என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்டதேவி சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் ஆனி திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் திருவிழா தொடங்கியது
- சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் பழமை சொர்ண மூர்த்தீசுவரர் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த கோவிலில் வருடம் தோறும் ஆனி திருவிழா சிறப்பாக நடைபெறும்.
திருவிழாவையொட்டி கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் தேர் திருவிழா பிரிசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இன்று மாலை காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடைபெறும். அம்பாளுக்கு 5-ம் நாள் அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாள் நடைபெறும். இக்கோவிலின் தேர் பழுதானதால் தேரோட்டம் பல ஆண்டு களாக நடைபெறாமல் இருந்தது. தற்பொழுது புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.






