டு மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்தோம். அதைத் தொடர்ந்து நீர்வரத்து ஓடையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு செய்து ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தற்போது நீர் வரத்து ஓடையின் மீதுள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டதுக்கு மாறாக தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் வருகின்றன. இது தொடர்பாக நான் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளேன். நீதிமன்ற உத்தரவுப்படிதான் இங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    ஆனால் அதனை மீறி தடுப்புச் சுவர் என்ற பெயரில் தற்போது ஆக்கிரப்பு பணிகள் நடந்தால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். எனவே தவறு இருந்தால் அதிகாரிகள் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

    தமிழக நிதி அமைச்சருக்கு அமெரிக்காவின் பொருளா தாரம் தெரியுமே தவிர தமிழகத்தின் பொருளாதாரம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் என்ன ஆக்கபூர்வமாக நிதிச் சுமையை கையாளுவதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ஒரு மாறுதலையும் அவர் கொண்டு வரவில்லை. அவர் பி.டி.ஆர். வாரிசு என்பதால் திராவிட பரம்பரையாக இருக்கலாம். ஆனால் அவர் வளர்ந்தது படித்தது எல்லாம் மேலைநாட்டில் தான். அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணியாற்றியவர்.

    அந்தப் பொருளாதாரத்தை மனதில் கொண்டு இங்கு செயல்படுகிறார். இங்குள்ள மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அவரது பொருளாதாரத்துவம் இல்லை. இப்படியே இவர் இருந்தால் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதில் முதல் வேலையை செய்கின்றவராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×