அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாணவ-மாணவிகளுக்கு கேடயம் பரிசு வழங்கப்பட்டது.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
Published on

மானாமதுரை

மானாமதுரையில் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுவின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைவர் லட்சுமணன் வரவேற்றார். திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுத்தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். செர்டு சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் பாண்டி மாணவ-மாணவிகளுக்கு கேடயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.

இதில் சுய உதவிக்குழு செயலர் நாகலிங்கம், ஓய்வுபெற்ற முது நிலை கணக்கு அலுவலர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் நதியா செல்வம், சிவகங்கை தொல் நடைக்குழு ஆசிரியர் பயிற்றுநர் காளிராஜா, ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். முன்னதாக உதவி செயலர் அடைக்கலம் வரவேற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com