என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்வாயை அடைத்து சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கால்வாயை அடைத்து புதிய சாலை அமைக்கும் பணி
- கால்வாயை அடைத்து புதிய சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- இது தொடர்ந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சாக்கோட்டை-பாராவயல் சாலையில் மணியாரம்பட்டி முதல் கள்ளமணக்குடி வரை 1400 மீட்டர் தூரத்திற்கு சாலை அகலப்படுத்தி பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தொடக்கத்தில் இடதுபுறம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்த நிலையில் வழியில் இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் வலதுபுறமாக சாலையை அகலப்படுத்தும் பணி நடந்துள்ளது. மேலும் இடதுபுறம் இருந்துவரும் கால்வாயை அடைத்து பணி நடந்து வருவதால் கண்மாய்க்கு நீர்வரத்து தடைபட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் எம்.சாண்ட் துகள்களை பயன்படுத்தி சாலைப்பணி நடந்து வருவதால் சில நாட்களிலேயே சாலை சேதமடைந்துவிடும் என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கால்வாயை அடைத்து பணி நடந்து வருவதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலை அகலப்படுத்தும் பணிக்கு உரிய அனுமதி பெறாமல் கண்மாயில் இருந்து மண் அள்ளப்படுவதோடு, விவசாயத்திற்கு பயன்படுத்தும் கண்மாய் நீரையும் மோட்டார்களை வைத்து அள்ளி சாலைப்பணிக்கு பயன்படுத்துகின்றனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை உடனடியாக தடுக்க வேண்டும்.
100 மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணியை முடித்துவிட்டு அடுத்த 100மீட்டர் தோண்ட வேண்டும். ஆனால் மொத்தமாக தோண்டி பணி நடப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்திக் சிக்குவதோடு வாகனங்கள் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இது தொடர்ந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






