என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது போதையில் பெண்ணை மிரட்டிய இருவர் மீது வழக்கு
- மது போதையில் பெண்ணை மிரட்டிய இருவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி புஷ்பவல்லி. இவரது மகள் பள்ளி முடிந்து செம்பூர் கண்மாய் கரையில் நடந்து சென்றபோது அரசனூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் கோகுல் ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று சிறுமியின் முதுகில் அடித்துள்ளார்.
இது பற்றி அவரது தாயார் கேட்டபோது கோகுல்ராஜா மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகப்பன் மனைவி ராஜலட்சுமி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஊமச்சிகுளத்தில் உள்ள வீட்டின் சாவியை கேட்டு முருகப்பன் மனைவி ராஜலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசில் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






