என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • அரசு பஸ்- லாரி மோதல்; 32 பயணிகள் உயிர் தப்பினர்.
    • எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருப்பத்தூர்-மதுரை நெடுஞ்சாலையில் அதிகாலை 5.30 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. இதில் 32 பயணிகள் இருந்தனர்.

    எதிர்திசையில் மதுரை யில் இருந்து தேவ கோட்டை நோக்கி சரக்கு லாரி அதி வேகமாக வந்தது. எஸ்.எஸ்.கோட்டை சிவல்பட்டி பிரிவு அருகே வந்தபோது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது.

    இருப்பினும் அரசு பஸ் டிரைவர் சேகர் சுதாரித்துக் கொண்டு சாதுரியமாக செயல்பட்டதால் சாலையோர தடுப்பில் மோதி பஸ் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த 32 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய லாரியின் முன்பகுதி நொறுங்கியது. சரக்கு லாரியின் டிரைவர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தின் வழியாக அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் காரில் தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் விபத்து நடந்திருப்பதை பார்த்தவுடன், தனது காரில் இருந்து இறங்கிச்சென்று அரசு பஸ்சின் டிரைவர் சேகர் மற்றும் கண்டக்டரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் பழமை சொர்ண மூர்த்தீசுவரர் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த கோவிலில் வருடம் தோறும் ஆனி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    திருவிழாவையொட்டி கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் தேர் திருவிழா பிரிசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இன்று மாலை காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.

    தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடைபெறும். அம்பாளுக்கு 5-ம் நாள் அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாள் நடைபெறும். இக்கோவிலின் தேர் பழுதானதால் தேரோட்டம் பல ஆண்டு களாக நடைபெறாமல் இருந்தது. தற்பொழுது புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.

    • திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் 3 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.
    • நகர் மன்ற தலைவருமான மாரியப்பன் கென்னடி, தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு 12 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 9 பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் 3 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் 3 வேட்பாளர்களும், ஒரு அ.ம.மு.க. வேட்பாளரும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராமநாதன், பாலமுருகன், சித்ரா தேவி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர். இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் ஒட்டுமொத்த 12 உறுப்பினர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    இந்த திட்டக்குழு உறுப்பினர்களுக்கு தலைவராக மாவட்ட சேர்மனும், துனை தலைவராக கலெக்டரும் தொடர்வார்கள். தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகர் மன்ற தலைவர் துரைஆனந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நகர் மன்ற தலைவருமான மாரியப்பன் கென்னடி, தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மானாமதுரை நகராட்சி வளமீட்பு பூங்காவில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவின்பேரில் ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்குவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சுரைக்காய், பூசணிக்காய், பலாப்பழம் ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், மேற்பார்வையாளர் கார்த்திக், ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் படைவீரர்களுக்கான கருத்தரங்கு-குறைதீர் கூட்டம் நடந்தது.
    • இரட்டைப்பிரதிகளில் வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 4.30 மணிக்கு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கும் கருத்தரங்கு-குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    முன்னதாக நடக்கும் கருத்தரங்கில் சுயதொழில்களுக்கு வாய்ப்புகள் குறித்து, பல்வேறு துறை அலு வலர்கள் உரையாற்ற வுள்ளார்கள். எனவே, சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    அதனைத்தொடர்ந்து, நடைபெற உள்ள முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், சார்ந்தோர் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரரின் குடும்பத்தி னர்கள் தங்களது குறைக ளுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • கற்பக விநாயகர் ஆலையத்தில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது.
    • இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் பேட்டை உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி நாடார் பேட்டை நந்தவனத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 48-வது நாளையொட்டி மண்டலபிஷேகம் நடத்த உறவின் முறையால் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது. 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு நெல் மணிகளில் அடுக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    பூர்ணகுதியுடன் யாக வேள்விகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து சங்குகளில் ஊற்றப்பட்ட புனித நீரை கொண்டு சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கற்பக விநாயக பெருமாளுக்கு மகா அபிஷேம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் பேட்டை உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    • திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் தோல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெற்குப்பை கோட்டையிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நெற்குப்பை ஆரம்ப சுகாதார மையத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

