என் மலர்
சிவகங்கை
- காரைக்குடியில் மருத்துவர்கள் தின குடும்ப விழா நடந்தது.
- இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை சார்பில் நடந்தது.
காரைக்குடி
இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை சார்பில் மருத்துவர்கள் குடும்ப விழா காரைக்குடியில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கி மருத்துவதுறையில் சிறப்பாக பணிபுரிந்து கொண்டிருக்கும் 33 மூத்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ஜெயலால், கனக சபாபதி, சிங்காரவேல், ஸ்ரீதர், ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி கிளை சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை சுற்றுவட்டார பகுதிகளில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் நட முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக முதல் மரக்கன்றை இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளை தலைவர் சந்திரமோகன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் வழங்கினார்.காரைக்குடி கே.எம்.சி கிளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்தித்து பள்ளி அனுபவங்களையும், குடும்ப வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
- இந்த நிகழ்வில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தற்போது சிவகங்கை வட்டாட்சியராகவும், திருச்சியில் மருத்துவராக உள்ள சுஜா ஜெயமலர் உள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1982-89 வரை மாணவிகளாக படித்தவர்கள் ஒன்று கூடினர். இதை கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளி அனுபவங்களையும், குடும்ப வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இதில் பலர் அரசு அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிகழ்வை பள்ளியில் படித்த முன்னாள் மாணவியும் தற்போது சிவகங்கை வட்டாட்சியராகவும் உள்ள ஜெயந்தி, திருச்சியில் மருத்துவராக உள்ள சுஜா ஜெயமலர், மதுரை ரெய்சல் செல்வி, குழந்தைராணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
- அம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
- இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 7-ம் நாளான இன்று கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக விநாயகர் கோவிலில் குழுமிய பக்தர்கள் அங்கிருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மண்சுவர் வீடுகளில் தங்கியிருப்பவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொ ள்ள வேண்டிய முன்னெ ச்சாரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பருவமழை காலத்தின் போது நீர்நிலைகளில் சிறிது உடைப்பு ஏற்பட்டாலும் அதனை உடனடியாக சரி செய்திட வேண்டும். பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக அந்த இடத்திலிருந்து மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
ஒவ்வொரு கிராமத்தி ற்கும் முதல்நிலை மீட்பாள ர்களாக குறைந்தது 5 தன்னார்வலர்களை கண்டறிந்து அவர்க ளின் பட்டியலை வைத்திருக்க வேண்டும். மண்சுவர் வீடுகளில் தங்கியிருப்பவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும். நீர்வள ஆதார அமைப்பினர் நீர் செல்லும் பாதைகளுக்கு மேல் சாலை அமைத்திருந்தால் பாலங்களில் அடைப்பு இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதென கண்டறியப்படும் கண்மா ய்களில் மணல் மூட்டைகள், சவுக்கு மூட்டைகளை தேவையான அளவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
சாலையில் சேதம் ஏற்படும் பட்சத்தில் அவற்றிற்கு மாற்று வழி செய்திட ஜே.சி.பி., மின்அறுவை எந்திரங்கள், வாகனங்கள் மற்றும் பணியாளர்களை நெடுஞ்சாலைத்துறையினர் தயாராக வைத்திருக்க வேண்டும்.
அலுவலர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பொதுமக்கள் தென்மேற்கு பருவமழையி னால் பாதிப்பு அடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) கண்ணகி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, தாட்கோ மேலாளர் முத்துச்செல்வி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த வழக்கில் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
- குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கானது சிவகங்கை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பளித்தது.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.
- இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்த பசு திருவிழா தொடங்கியது.
திருவிழா தொடக்கமாக ஆனந்தவல்லி அம்பாள் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்துலா லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. அதன் பின் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் கலச நீராலும் அபிஷேகம் நடத்தி கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்வு களை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வ சிகாமணி என்ற சக்கரைபட்டர் ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.
கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஆனந்த வல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்த ருளினார். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து அதன் பின்னர் மண்டகப்படி தாரர்களின் பூஜைகள் முடிந்து வீதி வருதல் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆடித்தபசு விழா வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது 10-ந்தேதி சந்தன காப்பு உற்சவத்து டன் இந்தாண்டு அடித்தபசு திருவிழா நிறைவு பெறு கிறது.
ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது.
- பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அஸ்மத்து பாத்திமா வரவேற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் "இயற்கை சீற்றமும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும்" என்ற தலைப்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மானாமதுரை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர், குமரேசன் கலந்துகொண்டு இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் நர்கீஸ் பேகம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேக் அப்துல்லா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 300 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
- ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கான வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
- மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இந்த குழுவில்உறுப்பினராக உள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர்ஊராட்சியில்முகாம் வாழ் தமிழர்களுக்கான குடியிருப்புகள் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவதற்கெனஅரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவனங்களின்
பங்களிப்புடன் ஆய்வு மேற்கொண்டு, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இந்த குழுவில்உறுப்பினராக உள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களைச் சார்ந்த 3,242 பேர் உள்ளனர். அதில் ஒக்கூர்ஊராட்சியில் 236 குடும்பங்களுக்கு புதிதாக ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் கட்டித்தர தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த பணிகளை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், இன்றையதினம் முகாம் வாழ் தமிழர்களுக்கானகுடியிருப்புக்கள்கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள 5 பகுதிகளிலும் மொத்தம் 372 வீடுகள் கட்டித்தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மானா–மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளாபாலச்சந்திரன், ஊரக வளர்ச்சி
துறை செயற்பொறி யாளர் சிவராணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், சாந்தாசகாயராணி, ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமாஅருணாசலம், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதசுந்தரம், ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சீதளி குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
- இந்த கோரிக்கைகள் அைனத்தும் நிறைவேற்றப்படும் என்று பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதி அளித்தார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கோகிலாராணி தலைமையில் நடந்தது. துணை தலைவர் கான் முகமது முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவு-செலவு கணக்கு அறிக்கையை கவுன்சிலர்களுக்கு வழங்கி வாசித்தார்.
தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் பிளாசா ராஜேஸ்வரி சேகர், சாந்தி சோமசுந்தரம் ஆகியோர் தலைவரிடம் மனு அளித்தனர். அதில் பொதுமக்கள் சுகாதாரம் கருதி சீதளி குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் 1-வது வார்டு கவுன்சிலர் ராபின் சையது திருப்பத்தூரில் அம்பேத்கர் சிலை வைக்க கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைகள் அைனத்தும் நிறைவேற்றப்படும் என்று பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதி அளித்தார்.
இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஷமீம் நவாஸ், ஏகாம்பாள் கணேசன், ரெமி சுலைமான் பாதுஷா, நாகமீனாள் திருஞானசம்பந்தம், அபுதாஹிர், சரண்யா ஹரி, சீனிவாசன், நேரு, சரவணன், கண்ணன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ராமர்-சீதையை இணைத்து வைத்தவர் அனுமன்.
- அனுமனை வணங்குவதால் ஆனந்தமான வாழ்வு அமையும்.
காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடியில் உள்ள சிவ ஆஞ்சநேயர் கோவிலில் 17-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஜோதிடக்கலைமணி சிவல்புரி சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலப்பனையூர் கார்த்திக் குருக்கள் திருவிளக்கு பூஜையை நடத்தினார்.
காரைக்குடி மாணிக்கம் முன்னிலை வகித்தார். அலர்மேலுமங்கை சீனிவாசன் இறைவணக்கம் பாடினார். செட்டிநாடு கிரிவலக்குழு தலைவர் சிவல்புரிசிங்காரம் "சொல்லின் செல்வன் அனுமன்" என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- அனுமனை வணங்குவதால் ஆனந்தமான வாழ்வு அமையும். பிணி தீர்க்கும் ஆற்றல் அனுமன் வழிபாட்டிற்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் பிரிந்தவரை இணைத்து வைக்கும் ஆற்றலும் உண்டு. ஆரோக்கிய தொல்லையில் அவதிப்படுபவர்கள் அனுமனை வழிபட்டு மருத்துவ ஆலோசனை பெற்றால் விரைவில் நோய் குணமாகும்.
ராமர்-சீதையை இணைத்து வைத்தவர் அனுமன். எனவே தம்பதியர் கருத்து வேறுபாடு அகலவும், பிரிந்த தம்பதியர் பிரச்சினைகள் தீர்ந்து இணையவும் அனுமன் வழிபாடு தேவை.
குழந்தைகளுக்கு பேச்சாற்றல் சிறப்பாக அமைய யோகபலம் பெற்ற நாளில் அனுமன் தலங்களுக்கு சென்று வழிபடலாம். இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இதுபோன்ற விளக்கு பூஜையில் கலந்து கொள்வது நல்லது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சிவல்புரி சிங்காரத்திற்கு, கோவில் நிர்வாகி முத்துராமன் பொன்னாடை அணிவித்தார். விழாவில் கோனாபட்டு அழகு, ஆலத்துப்பட்டி ஷர்மிளா பாலமுருகன், ஆத்தங்குடி கார்த்திக், ஸ்ரீராம், தாரகை ஸ்ரீ, அரசி, மதுரை சீதாலட்சுமி, சூரை கார்த்திகா, வேந்தன்பட்டி சீனிவாசன், காரை ராமநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி முத்துராமன், செல்வி ஆகியோர் செய்திருந்தனர். இதைதொடர்ந்து வள்ளி திருமணம் நாடகமும், மாட்டுவண்டி பந்தயமும் நடந்தது.
- மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தேசியக்கொடி தயாராகும் பணி நடந்து வருகிறது.
- சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை
75-வது சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது.
இதற்கு தேவையான தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணிகள் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சக்கந்தியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இய–க்கத்தின் சார்பில், வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறுகையில், இந்தியா சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை முன்னிட்டு, சுதந்திர தினவிழா, "சுதந்திர தின அமுதப்பெருவிழாவாக'' கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடியினை ஏற்றி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கொண்டாட அரசு அறிவுறுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பின் மூலம் தேசியக்கொடி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
36 மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் 359 மின் மோட்டார் தையல் எந்திரங்கள் மூலம் ஊரகப்பகுதிகளுக்கு 4 லட்சம் தேசியக்கொடிகளும், நகராட்சிப் பகுதிகளுக்கு 1 லட்சம் தேசியக்கொடிகளும் என மொத்தம் 5 லட்சம் தேசியக்கொடிகள் தயாரித்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊரகப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு உள்ளாட்சி மன்ற நிர்வாகத்தின் மூலமாகவும், நகராட்சி, பேரூராட்சி பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அலுவலக மூலமாகவும் தேசியக்கொடிகள் விநியோகிக்கப்பட உள்ளது.
தேசியக்கொடியின் மீது எந்த வாசகமும் இடம்பெறாமல் தூய்மையான முழு அளவில் உள்ள கொடிகளை ஏற்ற வேண்டும். 15-ந் தேதிக்கு பிறகு தேசியக்கொடியினை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். கீழே எறியவோ, வேறு எந்தப்பயன்பாட்டிற்கோ பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
- மருத்துவ மாணவர்களை உருவாக்கும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளிகள்.
- ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.
காரைக்குடி
காரைக்குடி-மானகிரியில் 2010-ம் ஆண்டு துவக்கப்பட்ட செட்டி நாடு பப்ளிக் பள்ளியானது இயற்கையான எழில்மிகு அமைதியான சூழலில் மாணவர் கற்றலுக்கு ஏற்ற வகையில் பாரம்பரியம் மிக்க சமூக மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கும் பெயரைக் கொண்டு சிறப்பு மிக்க பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.
தனது 10-ம் ஆண்டில் காலடி வைத்து வெற்றிகரமாக அனைத்துத் துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கிக் கொண்டி ருக்கிறது. காரைக்குடியில் கல்விக்கு பெருமை சேர்த்த வள்ளல் அழகப்பரின் கல்விச்சேவையை மனதில் கொண்டு கற்றவர் போற்றும்படி, கேட்டவர் வியக்கும்படி மிகச்சிறந்த முறையில் சீரிய கல்விப் பணியாற்றி திறம்பட காரைக்குடி, மானகிரியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியை நிர்வகித்து வருகின்றார். ரோட்டேரியன் குமரேசன்.
பிரம்மாண்ட கட்டமைப்பு வசதியுடன் AC வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் என ஒரு பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் ISO 9001-2015 தரச்சான்று பெற்றுள்ளது. ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.
பள்ளிக்கு வந்து செல்ல அனைத்து இடங்களுக்கும் நவீன AC பேருந்து வசதி உள்ளதால் மாணவர்கள் தங்கள் பயண நேரத்தையும் மிக மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர்.பள்ளியிலேயே காலையும், மதியமும் அறுசுவை உணவு வகைகள் வழங்கப்படுகிறது. உண்ணும் பழக்க வழக்கங்களும் கற்றுத்தரப்படுகிறது.
வாரந்தோறும் குழந்தைகள் நல மருத்துவரால் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுகிறது. மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நிரந்தர செவிலியர் சேவையும் பள்ளியிலேயே தகுந்த முறையில் கொடுக்கப்படுகிறது.
செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் பலர் NEET தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரி பயின்று வருகின்றனர் என்பது பள்ளியின் சிறப்பம்சமாகும். NEET தேர்வு மையமாகவும் செட்டி நாடு பப்ளிக் பள்ளி திகழ்ந்து வருகிறது.
செட்டிநாடு பப்ளிக் பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் International School Award கிடைத்துள்ளது பெருமைக்குரியது. செட்டிநாடு பப்ளிக் பள்ளிக்கு 2022-2025 ஆண்டிற்கான International Dimension School (IDS) சான்றிதழை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் மிகுந்த நட்புணர்வுடன் சிறந்த கற்பிக்கும் திறன் மிக்கவர்களையும் இருப்பது இப்பள்ளியின் சிறப்பு. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறன்மிக்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு நோக்கத்துடன் கல்வி கற்பித்து வருகின்றனர். கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை மாணவ-மாணவிகளை உருவாக்கி வருகிறது செட்டிநாடு பப்ளிக் பள்ளி.






