search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Inspects"

    • காப்பிலியபட்டியில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் மறுசுழற்சி செய்யப்படும் உலர்க ழிவுகளை தரம்பிரிக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான காப்பிலியபட்டியில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் மறுசுழற்சி செய்யப்படும் உலர்க ழிவுகளை தரம்பிரிக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். மேலும் ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கடைகள், குழந்தைவேலப்பர் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கிரிவலப்பாதை, மின் மயானம் உள்ளிட்டவைகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

    இதில் வேலுச்சாமி எம்.பி., மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர்ரகுமான், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, ஆணையாளர் கணேஷ், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்
    • ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை பதிவுகளில் சில நேரங்களில் சிரமங்கள் ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது,

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 10 வட்டங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்கள் உள்ளன. குஜிலியம்பாறை மற்றும் திண்டுக்கல் மேற்கு வட்டங்களில் மட்டும் குடோன்கள் இல்லாமல் இருந்தது. அங்கும் குடோ ன்கள் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 300 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களை சீரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி குடோன்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேடசந்தூர் குடோனில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 36,000 ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து ரேசன் கடைகள் மூலம் தரமான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல் அரவை செய்வதற்காக 700 அரவை ஆலைகள் தேர்வு செய்யப்பட்டு கருப்பு, பழுப்பு நிற அரிசி இல்லாத வகையில் கலர்சாப்டர் பொருத்தப்பட்ட எந்திரங்கள் மூலம் தரமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

    ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை பதிவுகளில் சில நேரங்களில் சிரமங்கள் ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத பணிகள் முடிக்கவும், இன்னும் 9 மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • செல்போன் டவர் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களுக்காக பி.எஸ்.என்.எல். டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    வாராப்பூர் உள்வட்டம் மேலவண்ணாரியிருப்பு பகுதியில் பணிகளின் நிலை குறித்து அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தொலைத்தொடர்பினை மேம்படுத்திடும் பொருட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம், 4 டவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளின் மூலம் மேற்கண்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சுமார் 38 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த பகுதிகளில் நடந்து வரும் பணிகளை தரமான முறையில் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் தொடங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுபோன்று பொது மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக நேரில் என்னிடமோ, கலெக்டரிடமோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலமாகவோ கொடுக்கலாம். அந்த மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • புல்வெட்டிக்குளம் தூர்வாரப்படாமல் இருந்ததை பார்வையிட்டு உடனே தூர்வார அமைச்சர் உத்தர விட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சித்துறை இயக்குநர் கிரண்குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தமிழ்நாடு கூட்டுகுடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தக்ஷணாமூர்த்தி மற்றும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.13.31 கோடி மதிப்பீட்டில் வட்டக்கரடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, போடிநாயக்கனூர் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பரமசிவன் கோவில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.76.15 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடிவுற்று சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டப்பணிகளை ஆய்வு செய்து பின்னர் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    தேவாரம் பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்(2021-2022) கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் மேம்பாடு செய்தல் கட்டுமான பணி, கம்பம் நகராட்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி பங்களிப்புடன் ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 262 திறந்த வெளி கடைகள் மற்றும் 23 முன்புற கடைகள் ஏ.டி.எம். எந்திரம், கேண்டீன் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    லோயார்கேம்ப் பகுதியில் மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1295 கோடி தலைமை நீரேற்றும் நிலையம் அமைத்தல் மற்றும் தலைமை நீரேற்று நிலையம் முதல் பண்ணைப்பட்டி நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை பிரதான குடிநீர் குழாய் அமைத்தல் பணிக்காக கீழ் ரூ.357.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    வைகை அணையிலிருந்து கடமலைக்குண்டு மயிலாடும்பாறை பகுதியில் உள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.141.13 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 21.3 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆண்டிபட்டி அருகில் உள்ள குருவியம்மாள்புரத்தில் ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டனர்.

    இதில் மாவட்ட எஸ்.பி. பிர வீன்உ மேஷ்டோ ங்கரே, எம்.எல்.ஏ.க்கள் ராமகிரு ஷ்ணன், மகாராஜன், சரவணக்கு மார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செ ல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆண்டி பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் அமைச்சர் இ.பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொ ண்டார். வளர்ச்சி திட்டங்கள், பயனாளி களுக்கு செல்ல வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கொத்த ப்பட்டி புல்வெ ட்டி க்குளம் தூ ர்வார ப்படா மல் இருந்ததை பார்வையிட்டு உடனே தூ ர்வார உத்தர விட்டார்.

    • தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. இப்பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோஷ நிவர்த்தி பூஜைக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கோயிலில் நான்கு வீதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு தேரோடும் நான்கு வீதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் திருவெண்காடு ஊராட்சியில் தேரோடும் வீதி, மடவிளாக வீதி, உள்ளிட்ட பகுதியில் ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுவதை, அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    சாலையின் தரத்தினை சோதித்து ஆய்வு செய்தார்.பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரியிடம் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒப்பந்ததாரர்கள் பழனி, அகோரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×