என் மலர்
சிவகங்கை
ப.சிதம்பரம் கைதுக்கு கண்டனம் தெரிவித்து காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:
ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த காங்கிரசார் சிவகங்கை எம்.பி. அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக 1 கி.மீ. தூரத்தில் உள்ள பெரியார் சிலை பகுதிக்கு வந்தனர்.
அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை செய், விடுதலை செய், ப.சிதம்பரத்தை விடுதலை செய்; கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் ப.சிதம்பரம் கைதை கண்டிக்கிறோம்; மோடி-அமித்ஷா ஒழிக என்று கோஷம் எழுப்பினார்கள்.
போலீஸ் ஏ.டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜரத்தினம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் மாங்குடி, மாவட்ட நிர்வாகி குமரேசன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த காங்கிரசார் சிவகங்கை எம்.பி. அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக 1 கி.மீ. தூரத்தில் உள்ள பெரியார் சிலை பகுதிக்கு வந்தனர்.
அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை செய், விடுதலை செய், ப.சிதம்பரத்தை விடுதலை செய்; கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் ப.சிதம்பரம் கைதை கண்டிக்கிறோம்; மோடி-அமித்ஷா ஒழிக என்று கோஷம் எழுப்பினார்கள்.
போலீஸ் ஏ.டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜரத்தினம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் மாங்குடி, மாவட்ட நிர்வாகி குமரேசன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி ஊராட்சிக்குட்பட்ட பல பகுதியில் மத்திய, மாநில தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பண்டைய தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் 4 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன. அதில் செங்கற்களால் பெரிய சுவர்கள், தண்ணீர் தொட்டிகள், மருத்துவ குடுவைகள், இரும்பினால் ஆன ஈட்டிகள், கத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை சிறிய பானைகள், ஓடுகள், வட்ட வடிவிலான பெரிய பானை, இரும்பு பொருட்கள், எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், செம்பினால் ஆன பொருட்கள், செப்பு காசுகள், சிறிய அடுக்கு சுவர், நீளமான சுவர், இரட்டைச்சுவர், வட்ட சுவர், 8 அடுக்கு உறைகிணறு உள்பட 650 பொருட்கள் கிடைத்தன. மேலும் தற்போது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்புவனம் பகுதியில் பலத்த மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் இந்த ஆராய்ச்சி பணிகள் தற்போது பாதிக்கப்பட்டு முடங்கிய நிலையில் உள்ளன.
இதையடுத்து அந்த குழிகளில் தேங்கிய தண்ணீரை வாளிகள் மூலம் இறைத்து அப்புறப்படுத்தி அந்த தண்ணீரை அங்கிருந்து மின் மோட்டார் மூலம் அருகே உள்ள தோட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச்சுவர் உள்ள பகுதியில் தேங்கிய மழைநீரை மின் மோட்டார் மூலம் வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சில குழிகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த இடம் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.
மேலும் கண்டுபிடிக்கப்பட்ட இட்டைச் சுவர் அமைந்துள்ள குழியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஈரப்பதத்தை காய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து மழை நின்ற பின்னர் வெயில் அடித்தால் மட்டும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறும் நிலை உள்ளது.

மானாமதுரையில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் அரசு பஸ்சை ஓட்டியதாக டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை:
மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள மானாமதுரை நகரம் வழியாக தினசரி 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, ஈரோடு, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ராமேசுவரம், கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மானாமதுரை வழியாக அரசு பஸ்கள் சென்று வருகின்றன. மானாமதுரை நகருக்கு சமீபத்தில் சென்னையில் இருந்து பதவி உயர்வில் சிவசங்கரநாராயணன் என்பவர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பதவியேற்றார். மானாமதுரையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.100-ல் இருந்து ரூ.1,000 வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். தினசரி அவரது தலைமையில் போக்குவரத்து போலீசார் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை, தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவசங்கர நாராயணன் தலைமையிலான போலீசார், மானாமதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தல்லாகுளம் முனீஸ்வரர் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். பின்னர் டிரைவரிடம் ‘சீட் பெல்ட்’ ஏன் அணியவில்லை என கூறி ரூ.100 அபராதம் விதித்தனர். இதேபோல் தனியார் பஸ்களுக்கும் அபராதம் விதித்தனர்.
