search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவகோட்டை வாரச்சந்தை கடைகளில் எடை மோசடி
    X

    தேவகோட்டை வாரச்சந்தை கடைகளில் எடை மோசடி

    • தேவகோட்டை வாரச்சந்தை கடைகளில் எடை மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • வியாபாரிகள் சந்தைக்கு வருகின்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் கண்டதேவி சாலையில் வாரச்சந்தை ஞாயிற்றுக் கிழமை செயல்பட்டு வரு கிறது. சிவகங்கை, ராமநாத புரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வியாபாரிகள் பல வகை காய்கறிகளை விற்பனை செய்ய சந்தைக்கு வருகின்றனர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகளை கொண்ட இந்த வார சந்தை யில் தேவகோட்டை சுற்றி யுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்கறி பழம் மீன் மற்றும் அத்தியாவசிய பொருட் களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வார சந்தையில் வாங்கும் பொருட்கள் எடை மிகுந்த குறைந்த அளவில் உள்ளது. அதனை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்ல வேண்டிய அவல ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வாங்கும் பொருட்கள் 800 கிராம் முதல் 900 கிராம் வரை மட்டுமே உள்ளது என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

    கடைக்காரர்கள் முத்திரையிடாத எடைக் கற்களை பயன்படுத்துவதால் எடை குறைப்பு அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மறைமுகமாக ஏமாற்றப்படுகின்றனர். எனவே தொழிலாளர் துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதி கடைகளில் உள்ள எடைக் கற்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×