என் மலர்

  செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  கீழச்செவல்பட்டி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீழச்செவல்பட்டி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து, நகை-பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
  நெற்குப்பை:

  சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி அருகே உள்ளது அரிபுரம். இங்குள்ள டோல்கேட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் பாண்டியன் (வயது52) என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. விவசாய தொழில் செய்து வரும் பாண்டியனின் வீடு அந்த பகுதியில் தனியாக உள்ளது.

  நேற்று இரவு பாண்டியன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மதகுபட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

  இதனை யாரோ மர்ம மனிதர்கள் நோட்டமிட்டுள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

  திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்த பாண்டியன் குடும்பத்தினர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டிற்குள் யாரோ புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

  இதுகுறித்து கீழச்செவல்பட்டி போலீசில் பாண்டியன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருப்பதாக பாண்டியன் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×