என் மலர்
சிவகங்கை
- மது போதையில் பெண்ணை மிரட்டிய இருவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி புஷ்பவல்லி. இவரது மகள் பள்ளி முடிந்து செம்பூர் கண்மாய் கரையில் நடந்து சென்றபோது அரசனூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் கோகுல் ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று சிறுமியின் முதுகில் அடித்துள்ளார்.
இது பற்றி அவரது தாயார் கேட்டபோது கோகுல்ராஜா மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகப்பன் மனைவி ராஜலட்சுமி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஊமச்சிகுளத்தில் உள்ள வீட்டின் சாவியை கேட்டு முருகப்பன் மனைவி ராஜலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசில் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி விடுதிகளில் சேருவதற்கு மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
- சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்து றையின் கட்டுப்பாட்டின் கீழ், 7 கல்லூரி விடுதிகள்
(3 மாணவர்கள் விடுதிகள், 4 மாணவிகள் விடுதிகள்) செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ- மாணவிகள் சேர்ந்து பயனடையலாம்.
இதற்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்களின் வீட்டிற்கும் கல்லூரிக்கும் உள்ள தூரம் 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.
(பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூரில் பணி புரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது).
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் 85 சதவீத மும், மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், பிற வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படு கின்றனர்.
மாணவ- மாணவி களுக்கு விடுதிகளில்3 வேளைகளில் தரமான உணவு வழங்கப்படுகிறது. 2023-24-ம் ஆண்டிற்கு தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போட் சைஸ் போட்டோ-3, வங்கிக்கணக்கு புத்தக நகல். சாதிச்சான்று, வருமான சான்று, பள்ளி மாற்று சான்று, நன்னடத்தை சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கல்வி நிலையத்தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 30-ந் தேதி வரை ஒப்படைத்து விட்டு https://tnadw.hms.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
- திருப்புவனம் ஊராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆண்டாய்வு மேற்கொண்டனர்.
- அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அந்த ஊராட்சி ஒன்றி யங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆண்டாய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவை சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவை யிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்தார்.
மேலும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பரா மரிக்கப்பட்டு வரும் பதி வேடுகள் தொடர்பாகவும், அலுவலக பணியா ளர்களின் வருகைப் பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் குறித்தும் கலெக்டர் கேட்ட றிந்தார்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது உதவி திட்ட அலுவலர் (மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம்) சித்ரா, அலுவலக மேலாளர் (வளர்ச்சி) திருப்பதிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, ராஜசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமை தாங்கினார்.
முகாமில் நாச்சியாபுரம், திருப்பத்தூர், கண்டவராயன்பட்டி ஆகிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராஜ், செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி, சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது.
- ராமநாதபுரம் சரக துணைத்தலைவர் துரை தலைமை தாங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் ராமநாதபுரம் சரக காவல்துறை துணைதலைவர் துரை தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் புதிதாக கொடுக்கப்பட்ட 32 மனுக்களுக்கும், மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, மாவட்ட ஆட்சித் தலைவரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெறப்பட்ட மனுக்கள் என நிலுவையில் இருந்த 7 மனுக்கள் என மொத்தம் 39 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
- சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. , முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், நகர செயலாளர்கள் ராஜா, மெய்யப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, சேவியர்தாஸ், அருள் ஸ்டீபன், கோபி, சிவ சிவ ஸ்ரீதர், சிவாஜி, சோனைரவி, ஜெகதீஸ்வரன் பாரதிராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு மாவட்ட மகளிரணி வெண்ணிலாசசிகுமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலா ஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் அதிக விலை கேட்டால் அ.தி.மு.க.வினர் தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்ட ர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- கல்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- தீர்மானங்களை ஊராட்சி செயலர் வாசித்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டம் தலைவி யாஸ்மின் தலைமை யில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவி பானு வனிதா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை ஊராட்சி செயலர் வாசித் தார்.