அரசு பஸ்களில் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசு பஸ்களில் ‘சீட் பெல்ட்டே’ இல்லை. இந்நிலையில் அரசு பஸ்சை மறித்து ‘சீட் பெல்ட்’ அணியவில்லை என கூறி டிரைவருக்கு அபராதம் விதித்த சம்பவம் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்-அமைச்சர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
காரைக்குடி:
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரும், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஆர்.ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பொதுவாழ்வில் இருப்பவர் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம். டெல்லியில் தவிர்க்க முடியாத நபர்களில் ஒருவராக திகழ்கிறார். ஆசியாவின் சிறந்த நிதி மந்திரி என்று பெயர் பெற்ற அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
அதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். முதல்-அமைச்சர் தனது பேட்டியில் ப.சிதம்பரம் இந்த நாட்டிற்கு என்ன நன்மை செய்துள்ளார் என்றும், தமிழ்நாட்டில் எத்தனை முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக பொருளாதாரமே முடங்கி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆடிப்போயிருந்த நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு வகைப்படுத்தி இந்தியா முழுமைக்கும் விவசாய கடன்களை ரத்து செய்து, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கி சாதனை படைத்தவர் ப.சிதம்பரம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அவர் பதவியில் இருந்தபோது தமிழகத்தில் அதிகமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்பதை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேலாவது அவர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்வார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத உணர்வுக்கு எதிராக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்படுவதாக பா.ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
காரைக்குடி:
பா.ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பூமிக்கு பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதனை வரவேற்கிறேன்.
பல ஆண்டுகள் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தொகுதி மக்களுக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. தேசத்துக்கு எதிராக அவர் பேசி வருகிறார். எனவே அவர் பூமிக்கு பாரம் தான்.
காஷ்மீர் நடவடிக்கையை காங்கிரஸ் எம்.பி.க்களே வரவேற்று உள்ளனர். ரஜினியும் வரவேற்றுள்ளார். தேசபக்தி உள்ளவர்கள் இதனை ஆதரித்துள்ளனர்.
அண்மையில் மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கையில் கயிறு கட்டுவது இந்துக்களின் பழக்கம். எனவே இந்த சுற்றறிக்கையை அவர் திரும்பப்பெற வேண்டும்.
முன்பு பாடப்புத்தகத்தில் இந்தியா எனது தாய் நாடு என உறுதிமொழி இருந்தது. ஆனால் தற்போது இந்தியா என் நாடு என அச்சிடப்பட்டுள்ளது. இதை ஏன் பள்ளி கல்வி இயக்குநர் கவனிக்கவில்லை?
மத உணர்வுக்கு எதிராக செயல்படும் அவரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்.
கார்த்தி சிதம்பரம் அனுபவம் இல்லாமல் பாராளுமன்றத்தில் சென்றுள்ளார். அவர் ஒரு ஊழல் பெருச்சாளி.

மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றை மறைக்க முயல்கிறது என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.புகார் அளித்துள்ளார்.
காரைக்குடி:
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் உள்ளது. இதனால் அவர்கள் எதை வேண்டுமானா லும் அமல்படுத்தி வருகின்றனர்.
தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தை பா.ஜனதா அரசு திருத்தி உள்ளது. இனி மத்திய அரசுக்கு எதிராக எந்த கேள்வி கேட்டாலும் சரியான பதில் கிடைக்கப்போவதில்லை.
நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பாராளுமன்றத்தில் காவிரி-குண்டாறு திட்டம் குறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு இதுவரை இந்த திட்டத்திற்காக தமிழக அரசு நிதி கோரவில்லை என மத்திய அரசு தெரிவித்தது.
கடந்த 8 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது முதல்வர் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து பேசி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் 5 முறை முதல்- அமைச்சராக இருந்தவருக்கு சிலை வைக்க அனுமதி மறுக்கப்படுவது அரசின் ஒருதலைப்பட்ச செயல்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? என்பது பில்லியன் டாலர் கேள்வி? எனக்கு தெரிந்தவரை உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசுக்கு தைரியம் இல்லை என்று நினைக்கிறேன்.
ப.சிதம்பரம் குறித்து முதல்வர் பேசியது கண்டிக்கத்தக்கது.
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு பேச போதிய நேரம் தருவது இல்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயல்கிறது.

இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள மேலகுமிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்குமுத்து(வயது 36), ஆண்டி(50), இருளன்(28). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்திற்கு மரம் வெட்டும் வேலைக்காக சென்றனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் இருவேறு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். சங்குமுத்து மட்டும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், இருளன், ஆண்டி மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றனர். அவர்கள் இளையான்குடி இந்திராநகர் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற சங்குமுத்துவின் மோட்டார் சைக்கிளும், பின்னால் வந்த இருளன் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் கவிழ்ந்து 3 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இருளன் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை அருகே தொல்லியல் கள பகுதியை கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை தொல்லியல் புலம் அமைப்பினர்கள் பழமையான சின்னங்களான கல்வட்டம், முதுமக்கள் தாழி, பழந்தமிழர் வாழ்விடங்கள், கல்வெட்டுகள், கோவில்கள் போன்றவற்றை பாதுகாக்க பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதையறிந்த காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவ-மாணவிகள் மற்றும் பேராசியர்கள் உள்பட 70 பேர்கள் இந்த பகுதிக்கு வந்து அவற்றை பார்வையிட்டனர். அவர்களை சிவகங்கை தொல்புலம் அமைப்பைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், புலவர் காளிராசா, பேராசிரியர் ராஜேந்திரன், அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சுரேஷ் மற்றும் முத்துக்குமார் ராஜசேகர், மூர்த்தி ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
கல்லூரி மாணவ-மாணவிகள் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லேந்தல் கிராமம், இலந்தக்கரை தொல்மேடு ஆகிய இடங்களில் உள்ள முதுமக்கள் தாழி மற்றும் கல்வட்டங்கள் ஆகியவைகளை பார்வையிட்டனர். மேலும் முடிக்கரை கிராமத்தில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானசம்மந்தநல்லூர் என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிற பழமையான பெருமாள் மற்றும் சிவன் கற்கோவில் களையும், அங்குள்ள கல்வெட்டுகளையும் பார்வையிட்டு அது குறித்த தகவல்களை கேட்டறிந்தனர்.
இதேபோல் சிவகங்கையை அடுத்த திருமலையில் உள்ள 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கை மற்றும் தமிழ் பிராமி எழுத்துகளை பார்வையிட்டனர். இந்த பகுதிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசியர்கள் சார்பில் இந்த தொன்மையான பகுதியாக உள்ள நல்லேந்தல், இலந்தக்கரை ஆகிய வாழ்விடங்களை பாதுகாத்து விரைவில் கள ஆய்வு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கீழச்செவல்பட்டி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து, நகை-பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
நெற்குப்பை:
சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி அருகே உள்ளது அரிபுரம். இங்குள்ள டோல்கேட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் பாண்டியன் (வயது52) என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. விவசாய தொழில் செய்து வரும் பாண்டியனின் வீடு அந்த பகுதியில் தனியாக உள்ளது.
நேற்று இரவு பாண்டியன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மதகுபட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றார்.
இதனை யாரோ மர்ம மனிதர்கள் நோட்டமிட்டுள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்த பாண்டியன் குடும்பத்தினர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டிற்குள் யாரோ புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கீழச்செவல்பட்டி போலீசில் பாண்டியன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருப்பதாக பாண்டியன் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியின்போது நேற்று வெளிநாட்டினர் அணியும் அகெட் வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது கீழடி ஊராட்சி. இப்பகுதியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017 வரை 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று அதில் உறை கிணறுகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், தண்ணீர் தொட்டிகள், மருத்துவ குடுவைகள், ஈட்டி, பெண்கள் அணியும் ஆபரணங்கள், கத்தி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பொருட்கள் கிடைத்தன.
அதன் பின்னர் தமிழக அரசு சார்பில் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநில தொல்லியல்துறை சார்பில் 4-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதில் செம்பு நாணயங்கள், தாயக்கட்டைகள், கத்தி, உறை கிணறு என மொத்தம் 5,820 பொருட்கள் கிடைத்தன. அதன் பின்னர் ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 5-ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கின. இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களில் ஏராளமான குழிகள் தோண்டப்பட்டு தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதில் சிறிய பானை, ஓடுகள், பெரிய வட்டப்பானை, இரட்டை சுவர், நீளச்சுவர், சிறிய அடுப்புடைய குட்டி சுவர், கலயம், உறைகிணறு, பெரிய செங்கல் சுவர் உள்ளிட்டவை கிடைத்தன. மேலும் மனித எலும்பு துண்டுகள், பாசி மணிகள், பழங்கால எழுத்தாணி உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன. இதன் மூலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது தற்போது தெரிய வருகிறது. மேலும் விவசாயி முருகேசன் என்பவரது நிலத்தில் தோண்டும் போது 5 உறைகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உறை கிணற்றை மேலும் ஆராய்ச்சி செய்தபோது பூமிக்கடியில் கூடுதலாக மேலும் 2 உறைகள் இருப்பது தெரிய வந்தது. தற்போது 7 உறைகள் கொண்ட உறை கிணறாக அது உள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். கடந்த காலங்களில் நடைபெற்ற ஆய்வுகளில் உறை கிணறுகளில் உள்ள உறையின் உயரம் சுமார் 1 அடி தான் இருக்கும். ஆனால் தற்போது இந்த உறைகிணற்றின் உறையின் உயரம் 1½ அடியாக உள்ளது. மேலும் இந்த இடத்தில் குழிகள் தோண்டும்போது முதலில் 6 உறைகள் வரை சவடு மண் வந்துள்ளது. அதன் பின்னர் 7-வது உறையை கண்டுபிடிப்பதற்காக தோண்டும் போது அதில் ஆற்று மணல் வந்தது.
மேலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணுக்குள் புதைந்திருக்கும் இந்த உறையில் எந்தவித விரிசலும் இல்லாமல் புதிதாக உருவாக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறது. அதன் பின்னர் வெயில் பட்டவுடன் அந்த உறையில் விரிசல் ஏற்பட தொடங்குகிறது. பழங்காலத்தில் உள்ள இந்த உறைகளை மிக சிறந்த முறையில் அப்போதைய மக்கள் தயாரித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணமாக உள்ளது.
மேலும் போதகுரு என்பவரது நிலத்தில் ஏற்கனவே நீளச்சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அதை தோண்டி ஆராய்ச்சி செய்யும் போது அந்த சுவற்றிக்கு கீழே அகலமான நன்கு கனமான நிலையில் உள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் சேதாரமான நிலையில் சிறிய அளவிலான பானையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெளிநாட்டு மக்கள் அணியும் அகெட் என்று அழைக்கப்படும் அரிய வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அணிகலன்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகெட் வகை கல்லில் செய்யப்பட்டது என்று தெரிய வருகிறது. இதன் மூலம் பண்டைய தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நல்ல தொடர்பு இருந்துள்ளது என்றும் தெரிய வருகிறது. 7 உறைகள் கொண்ட இந்த உறைகிணறு சுமார் 8 அடி உயரம் உள்ளது எனவும், மேலும் தோண்டி ஆராய்ச்சி நடைபெறும்போது இன்னும் கூடுதலாக உறைகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் இன்று தொடங்குகிறது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூட்டு தொழில்கள் செய்து வரும் அனைவருக்கும் கிசான் கடன் அட்டை வழங்கும் முகாம் இன்று(புதன்கிழமை) தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த பணிகளுக்கும், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலுக்கான தீவனம் போன்ற மூலப்பொருள் வாங்குவதற்கும் மற்றும் நடைமுறை மூலதனம் பெறவும் கடனுதவி பெறலாம்.
மேலும் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த கூட்டுத்தொழில்களான கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் செய்து வரும் அனைவரும் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் கிசான் கடன் அட்டை விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அதை நேரடியாக வழங்கலாம். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளால் பரிசீலினை செய்யப்பட்டு கடன் அட்டை திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பயனாளிகளுக்கு கடன் அட்டை 2 வாரங்களில் வழங்கப்படும்.
இதற்கான சிறப்பு முகாம் இன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 9-ந்தேதி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 13-ந்தேதி கண்ணங்குடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், 14-ந்தேதி எஸ்.புதூர் சமுதாய கூடத்திலும், 16-ந்தேதி காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 19-ந் தேதி மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 20-ந்தேதி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 21-ந் தேதி தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், 22-ந் தேதி இளையான்குடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், 24-ந்தேதி திருப்புவனம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், 26-ந் தேதி சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27-ந்தேதி கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கியின் ஒருங்கிணைப்பில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் கலந்து கொள்ள உள்ளது. எனவே அந்தந்த பகுதியில் விவசாயிகள் மற்றும் அதை சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பஸ் மோதி பலியான கார் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நஷ்ட ஈடு வழங்க தேவகோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தேவகோட்டை:
தேவகோட்டை நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சரவணன் (வயது 35). கார் டிரைவரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தேவகோட்டை சிவன் கோவில் அருகே அவர் வரும் போது தேவகோட்டையில் இருந்து திருவாடானை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், விபத்தில் பலியான சரவணன் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்து 800 இழப்பீட்டை 7 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.