    இந்த முகாமில் 404 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் தோல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ரத்த சோகை கண்டறியப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது. இதில் டாக்டர் ேஹமலதா, கண் மருத்துவர் ராதிகா, தோல் மருத்துவர் முத்துசாமி, உதவியாளர் வெற்றிவேல், ஆய்வக நிபுணர் கவுதமன், வள்ளிக் கண்ணு, கற்பகவல்லி, வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தின விழா நடந்தது.
    • புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    காரைக்குடி

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் சத்யன் தொடங்கி வைத்தார்.

    நிர்வாக இயக்குநர் சங்கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தலைமை அதிகாரி சங்கர்குமார் ஜா கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை மேம்படுத்த யோகா உதவுகிறது. உலகெங்கிலும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    தொடர்ந்து விழாவில் மாணவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து தனி திறமைகளை வெளிப்படுத்தினர். புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    விழாவை பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். முதல்வர் தேவராஜூலு நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் ரூ.4.89 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை இக்குழு ஆய்வு செய்து மக்களிடம் சேர்ப்பதே முக்கிய நோக்கம்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறைகளின் கீழ் திட்டப்பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இதில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜீத் முன்னிலை வகித்தார்.

    சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு உறுப்பி னர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி , மனோகரன், ராமலிங்கம், வில்வநாதன், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அறிவிக்கும் திட்டப்பணிகள் ஆகியவை உறுதிமொழியாக கருதப்படுகிறது. இதனை முழுமையாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களின் முக்கிய பங்கு ஆகும். தமிழக அரசு அறிவுத்துள்ள திட்டங்களை இக்குழு ஆய்வு செய்து மக்களிடம் சேர்ப்பதே முக்கிய நோக்கம்.

    அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் மற்றும் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் உறுப்பினர்களுடன் மாவட்டத்தில் ரூ.4.89கோடி மதிப்பில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகளை கள ஆய்வு செய்தார். மேலும் ரூ20.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    • தேவகோட்டை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பின்னாலங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா இவருக்கும். காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கருணா நிதி என்பவரின் மகன் துரைமுருகனுக்கு கடந்த 2019-ல் திருமணம் நடை பெற்றது.

    இந்த நிலையில் துரை முருகன் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு ஐஸ்வரியாவை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

    கணவர் ஐஸ்வர்யாவை கடுமையாக தாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜஸ்வரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து குன்றங்குடி போலீசில் ஐஸ்வரியா தாய் சுசிலா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜஸ்வரியா உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • அருண்குமார் என்பவர் குடிபோதையில் ஆபாசமாக பேசி உள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜ கம்பீரம் காலணியை சேர்ந்தவர் ராஜா. இவரது தங்கை ரயில்வே கேட் பக்கத்தில் இயற்கை உபாதைக்கு சென்றதை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் குடிபோதையில் ஆபாசமாக பேசி உள்ளார்.

    இதனை ராஜா தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் ராஜாவை ஆபாசமாக பேசி அறிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பம் குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விதிகளை மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

    இளையான்குடி

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் கடந்த 2 நாட்களாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது. கண்மாய் கரையில் இருந்து சாலையூர் பகுதி முழுவதும் இருந்த ஆக்கிர மிப்புகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப் பட்டன.

    இளையான்குடி தாசில் தார் கோபிநாத், நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம் ஷா, உதவி பொறியாளர் முரு கானந்தம், சாலை ஆய்வா ளர்கள் ராஜ்குமார், செல்வி, இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் முன்னி லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    ஆனால் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் வருவாய் துறையினர் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அளவீடுகள் சரியாக செய்யப்படாமல் கட்டிடங் கள் இடிக்கப்படுவதாகவும் பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். மறு அளவீடு செய்து ஆக்கிர மிப்புகள் அகற்ற வேண்டும் என்றனர்.

    ×