கூட்டத்தில் துணைத்தலைவி பானுவனிதா, வார்டு உறுப்பினர்கள் மகாலட்சுமி, மலைச்சாமி ஆகியோர் பேசியதாவது:-
கல்குறிச்சி ஊராட்சியில் வள ர்ச்சி திட்டப்ப ணிகள் நடைபெற வில்லை. எங்கள் பகுதியில் அடிப்படைவசதி இல்லை. குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே நடை பெற்ற கூட்டங்களில் நிறை வேற்றிய தீர்மானங்களின் படி வளர்ச்சி திட்டப்பணி கள் மேற்கொள்ள உறுப்பி னர்கள் ஒப்புதல் தெரி வித்தும் எந்தப்பணியும் நடைபெறாமல் உள்ளது.
கல்குறிச்சி ஊராட்சியில் நிதி முறைகேடு நடத் துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம். முறைகேடு ெதாடர்பாக தலைவி யாஸ்மின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர். இதற்கு ஊராட்சிச் செயலர் மறுத்து விட்டார். இதையடுத்து துணைத்தலைவர் பானுசித்ரா, வார்டு உறுப்பினர்கள் சத்திய வாணிமுத்து, மலைச்சாமி, மகாலட்சுமி, பூமா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவி யாஸ்மின் கூறுகையில், சிலரது தூண்டுதலின் பேரில், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்கின்றனர். கல்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்களுக்கான அனைத்து திட்டப்பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.
- திருப்பத்தூரில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்கம்பங்களில் ஏறி விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் கடந்த சில தினங்களாக 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டுள்ளன. குரங்குகளின் தொல்லை யால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
நகரின் முக்கிய வீதிகளான பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, 4 ரோடு, கூகல் பெர்க் சாலை, காளியம்மன் கோவில் தெரு, அக்னி பஜார், சீதளி வடகரை, தேரோடும் வீதி, ஆறுமுகம் பிள்ளை தெரு, தென்மாட்டு ஆகிய பகுதிகளில் சுற்றி திரிகின்றன. வீட்டின் கதவுகள் திறந்திருந்தால் உள்ளே புகுந்து மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை குரங்குகள் எடுத்து செல்கின்றன.
மேலும் அருகாமையில் உள்ள கடைவீதி மற்றும் உழவர் சந்தையிலும் காய்கறி கள், பழங்கள், திண்பண்டங்களை தின்று சூறையாடி வருகின்றன. வீதிகளில் இருக்கும் மின்கம்பங்களில் ஏறி மின் வயர்களில் குரங்குகள் விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்க ளில் வருபவர்களையும் பொருட்களை கொண்டு செல்போர்களையும் குரங்குகள் அச்சுறுத்து கின்றன.
இப்படி நாள்தோறும் பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்கு களை பிடித்து வனபகுதியில் அதனை கொண்டு சென்று விட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
- சிவகங்கையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக்குழு கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் நடந்தது.
- மத்திய-மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது. கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தேசிய சமூக உதவித்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக குடிநீர் வழங்கல் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மத்திய-மாநில அரசின் பல்வேறு திட்டங் கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் வெண்ணிலா, அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்திற்கு சட்ட பேரவை உறுதிமொழிக்குழு நாளை வருகை தருகிறது.
- அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறும்.
சிவகங்கை
தமிழ்நாடு சட்ட பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான அரசு உறுதிமொழி குழுத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி , பழனியாண்டி , மணி , மனோகரன், மோகன் , ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார் ஆகியோருடன் வருகிற நாளை (22-ந்தேதி) சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமும் நடைபெறும். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
- அருப்புக்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
- மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டை
உலக யோகா தினத்தை முன்னிட்டு அருப்புக் க்கோட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்லூரியில் யோகா தினம் கொண்டா டப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு மன வளக்கலை மன்றத்தி னர் யோகா பயிற்சியை செய்து காட்டினர்.
மாணவ-மாணவிகளும் இந்த பயிற்சியில் பங்கேற்ற னர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர். முத்து தினகரன், முதல்வர் செல்லத்தாய், துணை முதல்வர் பால் ஜாக்குலின் பெரியநாயகம் மற்றும் மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த தலைவர் ஜோதிமணி, முத்து முருகன், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.
- ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
- ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவன் கோவில் எதிரே ம.தி.மு.க. சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார் பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என ஆர்.என்.ரவி கூறுவதாகவும் பா.ஜ.க. அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி விட்டார் எனக்கூறி ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. நகர செயலாளர் திவான் சக்கரவர்த்தி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






