search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் மாங்குடி எம்.எல்.ஏ. பேசினார்.



    காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தற்போதைய மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி 5 விளக்கு அருகில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், இந்திய மக்கள் கொரோனா பேரிடர் கால துயரத்தை தாங்கி வலியோடு வாழ்ந்து வரும் காலத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தியது.தற்போது அதற்கும்மேலாக அரிசி, பருப்பு, எண்ணெய், பால், தயிர், பென்சில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளது.

    ஏழை, எளிய மக்களின் மீது வரிச்சுமைகளை விதித்து விட்டு பெரு முத லாளிகளுக்கு மானியம், வரிவிலக்கு அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோர் உலகமே பொருளாதார நெருக்கடி யில் சிக்கியபோதும் விலை வாசியை கட்டுக்குள் வைத்து பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தி மக்கள் நலனை பாதுகாத்தனர்.

    தற்போதைய மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. மக்களை வதைக்கும் விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும்.அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாவட்ட கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி இமய மடோனா, கவுன்சிலர்கள் அமுதா, ரத்தினம், அஞ்சலி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.

    Next Story
    ×